எபிரெயர், ஆறாம் அதிகாரம் #2 57-0908E 1. …அவருடைய விலையேறப்பெற்ற வார்த்தையை ஆராயும்படிக்கு… நான் சற்று முன்னர் உள்ளே வந்தபோது, நான் இரண்டு வேதாகமங்களை எடுத்துக் கொண்டு வந்தேன். இங்கே பின்னால் அமர்ந்துள்ள ஒரு பெண்மணியோடு எனக்கு ஒரு சிறு பேட்டி இருந்தது. நான் இந்த இரண்டு வேதாகமங்களிலிருந்து எடுத்து பிரசங்கித்திருப்பதனால், இது ஒரு நல்ல அழகான பாடப்பொருளாய் இருக்க வேண்டியதாயுள்ளது என்று நான் அந்தப் பெண்மணியினிடத்தில் கூறியிருந்தேன். ஆனால் இது ஒரு மூல கிரேக்க வேதாகமமாயுள்ளது, எனவே நான் இதிலிருந்து இன்றிரவு ஒரு காரியத்தை வாசிக்க விரும்புகிறேன், இது ஒரு—இது ஒரு…இது வார்த்தைக்கு வார்த்தை மூல கிரேக்க பாஷையிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிப் பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இது எனக்கு தொடர்ந்து மிகவும் உதவியாகவே இருந்து வருகிறது. நான் இதிலிருந்து ஒரு காரியத்தை அப்படியே வாசிக்க விரும்புகிறேன், ஏனென்றால் நாம் இப்பொழுது இந்த எபிரெயப் புத்தகத்தை ஆய்ந்து படித்துக்கொண்டிருக்கிறோம், எனவே நாம் இப்பொழுது உண்மையாகவே ஆழமான பொருள்களுக்குள் வந்து கொண்டிருக்கிறோம். 219 நான் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், சகோதரன் நெவிலிடம், “ஜனங்கள் தங்களுடையத் தலையைச் சொரிந்து, ‘நாங்கள் அதை விசுவாசிக்கிறதில்லை’ என்று கூறின அந்த பாகத்திற்குள்ளாகவே நாம் சென்றுகொண்டிருக்கிறோம்” என்று கூறினேன். புரிகிறதா? அந்த விதமான மாதிரிக்குள்ளாகவே நாம் செல்கிறோம். அங்குதான் நாம் அதை விரும்புகிறோம். 220 யாரோ ஒரு ஊழியக்காரர் என்னிடத்தில் கூறினார், அதாவது அவர், “நல்லது, ஆனால் இந்த பாடத்தில் ஏராளமானோர் தங்களுடைய தலையைச் சொரிந்துகொள்வார்கள் என்று நான் யூகிக்கிறேன்” என்று கூறினார். 221 அப்பொழுது நான், “அந்த விதமாகத்தான் நாங்கள் அதைப் பிரசங்கிக்க விரும்புகிறோம்” என்றேன். புரிகிறதா? 222 வேதம் ஒரு பொருளை மாத்திரமே உடையதாயிருக்க முடியும். அது இரண்டு விதமான பொருள்களை உடையதாயிருக்க முடியாது. வேதாகமத்தின் ஒரு பாகம் ஒரு காரியத்தைக் கூற, வேதாகமத்தின் மற்றொரு பாகம் மற்றொன்றைக் கூறுமேயானால், அப்பொழுது அது தவறாகும். புரிகிறதா? அது எல்லா வழியினூடாகவும், ஒரேக் காரியத்தையேக் கூற வேண்டும். ஆனால் வேதாகம ஆய்வில், “இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினார்” என்பது நினைவிருகட்டும், ஏனென்றால் இது ஒரு ஆவிக்குரிய புத்தகமாயுள்ளது. 223 இது ஒரு மேற்கத்திய புத்தகமல்ல. இது ஒரு கிழக்கத்திய புத்தகம் ஆகும். இதை ஒரே ஒருவர் மாத்திரமே வியாக்கியானிக்க முடியும், அது பரிசுத்த ஆவியானவராகும். நாம் ஒவ்வொருவரும், “நாம் அதில் என்ன விசுவாசிக்கிறோம் என்பதை பரிசுத்த ஆவியானவரே நமக்குக் கூறிக்கொண்டிருக்கிறார்” என்பதையே கூற விரும்புகிறோம் என்பதை நான் அறிவேன். இப்பொழுது ஒவ்வொரு வேதவாக்கியமும் முரண்பாடின்றி ஒரேவிதமாக அமைந்திருக்குமானால், அப்பொழுது அது பரிசுத்த ஆவியாயுள்ளது. அது சரிவர பொருத்தமாய் அமைந்திராமல், இங்கே ஒரு கருத்து வேறுபாடும், இங்கு சற்று கருத்து வேறுபாடும் இருக்குமாயின், அப்பொழுது நம்முடைய நம்பிக்கையில் ஏதோ ஒரு காரியம் தவறாய் உள்ளது. ஓ, அது ஒரு ஆச்சரியமான புத்தமாயுள்ளது. 224 இப்பொழுது, நாம் ஆய்ந்துப் படித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் இதைச் செய்யும்படி நான் விரும்புகிறேன். இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், நாங்கள் ஓயோமிங் என்ற இடத்திற்கு அதிகாலைப் புறப்பட்டுச் செல்ல வேண்டியதாயுள்ளது. எனவே எங்களுக்காக ஜெபியுங்கள். அடுத்த வாரம் சகோதரன் கிரஹாம் ஸ்நெல்லிங், இங்கே,…அவர் இங்கிருக்கிறார். நான் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர் அவர் அறிவிப்புச் செய்ததைக் கேட்டேன், இந்த சபை அவருடைய எழுப்புதல் கூட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளது. தேவன் அவருக்கு அதிகமான, அளவுக்கதிகமான, பெரிய எழுப்புதலை அளிக்கும்படி நாங்கள் ஜெபித்துக்கொண்டிருக்கிறோம். சகோதரன் கிரஹாம் அவர்கள் இங்கே சார்லஸ் டவுனில் உள்ள சகோதரன்…சகோதரன் ஜூனியர் கேஷ் அவர்களுக்காக ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்தினார், அப்பொழுது அங்கே நூறு பேர் கிறிஸ்துவை ஏற்று மனமாற்றமடைந்தனர் என்று நான் நினைக்கிறேன். [யாரோ ஒருவர், “எண்பத்தி நான்கு” என்கிறார்.—ஆசி.] எண்பத்தி நான்கு பேர் கிறிஸ்துவை ஏற்று மனமாற்றமடைந்திருந்தனர். ஆகையால் அதற்காக நாம் தேவனுக்குத் துதி செலுத்துகிறோம். ஆனால் இங்கே இந்த இடத்தில் ஐநூற்று எண்பத்தி நான்கு பேர் கிறிஸ்துவை ஏற்று மனமாற்றமடைவார்கள் என்று நாம் நம்புகிறோம். 225 சகோதரன் கிரஹாம் என்னை இன்று காலைச் சந்தித்து, “இப்பொழுது சகோதரன் பில் அவர்களே, நான் இங்கே இந்த கூடாரத்திற்கு எதிராக மற்றொரு ஊழியத்தை துவங்குவதற்காக இங்கு இல்லை என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்பதை நான் நிச்சயம் நம்புகிறேன், ஏனென்றால் நான் இந்த கூடாரத்தின் ஒரு பாகமாக இருக்கிறேன்” என்று கூறினார். அவர் இங்கிருந்து…ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்த வேண்டுமென்பதை அவர் தன்னுடைய இருதயத்தில் உணருகிறார், அதைச் செய்யும்படி கர்த்தர் அவரை வழிநடத்துகிறார். அவர் கிறிஸ்துவை ஏற்று மனமாற்றமடைகிறவர்களை அழைத்து, “இங்கே ஒரு சொந்த சபை உள்ளது, எனவே மனமாறிய நீங்கள் இந்த சபைக்குச் செல்ல விரும்பினால், அங்கு செல்லுங்கள்” என்று அங்கு திரளாக அனுப்புகிறார். 226 கிறிஸ்தவர்களாயிருக்கின்றபடியால், நம்மால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையோடும் அவருக்கு ஆதரவளிப்பது நம்முடைய கடமையாயுள்ளது. சகோதரன் கிரஹாம் அவர்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. எனவே தேவனுடைய இராஜ்ஜியத்திற்காக இழக்கப்பட்ட ஆத்துமாக்களுக்காக, நம்மால் எந்த வழியிலாவது முழு ஒத்துழைப்போடு அவருக்கு உதவும்படிக்கு இந்த சபையிலிருந்து முழு அனுமதியோடும் இங்கே சகோதரன் கிரஹாம் அவர்களுடைய கூட்டத்திற்கு வரும்படி நீங்கள் ஒவ்வொருவரும் உள்ளன்போடு அழைக்கப்படுகிறீர்கள். 227 சகோதரன் கிரஹாம், கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்களுக்கு பெரிய கூட்டங்களை அளிப்பாராக. அவர் எப்பொழுது முடிக்கப் போகிறார் என்று அவருக்குத் தெரியாது. அவர் ஆரம்பித்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் சகோதரன் கிரஹாம் என்னைப்போன்று அதில் அநேக இன்பங்களையும், இடர்பாடுகளையும் உடையவராயிருக்கிறார். அந்தவிதமாகவே வாழ்க்கை ஓடுகிறது. நீங்கள் இடர்பாடுகளினூடாக சென்றப் பிறகு, அது உங்களுக்கு ஏற்படுகிற இன்பங்களினால் உற்சாகப்படுத்துகிறது. ஒரு மனிதன் வீழ்ச்சியடைந்து அங்கு கீழே கிடப்பானேயானால், அவன் ஒரு கோழையாயிருக்கிறான். ஆனால் ஒரு மனிதன் எழுந்திருக்க முயற்ச்சிக்கும்போதே எனக்கு நம்பிக்கை உண்டாகிறது. அது உண்மையே. நான் என்ன பொருட்படுத்திக் கூறுகிறேன் என்பதை உங்களால் விளங்கிக் கொள்ள முடியும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். இப்பொழுது வருகின்றதான இந்த வாரக் கூட்டத்தை மறந்துவிடாதீர்கள். 228 இப்பொழுது, இந்த எபிரெயப் புத்தகத்தில், இன்றிரவு நாம் பின்னணியை எடுத்துக் கூறப் போவதில்லை. 229 இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிறு, சகோதரன் நெவில் அறிவிப்பார். எனவே நாம் அடுத்த ஞாயிற்று கிழமை கூட்டத்திற்காக நாம் வரவேண்டுமா என்பதை இங்குள்ள சகோதரன் காக்ஸ் அல்லது வேறு சிலர் அவர் அதை அறிந்துகொள்ளும்படிச் செய்வார்கள். அவர் அதை வானொலியில் அறிவிப்பார். நாம்…நீங்கள் எல்லோரும் மற்றும் உங்களுடைய அண்டைவீட்டார் யாவரும் இப்பொழுது அவருடைய வானொலி நிகழ்ச்சியை கேட்டும்படி அழைப்பு விடுக்கிறோம். நான் உண்மையாகவே சகோதரன் நெவில் அவர்களின் நால்வர் குழு பாடுவதையும், அவர்களுடைய பிரசங்கத்தையும் கேட்பதற்கு மகிழ்ச்சியடைகிறேன். அவர் இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என்ற காரனத்தினால் நான் அதைக் கூறவில்லை. நான் அதை அவ்வாறு கூறுவேனேயானால், அப்பொழுது நான் அதை இருதயத்திலிருந்து பொருட்படுத்திக் கூறவில்லை என்பதாகும், அப்பொழுது நான் ஒரு மாய்மாலக்காரனாயிருப்பேன். அது உண்மை. அப்படியானால் நான் மனந்திரும்ப வேண்டும். ஆனால் நான் அதைப் பொருளுணர்ந்து கூறுகிறேன். அவர் மரித்தப் பின்பு நான் அவருக்கு பெரிய மலர் வளையம் சூட்டுவதை விட இப்பொழுது அவருக்கு ஒரு சிறு ரோஜா மலர் அரும்பினைத் தரவே விரும்புகிறேன். 230 ஒரு சமயம் நான் வாசலிலிருந்து அங்கே வெளியே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பெண்மணி அருகில் நடந்து வந்து, “ஓ, சகோதரன் பிரான்ஹாம், நான் எப்படியாய் அந்தச் செய்தியைக் கேட்டு மகிழ்ந்தேன்.” என்று கூறினாள். 231 அதற்கு நான், “உங்களுக்கு நன்றி,” என்றேன். அது என்னை நல்லவிதமாக உணரச் செய்தது. 232 வேறுயாரோ ஒருவர் என்னருகில் வந்து, “சகோதரன் பிரான்ஹாம், நான் அந்த செய்தியைக் கேட்டு மகிழ்ந்தேன்” என்றார். 233 அதற்கும் நான், “உங்களுக்கு நன்றி” என்றேன். 234 தேசத்தின் வடபாகத்திலிருந்து இங்கே வந்திருக்கிற ஒரு சிறு பிரசங்கியார் அங்கிருந்தார். அவர், “தேவனுக்கு ஸ்தோத்திரம், ஜனங்கள் அதைப்போன்று என்பேரில் புகழ்ச்சியாய் பேசுவதை நான் விரும்புகிறதில்லை” என்றார். 235 அப்பொழுது நான், “நான் அதைக் கேட்க விரும்புகிறேன்” என்று கூறினேன். மேலும் நான், “உங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு வித்தியாசம்தான் உண்டு. நான் அதைக் குறித்து நேர்மையுள்ளவனாக இருக்கிறேன்” என்றேன். அது உண்மை. நாம் எல்லோருமே நம்மைக் குறித்துக் கூறப்படுகின்ற அருமையான வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறோம். எனவே அதைக் குறித்த அருமையான வார்த்தைகளைக் கூறுவது அருமையாயுள்ளது என்றே நான்—நான் எண்ணுகிறேன். உங்களைக் குறித்து அருமையான வார்த்தைகளை யாராவது கூறவேண்டும் என்று நீங்கள் விரும்பினால், நீங்கள் மற்றவர்களைக் குறித்து அருமையான வார்தைகளைக் கூறுங்கள். அந்தவிதமாகவே அதைச் செய்ய வேண்டும், அப்பொழுதே நீங்கள் உங்களால் ஒவ்வொருவரைப் பற்றியும் கூற முடிந்த மிக அருமையான காரியங்களையே எப்பொழுதும் கூறுவீர்கள். அதுவே வாழ்க்கைச் சக்கரத்தை நல்ல முறையில் சுழலச் செய்கிறது. 236 இப்பொழுது கர்த்தருக்குச் சித்தமானால், அடுத்த ஞாயிற்றுக் கிழமை நாம் இந்த மகத்தான தேவனுடைய இரகசியங்களுக்குள் மிக மிக ஆழமாகச் சென்று பார்க்கப்போகிறோம் என்பதே இதைக் குறித்த என்னுடைய கருத்தாய் உள்ளது. நாம் மெல்கிசேதேக்கு என்ற பாடத்திற்குள்ளாக சென்று, அவர் யாராயிருந்தார் என்றும், அவர் எங்கிருந்து வந்தார் என்றும், அவர் எங்கே சென்றார் என்றும், அவருக்கு என்ன சம்பவித்தது என்றும், மற்றும் மெல்கிசேதேக்கைக் குறித்த எல்லாவற்றையுமே பார்க்கப் போகிறோம். 237 இப்பொழுது, கடந்த புதன்கிழமை இரவு, சகோதரன் நெவில் அவர்கள் அதிகாரத்தின் முடிவில் கர்த்தராகிய இயேசுவின் ஒப்புயர்வற்ற தெய்வீகத்தன்மை மற்றும் ஆசாரியத்துவத்தின் பேரிலும் பேசினார். எபிரெய நிருபத்தின் துவக்கத்திலோ, “பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்த கடைசி நாட்களில் குமாரன் கிறிஸ்து இயேசு மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்,” என்றே ஆரம்பிக்கிறது. 238 அதன்பின்னர் அவன் தொடர்ந்து எழுதிக் கொண்டே வந்து, அவர் யாராயிருந்தார் என்ற மாதிரியைக் கூறத் துவங்கி, பின்னர் 5-ம், அதிகாரத்திற்கு, 5-ம் அதிகாரத்திற்கு முடிவிலே அவரைக் கொண்டு வருகிறான். 239 அதன்பின்னர் 6-வது அதிகாரத்தின் துவக்கத்திலோ, நாம் இதை இந்தக் காலையில் நம்முடைய பாடத்தில் கற்றறிந்தோம். ஆகையால், கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு…பூரணராகும்படி கடந்து போவோமாக. 240 எத்தனை பேர் பூரணராகுதல் என்பதன் பேரிலான செய்தியைக் கேட்டு மகிழ்ந்தீர்கள்? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] “பூரணராகும்படி கடந்து போவோமாக.” அதுவே இந்தக் காலையில் எபிரெயர் 6-வது அதிகாரத்தில் உள்ள நம்முடைய செய்தியாயிருந்தது. 241 இப்பொழுது நாம் அந்த உண்மையான பாகத்திற்கு சென்று துவங்கும்படியாக அந்த இடத்திற்குள்ளாக செல்ல அணுகிக் கொண்டிருக்கிறோம். ஓ, நாம் யாவரும் இந்தக் காரியங்களின் பேரில், அதாவது கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையின் பேரிலும்; அவர் தேவகுமாரனாயிருப்பதன் பேரிலும்; அவர் எப்படி தேவனோடிருந்தார் என்பதன் பேரிலும்; தேவன் எப்படி அவரோடிருந்தார் என்பதன் பேரிலும்; எப்படி அவர் தேவனுக்குள் இருந்தார் என்றும், எப்படி தேவன் அவருக்குள் இருந்தார் என்பது போன்றவைகளின் பேரில் ஒத்துப் போக முடியும். நாம் யாவரும் அதன்பேரில் ஒத்துப்போகிறோம். ஆனால் இப்பொழுது, இங்கிருந்து நாம் எப்படி ஒத்துப்போகப் போகிறோம் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆகையால் அது என்னவாயிருந்தாலும், இன்னும் ஒரு சில இரவுகளில், நீங்கள் அதைக் குறித்து என்னக் கருதுகிறீர்கள் என்பதைக் குறித்து எனக்கு ஒரு சிறு குறிப்பு எழுதி, என்னிடத்தில் கூறும்படியான ஒரு வாய்ப்பினை நாங்கள் உங்களுக்கு அளிக்க போகிறோம். 242 அப்பொழுது நான் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியதாயிருக்கும். என்னால் அவைகளுக்குப் பதிலளிக்க முடியவில்லையென்றால், அப்பொழுது நான், “சகோதரன் நெவில், நீர் அதைக் குறித்து என்ன நினைக்கிறீர்?” என்று கேட்பேன். பின்னர் நான், “அதோ அவர் இருக்கிறார். அவர் அதற்குப் பதிலளிக்கட்டும்” என்பேன். [சகோதரன் நெவில், “அப்பொழுது நான் கிரேக்க வேதாகமத்திலிருந்து வாசித்துக் காண்பிப்பேன்” என்கிறார்.—ஆசி.] அப்பொழுது அவர் மூல கிரேக்க வேதாகமத்திலிருந்து வாசித்துக் காண்பிக்கப் போகிறார். நானும் கூட அதை வாசிக்கும்படியான நேரமாகவே இது உள்ளது என்று நான் நினைக்கிறேன். 243 ஆனால், இப்பொழுது நாம் அமர்ந்து, உணமையான உத்தமத்தோடிருந்தால் நலமாயிருக்கும், ஏனென்றால் நாம் உண்மையாகவே ஒரு நோக்கத்திற்காகவே வருகிறோம், அது கற்றுக்கொள்வதற்காகவேயாகும். நானும் கூட கற்றுக் கொள்ள விரும்புகிறேன். வேதத்திலோ, “அது…வேதத்திலுள்ள எந்த தீர்க்கதரிசனமும் சுய தோற்றமான பொருளையுடையதாயிராது” என்றே எழுதப்பட்டுள்ளது. அது வேதவாக்கியத்தை வேதவாக்கியமே வியாக்கியானிக்க வேண்டும் என்று பொருள்படுத்துகிறது. புரிகிறதா? ஒவ்வொரு வேதவாக்கியமும் மற்ற வேதவாக்கியத்தை வியாக்கியானிக்க வேண்டும், அது முழு வேதாகமத்தினூடாகவும் ஒரு மகத்தான காரியத்தை உண்டு பண்ணும்படியாயிருக்க வேண்டும். காரணம், தேவனால் மாற முடியாது, ஏனென்றால் அவர் மாறமுடியாத தேவனாயிருக்கிறார். 244 இப்பொழுது, “விட்டு…” ஆகையால், கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு…பூரணராகும்படி கடந்து போவோமாக. 245 பவுல் கூறுகிற அந்தக் காரியங்கள் எனக்குப் பிடிக்கும். பவுல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் தரித்திருக்க விரும்பின ஒரு நபராய் ஒருபோதும் இருந்ததேயில்லை. அவன் ஆழமாய் செல்லவே விரும்பினான். ஒரு முறை வேதத்தில், அவன், “நான், பின்னானவைகளை மறந்து, பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்கான இலக்கை நோக்கித் தொடருகிறேன்” என்றான். பார்த்தீர்களா? அவன் இலக்கை நோக்கித் தொடருகிறான். 246 இங்கே அவன் கூறினதோ; இப்பொழுது கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை மறந்து (அவர் யாராயிருந்தார், அவர் என்னவாயிருந்தார்)…பூரணராகும்படி கடந்து போவோமாக. 247 இப்பொழுது நாம் முதலில், “நாம் பூரண சற்குணராயிருக்க முடியுமா?” என்று நாம் கண்டறிய விரும்பினோம். இயேசு, “தேவன் பூரண சற்குணராயிருந்தது போல நாமும் இருக்க வேண்டும்” என்று மத்தேயு 5:28-ல் கூறினதை இந்தக் காலையில் வேதவாக்கியங்களில் நாம் கண்டறிந்தோம். அவ்வாறு பூரண சற்குணராயில்லையென்றால் நாம் செல்லவேமாட்டோம். 248 ஆகையால் நாம் ஒவ்வொருவரும், “பாவத்தில் பிறந்து, அக்கிரமத்தில் உருவாகி, பொய் பேசுகிறவர்களாய் உலகத்திற்கு வந்தோம்” என்பதை நாம் கண்டறிகிறோம். நம்மைக் குறித்து ஆரோக்கியமான ஒரு நல்ல காரியமும் இல்லாமலிருக்கும்போது, நாம் எப்படி பூரண சற்குணராக முடியும்? 249 இப்பொழுது நாம் இங்கே கண்டறிவதென்னவென்றால், வேதவாக்கியத்தை வேதவாக்கியத்தைக்கொண்டு எடுத்துப் படிக்கும்போது, “இயேசு ஒரே பலியினாலே தம்முடைய சபையை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்” என்பதை கண்டறிகிறோம். அவர்…அப்படியானால் நாம் கிறிஸ்துவின் மூலமாக பரிபூரணரமாயிருக்கிறோம். நாம் கிறிஸ்துவின் மூலமாக நியாயத் தீர்ப்பிலிருந்து விடுதலையாயிருக்கிறோம். நாம் கிறிஸ்துவின் மூலமாக ஒரு போதும் மரிக்கவேமாட்டோம். நாம் கிறிஸ்துவின் மூலமாக மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனைக் கண்டடைந்தோம்; எந்த சபையினூடாகவும் அல்ல, எந்த ஸ்தாபனத்தினூடாகவும் அல்ல, எந்த அற்புதமான காரியத்தினாலும் அல்ல, அந்நிய பாஷைகள் பேசுவதன் மூலமாயல்ல, சத்தமிடுவதன் மூலமாயல்ல, குலுக்குவதன் மூலமாயல்ல, ஆவியில் நடனமாடுவதன் மூலமாய் அல்ல, ஆனால் கிருபையினாலே ஜீவனைக் கண்டைந்தோம். 250 தேவன் தமக்குச் சித்தமானவர்களை அழைக்கிறார். அவையாவும் தெரிந்துகொள்ளுதலின் மூலமாகவே என்பதை நாம் கண்டறிகிறோம். அதாவது, “அது இரட்சிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறவனால் அல்ல. ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்” என்பதை நாம் கண்டறிகிறோம். “தேவன் ஒருவனை முதலில் இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் இயேசுவினிடத்தில் வரமாட்டான்.” ஆகையால் எப்படியாயினும், அதனோடு உங்களுக்கு என்ன சம்மந்தம் உள்ளது? உங்களுக்கு அதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. நீங்கள் மொத்தத்தில் காட்சிக்கு வெளியே இருக்கிறீர்கள். 251 மனிதன் ஒரு போதும் தேவனைத் தேடவில்லை என்பதை நாம் கண்டறிகிறோம். அது தேவன் மனிதனைத் தேடுகிறதாகவே உள்ளது. ஆகையால் தேவன் மாத்திரமே நித்திய ஜீவனின் ஆதாரமாயிருக்கிறார் என்பதை நாம் கண்டடைகிறோம். நித்தியமாயிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் துவக்கமும் கிடையாது முடிவும் கிடையாது என்பதை நாம் கண்டறிந்தோம். ஆகையால் நரகத்திற்கு ஒரு துவக்கம் உண்டு என்றும், அதற்கு ஒரு முடிவும் உண்டு என்றும் நாம் கண்டறிகிறோம். அங்கு…எவருமே…நரகம் என்றென்றைக்குமாய், ஆம், என்றென்றைக்குமானதாயிருக்கிறது என்று கூறவே முடியாது, ஆனால் அது நித்தியமானதல்ல. 252 சதாக்காலம் என்பது “ஒரு குறிப்பிட்டக் காலம்” என்பதாகும். வேதம் “சதாக்காலம்” என்று கூறுகிறது. நீங்கள் அந்த வார்த்தையை எடுத்துப் பார்த்தால், சதாக்காலம் என்பது “ஒரு குறிப்பிட்டக் காலம்” என்று பொருள்படுகிறதல்லவா என்பதைக் கண்டறியலாம். யோனா மீனின் வயிற்றில் “என்றென்றும்” இருந்தான் என்று கூறினான். மற்ற அநேக வேதவாக்கியங்களும் என்றென்றும் என்பதை “ஒரு குறிப்பிட்ட கால அளவையே” பொருட்படுத்துகின்றன. 253 ஆனால் நித்தியம் என்பது என்றென்றுமானது, அதாவது என்றென்றுமாய், என்றென்றுமாய், என்றென்றுமாய், என்றென்றுமாய், என்றென்றுமாய் என்பதாகும். அது நித்தியமானதாயுள்ளது. நரகம் நித்தியமானதல்ல என்பதை நாம் கண்டறிகிறோம், ஆனால் குறிப்பிட்ட காலவரையறையைக் கொண்டதாயுள்ளது. அந்தக் காரணத்தினால்தான் இப்பொழுது நீங்கள் அந்த வார்த்தைகளைக் கவனிக்க வேண்டும். நீங்கள் கவனிக்கவில்லையென்றால், நீங்கள் குழப்பமடைவீர்கள். இப்பொழுது அந்தக் காரியங்களுக்கு துவக்கமில்லாதிருந்தது என்பதும், முடிவும் இல்லாதிருக்கிறது என்பதும் நினைவிருக்கட்டும். ஆகையால் இயேசு, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு ஜீவன் உண்டு,” என்றென்றைக்குமா? அது சரியாக தொனிக்கிறதா? இல்லையே. “நித்திய ஜீவன் உண்டு.” நித்தியம் என்ற வார்த்தை தேவனாய் உள்ளது. அந்த வார்த்தை மூல கிரேக்க வேதாகமத்தில் சரியாக இங்கே ஸோயீ, உங்களுக்குள் இருக்கிற தேவனுடைய ஜீவன் என்று உள்ளது. தேவன் நித்தியமானவராயிருக்கிறது போலவே, நீங்களும் நித்தியமானவராயிருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் தேவனையே உங்களுக்குள்ளாகப் பெற்றிருக்கிறீர்கள். 254 உங்களுடைய பழைய சுபாவம், உலகத்தின் சுபாவம் மரித்துப் போய்விட்டது, நீங்கள் ஒரு புதிய சிருஷ்டியாகிவிட்டீர்கள். உங்களுடைய வாஞ்சைகள், தேவன் உங்கள் நாசியிலே சுவாசத்தை ஊதினபோது, நீங்கள் பிறந்தபோது துவக்கத்தில் கொண்டிருந்த அந்த பழைய ஜீவியத்தின், அந்த பழைய மாம்சப்பிரகாரமான சுபாவம் மரித்துவிட்டது. அதற்கு ஒரு துவக்கம் இருந்தது, அதற்கு ஒரு முடிவும் இருந்தது. எனவே அது மரித்துப் போய், என்றென்றைக்குமாய் அந்த பழைய சுபாவத்தோடு ஒழிந்து போய்விட்டது. தேவன் புதிய சுபாவத்தோடு உள்ளே வந்தார். அப்பொழுது அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, சமாதானம், பொறுமை, சாந்தம், தயவு முதலியன உட்பிரவேசித்தன. அது மனக்காழ்ப்பு, கோபம், பகைகள், வைராக்கியம், சண்டை மற்றும் உள்ள எல்லாக் காரியங்களின் ஸ்தானத்தையும் எடுத்துக் கொண்டது. நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டபோது, ஜீவன் அதனுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொண்டது. உங்களுக்கு இது புரிகிறதா? உண்மையாகவே இப்பொழுது கூர்ந்து கவனிக்கிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 255 ஆகையால் கவனியுங்கள். ஒரே ஒரு நித்திய ஜீவனின் ரூபம் மாத்திரமே உண்டு. அதைக் கண்டறியுங்கள். அது தேவன் மாத்திரமே நித்திய ஜீவனை உடையவராயிருக்கிறார் என்பதாகும். வேதம் அவ்வண்ணமாய்க் கூறியுள்ளது. தேவன் மாத்திரமே நித்திய ஜீவனை உடையவராயிருக்கிறார். ஒரு மனிதன் நரகத்தில் என்றென்றுமாய் வேதனையுறப் போவதாயிருந்தால், அப்பொழுது அவன் தேவனை, நித்தியத்தை உடையவனாயிருக்க வேண்டும். ஆனால் நான்…அங்கு அதை கூறுவதோ… 256 இப்பொழுது, எரிகின்ற நரகம் ஒன்று இல்லையென்று நான் கூறிக்கொண்டிருக்கவில்லை என்பது நினைவிருக்கட்டும். அக்கினியும் கந்தகமும் கொண்டு எரிகிற ஒரு நரகம் உண்டு. “அங்கே புழு…அவர்கள் புழு சாவாமலும், அக்கினி அவியாமலுமிருக்கும்.” அக்கினியினாலும் கந்தகத்தினாலுமான ஒரு தண்டனை. அது ஒரு கால் கோடிக்கணக்கான ஆண்டுகள் நீடித்திருக்கலாம். ஆனால் அதற்கு ஒரு முடிவு உண்டு, ஏனென்றால் நரகம் பிசாசுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் சிருஷ்டிக்கப்பட்டது. ஒவ்வொரு காரியமும் அதே தேவனிடத்தில் தான் ஆதியில் இருந்தது, ஒவ்வொரு காரியமும் தேவனிடத்திலிருந்துதான் வந்தது. அதே ஆவி… 257 அன்பின் ஆவியை எடுத்துக்கொண்டால், அது சுத்தமான, கலப்படமற்ற தேவனுடைய மகத்தான ஊற்றாயிருந்தது. அதிலிருந்து ஒரு தாறுமாறாக்கப்பட்ட அன்பு உண்டானது. அதன்பின்னர் அது மானிட அன்பிற்குள்ளாக வந்தது. அதன்பின்னர் அது பாலியல் அன்புக்குள்ளாக வந்தது. அதன்பின்னர் அது மற்ற அன்புகளுக்குள்ளாக, அன்புகளுக்குள்ளாக, அன்புகளுக்குள்ளாக வந்து, அப்படியே தொடர்ந்து அது அசுத்தத்திற்குள்ளாக மாறுகிறவரையில் தாறுமாறாகிக்கொண்டே போகிறது. ஆனால் அந்த எல்லாக் காரியங்களுக்கும் ஒரு துவக்கம் இருந்தது. என்றோ ஒரு நாள் அது நேராக திரும்பவும் மூல அன்பிற்குள்ளாகத் திரும்பும்; அது நித்தியமானது, அங்கு இச்சை, மானிட அன்பு, உணர்ச்சிகரமான அன்பு, அந்த எல்லா அன்புகளுமே ஓய்ந்து போய்விடும். 258 இந்த எல்லா பாவனை விசுவாச நம்பிக்கைகளும் ஓய்ந்து போய்விடும். ஒரே ஒரு உண்மையான விசுவாசம் தான் உண்டு. மற்ற யாவும் ஓய்ந்து போய்விடும். அவைகள் இந்த உண்மையான ஊற்றிலிருந்து தாறுமாறாக்கப்பட்டவைகளாயிருந்தன. 259 ஆகையால் நரகம், வேதனை, வேதனையோ நித்தியமானதல்ல. பாவத்தின் காரணமாகவே வேதனை கொண்டு வரப்பட்டது, பாவமே வேதனையை அறிமுகப்படுத்தியது. பாவமானது முடிவுறுகின்றபோது, வேதனையும் கூட முடிவுற்றுவிடும். கிறிஸ்துவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத பாவிகளுக்கு அங்கே நரகத்தில் ஒரு நேரம் உண்டாயிருக்கும், அவர்கள் ஒரு கால் கோடா கோடி ஆண்டுகள் தண்டிக்கப்படலாம்…ஒரு கால் அது கோடா கோடி ஆண்டுகளாயிருக்கலாம், ஆனால் எனக்குத் தெரியாது. என்னால் அதைக் கூற முடியாது. ஆனால் ஏதோ ஒரு நேரத்தில் அதற்கு ஒரு முடிவு உண்டாகும், ஏனென்றால் அது நித்தியமானதல்ல. 260 இப்பொழுது, நாம் பூரணமாகுதலை நோக்கித் தொடர்ந்து செல்லப் போகிறோம். இப்பொழுது நாம் செய்திக்குள்ளாகச் செல்லும்போது, கவனியுங்கள். …செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல் நித்திய நியாயத்தீர்ப்பு… 261 இப்பொழுது கவனியுங்கள். நாம் இரண்டு காரியங்களைப் பெற்றுள்ளோம். இப்பொழுது நாம் இங்கு ஒரு விவகாரத்தை பெற்றுள்ளோம். இப்பொழுது நாம் இங்கே தான் சரியாக சில பெரிய கருத்து வேறுபாடுகளைப் பெற்றுக்கொள்ளப் போகிறோம். இப்பொழுது விவகாரமானது எங்கு உள்ளது என்பதை நீங்கள் காண வேண்டும். பவுல் இங்கு கிருபையிலிருந்து நியாயப்பிரமாணத்தைப் பிரிக்க முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறான். நாம் இரண்டு விவகாரங்களைப் பெற்றுள்ளோம்; ஒன்று, மாம்சப்பிரகாரமானது, மற்றொன்றோ, ஆவிக்குரியப் பிரகாரமானது. பவுல் இரண்டிற்கும் இடையேயுள்ள மாறுபாட்டை யூதர்களுக்கு காண்பிக்கும்படியாக முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறான். இந்த நிரூபம் எபிரெயர்களுக்கானதாயுள்ளது. எல்லா எபிரெயர்களுக்கும் பழைய ஏற்பாடு புதிய ஏற்பாட்டிற்கு மாதிரியாயுள்ளது என்பதை காண்பிக்கவே முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறான். ஆகையால் நீங்கள் இங்கே இந்த ஆய்வின் கீழ் இரண்டு விவகாரங்களை பெற்றுள்ளீர்கள். 262 இப்பொழுது நாம் வாசிக்கையில் கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது பவுல் கூறினான்: ஆகையால், கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு…பூரணராகும்படி கடந்து போவோமாக. 263 இப்பொழுது, நாம் எப்படி பரிபூரணராக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இந்தக் காலையில் நாம் புரிந்துகொண்டோம். பரிபூரணமாக்கப்பட்டு, முற்றிலுமாக கறையற்றவர்களும், பிழையற்றவர்களுமாயிருக்கிறோம், நம்மில் ஒரு பாவமுமில்லை. நீங்கள் சோதனைக்கப்பாற்பட்டிருக்கிறீர்களா? இல்லையே. நீங்கள் ஒவ்வொரு நாளும் பாவம் செய்கிறீர்களா? ஆம் ஐயா. ஆனால் அதே சமயத்தில் நாம் அவருக்குள் இருக்கின்றபடியால், நாம் பரிபூரணமாக்கப்பட்டிருக்கிறோம். தேவனால் இனி ஒருபோதும் நம்மை நியாயந்தீர்க்க முடியாது (அவ்வாறு நியாயந்தீர்த்தால் நீதியாயிருக்க முடியாது), அவர் நம்மை அவருக்குள் ஏற்கெனவே நியாயந்தீர்த்துவிட்டார். அவர் கிறிஸ்துவை நியாயந்தீர்த்தபோது; அவர் என்னை நியாயந்தீர்த்தார், அவர் உங்களை நியாயந்தீர்த்தார். அவரால் என்னை மீண்டும் நியாயந்தீர்க்க முடியாது, ஏனென்றால் அவர் என்னுடைய நியாயத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டார், நான் மீட்கப்பட்டிருக்கிறேன். 264 நான் என்னுடைய கைக்கடிகாரத்தை அடகுக் கடையிலிருந்து மீட்டுள்ளதைக் காண்பிக்கும்படியான ஒரு ரசீதினை வைத்துள்ளேன், எனவே நான் ஒரு இரசீதினை வைத்திருக்கும்போது, அதை மீண்டும் ஒரு முறை யாரேனும் அடகு கடையிலிருந்து மீட்க முயற்சி வேண்டுமா? நான் அதை மீட்டிருக்கிறேன். பிசாசு என்மேல் தண்டனையைப் போடும்படி முயற்சித்தால், அப்பொழுது நான் மீட்கப்பட்டுள்ளதை காண்பிக்கும்படியான ஒரு இரசீதினை வைத்துள்ளேன். ஆம் ஐயா. இனிமேல் நியாயத்தீர்ப்பேயில்லையே! “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்.” அதுவே என்னுடைய இரசீது. அவர் வாக்குத்தத்தத்தை அளித்தார். 265 இப்பொழுது, இப்பொழுது இந்த விவகாரம் இங்கே உள்ளது. …செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல்… 266 இப்பொழுது நினைவிருக்கட்டும், அந்த வார்த்தை மீண்டும் பயன்படுத்தப்பட்டதை நீங்கள் கவனித்தீர்களா? நாம் அதை இந்தக் காலையில், “நித்திய நியாயத்தீர்ப்பு” என்று உபயோகித்தோம். தேவன் ஒரு முறை பேசுகிறபோது, அது நித்தியமாயிருக்கிறது. அது ஒரு துணுக்களவும் மாற்றப்பட முடியாது. ஆகையால், நியாயத்தீர்ப்பு நித்தியமாயிருக்கிறது, அது எப்பொழுதுமே நியாயத்தீர்ப்பாயிருக்கிறது. நாம் எந்த தலைமுறையில் வாழ்ந்துகொண்டிருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல, ஒரு சந்ததி ஜீவிக்கும், ஒரு பிரமாணம் ஜீவிக்கும், அது…என்றென்றுமாய்…அது என்ன காலமாய், இது மற்றும் அதுவாயிருந்தாலும் சரி. ஆனால் தேவனுடைய நியாயத்தீர்ப்பு இன்னமும் நித்தியமாயிருக்கிறது, அவர் அவ்வாறு கூறுவேண்டியதாயுள்ளது, ஏனென்றால் அவர் வார்த்தையை உரைத்தார். தேவன் ஒரு வார்த்தையை உரைக்கிறபோது, அது நித்தியமாயிருக்க வேண்டியதாயுள்ளது. அது உண்மை. 267 இப்பொழுது நான் உங்களுக்காக அதை மூல கிரேக்க வேதாகமத்திலிருந்து வாசிக்கட்டும். அது எப்படி வாசிக்கப்படுகிறது என்பதை கவனியுங்கள். ஆகையால் கிறிஸ்துவின் மூல உபதேச வசனங்களை விட்டு—விட்டு, பாவநிவிர்த்தியானவர், நாம்…நோக்கிச் செல்ல வேண்டிய… இப்பொழுது என்னால் அதை வாசிக்க முடியவில்லை. அது தெளிவற்றதாய் உள்ளது. “…முறைமையை மீண்டும் போடாமல்…” இங்குதான் நாம் துவங்கினோம். …மரணத்திற்கு காரணமாயிருக்கிற கிரியைகளான சீர்த்திருத்த முறையை மீண்டும் போடாமல்… 268 இப்பொழுது இந்த மூல கிரேக்க வேதத்திலோ எந்த வியாக்கியானமுமில்லாமல் முற்றிலும் சரியாய் உள்ளது. இது ஆங்கில மொழி வேதம் என்ன கூறுகிறதோ அப்படியே அதற்கான கிரேக்க வார்த்தை. அது, “இப்பொழுது நமக்கு தேவையில்லை…” என்று கூறியுள்ளது. இங்கே கவனியுங்கள், பாருங்கள். …மரணத்திற்கு காரணமாயிருக்கிற கிரியைகளான சீர்த்திருத்த அஸ்திபாரங்களை மீண்டும் போடாமல்… 269 இப்பொழுது நீங்கள் அதை உங்களுடைய சிந்தையில் புரிந்து கொள்வீர்களேயானால் நலமாயிருக்கும், அதாவது, “மரணத்திற்கு காரணமாயிருக்கிற சீர்த்திருத்த முறைமைகளை,” அவன் இங்கு பேசிக் கொண்டிருக்கிறான். பவுல், “மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத் தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக. சீர்த்திருந்த முறைகள் மரணத்தை விளைவிக்கின்றன” என்பது சரியான வார்த்தைகளாயிருக்கின்றன. அதைத்தான் உண்மையாகவே பவுல் எழுதினான். அவன் என்ன செய்ய முயற்சித்துக்கொண்டிருக்கிறான் என்பதைப் பார்த்தீர்களா? 270 இப்பொழுது இந்த எல்லாக் காரியங்களும், ஞானஸ்நானம் போன்றவை; ஒருவர் பின்னோக்கியவாறும், ஒருவர் முன்னோக்கியவாறும், ஒருவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலும், ஒருவர் இயேசுவின் நாமத்திலும், ஒருவர் இந்த விதமாகவும், அந்தவிதமாகவும் ஞானஸ்நானம் பண்ணப்படுகின்றனர், இவையாவுமே ஞானஸ்நானத்தைக் குறித்த வித்தியாசமான சிறு காரியங்களாயுள்ளன. 271 கைகளை வைக்குதலைக் குறித்துப் பார்த்தால், “தேவனுக்கு ஸ்தோத்திரம், நான் கைகளை வைக்குதலின் பேரிலான வரத்தைப் பெற்றுக் கொண்டேன். அல்லேலூயா! நீங்களும், நீங்களும் அதை இந்தவிதமாகப் பெற்றுக்கொள்ள முடியும். அல்லேலூயா!” என்று கூறுகிறார்கள். 272 அவையாவற்றையும் ஒரு புறம் தள்ளி விட வேண்டும், ஏனென்றால் அது மரித்த கிரியைகள், இந்த சீர்த்திருத்தங்கள், சீர்த்திருத்தம் போன்றவை. புரிகிறதா? அவன் மற்றொரு வகுப்பினரைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறான். இப்பொழுது, அவன், “அதிலிருந்து விலகிச் சென்று, பூரணராகும்படி கடந்து போவோமாக” என்றான். உங்களுக்கு அது புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 273 சபையானது இன்னமும் அந்தக் காரியங்களில் தாமதமாக பின்னாகவே இருந்துகொண்டிருக்கிறது. அதைத்தான் நாம் செய்ய முயற்ச்சித்துக்கொண்டிருந்தோம். ஆதிகால எபிரெய சபை, “நல்லது, நான் முழுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட்டேன், நான் இதைப் பெற்றுவிட்டேன், இதை, மற்ற இந்த எல்லாக் காரியங்களையும் பெற்றுவிட்டேன்” என்று கூறவே முயற்சித்துக்கொண்டிருந்தது. 274 அவன், “இப்பொழுது, அவையாவற்றையும் ஒருபுறம் தள்ளி வைத்து விடுவோம்” என்றான். ஆனால், இப்பொழுது, நாம் அதை செய்யக் கூடாது என்று அவன் கூறினானா? இப்பொழுது அதைக் குறித்து அவன் என்ன கூறினான் என்பதைக் கவனியுங்கள். தேவனுக்குச் சித்தமானால்…இப்படியே செய்வோம். 275 மூல கிரேக்க வேதமும் அதேக் காரியத்தைக் கூறியுள்ளது. தேவனுக்கு சித்தமானால் இப்படியே செய்வோம், பாருங்கள். தேவனுக்கு சித்தமானால் இப்படியே செய்வோம். 276 ஸ்நானங்கள், கைகளை வைக்குதல், மற்ற காரியங்கள், ஆனால் அது பரிபூரணமாயிருக்கவில்லை. அது மாம்சபிரகாரமான சீர்திருத்தமாய் மாத்திரமே உள்ளது. அங்கே தான் சபைகள் இன்றைக்கு அந்த மாம்சபிரகாரமான சீர்த்திருத்தத்தின் பேரில் நிறுத்திக் கொள்கின்றன. ஒரு ஸ்தாபனம் “ஓ, நல்லது, தண்ணீர், ஞானஸ்நானம் என்ற வார்த்தை இதைப் பொருட்படுத்துகிறது, இது அதைப் பொருட்படுத்துகிறது” என்று கூறுகிறது. 277 அவர்கள் ஸ்தாபனங்களை அமைத்துக் கொண்டனர்; ஒரு சாரார் தெளிக்கிறார்கள், மற்றொரு சாரார் ஊற்றுகிறார்கள், மற்றொருவர் முகத்தை முன்பக்கமாக முழுக்கி ஞானஸ்நானங் கொடுக்கிறார். மற்றொருவர் பின்பக்கமாக முழுக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறார், ஆக அந்த எல்லாக் காரியங்களுமே உள்ளன. அவர்களில் சிலர் வியாதியஸ்தர் மேல் கைகளை வைக்கிறார்கள், சிலர் கைகளை வைக்குதல் மூலம் சிலரை அப்போஸ்தலர்களாக்குகிறார்கள்; சிலரை தீர்க்கதரிசிகளாக்குகிறார்கள்; மரித்தோரின் உயிர்த்தெழுதலைக் குறித்துப் பிரசங்கித்தல், அது சரிதான்; கிறிஸ்துவின் ஒப்புயுர்வற்ற தெய்வீகத்தன்மையைக் குறித்து பிரசங்கித்தல், அது சரிதான். “ஆனால்,” அவன், “இவை யாவும் சடங்காச்சாரமான சீர்திருத்தல்களாயிருக்கின்றன. நாம் வெறுமென சீர்திருத்தலையே செய்து கொண்டு வருகிறோம். இப்பொழுது நாம் பூரணராகும்படி கடந்து போவோமாக” என்றான். உங்களுக்கு அந்த விவகாரம் புரிகிறதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 278 இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது இங்குதான் ஆழமான பாகமே வருகிறது. ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 279 இப்பொழுது, பிரமாணக்காரராயிருக்கிற நீங்கள் உங்களுடைய சிந்தையில் இப்பொழுது என்ன நினைத்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன், ஆனாலும் நீங்கள் தவறாயிருக்கிறீர்கள். புரிகிறதா? சரி, நான் இதன் பேரில் நிற்கிறேன், வேதம் அதை உறுதிபடுத்துகிறது, அதாவது, “தேவன் ஒரு மனிதனை எப்போதாவது இரட்சித்திருப்பாரானால், அவன் நித்திய காலமாய் இரட்சிக்கப்பட்டிருக்கிறான்” என்பதாகும். எனவே நீங்கள் அதற்கு வேறெந்த காரியத்தையும் கூறச் செய்ய முடியாது. 280 அண்மையில் சில அடிப்படைவாதக்காரர்கள் என்னிடத்தில் வந்து, “பிரான்ஹாம் பிரசங்கியாரே, நான் உங்களுடைய தவறு ஒன்றைப் பிடித்துவிட்டேன். நான் உங்களுடைய தவறு ஒன்றினை பிடித்துவிட்டேன். நீர், ‘ஒரு மனிதன் இரட்சிக்கப்பட்டிருந்தால், அப்பொழுது அவன் ஒருபோதும் இழக்கப்படவே முடியாது என்றிரல்லாவா?’” என்றான். 281 அதற்கு நான், “அப்படித்தான் தேவன் கூறினார்” என்றேன். 282 அப்பொழுது அவன், “நான் உங்களிடத்தில் ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். சவுல் ஒரு தீர்க்கதரிசியாயிருந்தான், அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். அவன் தேவனால் அபிஷேகிக்கப்பட்டவனாயிருந்தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவன் அபிஷேகிக்கப்பட்டவனாயிருந்தான் என்றே வேதம் கூறியுள்ளது. அவன் தற்கொலை செய்து கொண்டான், எனவே அவன் இழக்கப்பட்டுப் போய்விட்டான்.” என்று கூறினான். 283 அதற்கு நான், “அவன் இழக்கப்பட்டு விட்டானா?” என்று கேட்டேன். மேலும் நான், “அவன் ‘இரட்சிக்கப்பட்டான்’ என்று தானே வேதம் உறுதியாகக் கூறுகிறது. அவன் தேவனுக்கு சத்துருவான பின்பும், அவன் அப்பொழுதும் இரட்சிக்கப்பட்டிருந்தான். அவன் இரட்சிக்கப்பட்டிருந்தான் என்று வேதம் உரைத்துள்ளது. மொத்தத்தில் அவன் தற்கொலை செய்துகொள்ளவில்லை. ஒரு பெலிஸ்தியன் அவனைக் கொன்றான், அந்த பெலிஸ்தியன் சவுலைக் கொன்றதற்காக தாவீது அவனைக் கொன்று போட்டான். அவன் தன்னுடைய பட்டயத்தை, பட்டயத்தை நட்டு, அதின்மேல் விழுந்து, தன்னுடைய ஈட்டி முனையில் சாய்ந்து கொண்டிருந்தான், ஆனால் அவன் தானே அவ்வாறு செய்தும், அதனால் அவன் மரித்துப் போகவில்லை. எனவே ஒரு பெலிஸ்தியன் அவனைக் கொன்றான். சவுல் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீயிடம் சென்றபோது, அவள் சாமுவேலின் ஆவியைக் கூப்பிட்டாள், ஏனென்றால் சாமுவேல் அப்பொழுது மகிமைக்குள் பிரவேசிக்காமலிருந்தார், எனவே அவர் பாவத்தை போக்க முடியாதபடி, சிந்தப்பட்ட காளை, வெள்ளாடுக்கடா இரத்தத்தின் கீழ் பரதீசில் இருந்தார். ஆனால் அவர் மகிமைக்குள் பிரவேசிக்கும் வரையில் பரதீசு என்றழைக்கப்பட்ட ஒரு ஸ்தலத்தில் காத்திருக்க வேண்டியதாயிருந்தது” என்றேன். 284 அங்குதான் கத்தோலிக்க ஜனங்களாகிய நீங்கள் குழப்பமடைந்துள்ளீர்கள். புரிகிறதா? இப்பொழுது பரதீசு என்பதே கிடையாது. நாம் இப்பொழுது நேராக தேவனுடைய பிரசன்னத்திற்குள் செல்கிறோம். 285 எந்தோரில் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ சாமுவேலின் ஆவியைக் கூப்பிட்டபோது, அங்கே அவர் வந்து நின்றார். அப்பொழுது அவள் முகங்குப்புற விழுந்து, “நீர் ஏன் என்னை மோசம் போக்கினீர்?” என்று அவள் கேட்டாள். 286 அங்கே சவுல் வெறுமென நின்று கொண்டிருக்கவில்லை…இல்லை. நான் சாமுவேலையேப் பொருட்படுத்திக் கூறுகிறேன், சாமுவேல் தன்னுடைய தீர்க்கதரிசன வஸ்திரத்தோடு நின்றார், அவர் அப்பொழுதும் அவர் ஒரு தீர்க்கதரியாயிருந்தார். அப்பொழுது சாமுவேல், “நீ என்னுடைய இளைப்பாறுதலிலிருந்து என்னை அழைத்தது என்ன?” என்றும், “தேவன் உனக்குச் சத்துருவாயிருக்கும்போது என்னிடத்தில் என்னக் கேட்பானேன்?” என்றும் கேட்டார். 287 அப்பொழுது சவுல், “ஊரீம் என்னிடத்தில் இனிமேல் பேசாது. தீர்க்கதரிசியும் இனிமேல் என்னிடத்தில் தீர்க்கதரிசனமுரைக்க முடியாது. நான் ஒரு சொப்பனத்தையும் காண முடியவில்லையே” என்றான். 288 அதற்கு சாமுவேல், “நீ தேவனுக்கு சத்துருவாக மாறிவிட்டாய். ஆனால் மற்றபடி நாளை நடக்கிற யுத்தத்தில் நீ மரித்துப் போவாய். நாளை இரவு இந்த நேரத்தில் நீ என்னோடிருப்பாய்” என்றார். எனவே சவுல் இழக்கப்பட்டிருந்தால், அப்பொழுது சாமுவேலும் இழக்கப்பட்டவராயிருக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் ஒரே இடத்தில் ஒன்றாயிருந்தனரே. நிச்சயமாக வேதம் அவ்வண்ணமே கூறியுள்ளது. 289 இப்பொழுது, நீங்கள் உணர்ச்சிவசப்படலாம், அந்நிய பாஷையில் பேசலாம், சத்தமிடலாம், உடலைக் குலுக்கலாம், அசைக்கலாம், சபையின் நடைப் பிரகாரங்களில் மேலும் கீழும் ஓடலாம். அதற்கு விரோதமாக ஒரு காரியமுமில்லை. ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படாமலிருக்கும்போது, நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் விசுவாசிப்பதாக உங்களையே பாவனை செய்துகொள்ள முடியும், ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதை உங்களுடைய ஜீவியமே நிரூபிக்கும், இயேசு, “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்றார். நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதை நீங்கள் ஒருபோதும் உங்களுடைய வாயைத் திறந்து கூறாமலேயிருந்தாலும், உங்களுடைய ஜீவியம் அதை நிரூபிக்கும். நீங்கள் என்னவாயிருக்கிறீர்கள் என்பதை அது நிரூபித்துவிடும். 290 ஆனால் இந்த எல்லா செயல்களும், உணர்ச்சிவசப்படுதலும், சபையைச் சேர்ந்துகொள்ளுதலும், “நான் இயேசுவினின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறேன், அல்லேலூயா, நான் இதைப் பெற்றுக்கொண்டேன் என்பதை நான் அறிவேன்” என்பதெல்லாம், எந்த ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை. 291 “நான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் மூன்று முறை முன்பக்கமாக மூழ்கி ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறேன். நான் அவ்வாறு அதை எடுத்துள்ளேன்” என்று கூறலாம். அது ஒன்றையுமே பொருட்படுத்துகிறதில்லை. 292 பவுல், “நாம் இப்பொழுது பூரணராகும்படி கடந்து போவோமாக” என்றான். நாம் பரிபூரணமாக்கப்படுகிறதைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் இதை ஆராய்ந்து பார்ப்போமேயானால், பரிபூரணமாக்கப்படுதல் தெரிந்துகொள்ளப்படுதல் என்பதாய் உள்ளது என்பதை நீங்கள் கண்டறியலாம். நான் இன்னும் ஒரு சில நிமிடங்களில் வேதாகமத்தைக் கொண்டு அதை உங்களுக்கு நிரூபித்துக் காண்பிப்பேன். அது தேவன் உலகத் தோற்றத்திற்கு முன்னர் அவர்கள் ஒவ்வொருவரையும் கண்டு தெரிந்தெடுத்ததாயுள்ளது. எனவே அவர் முழு உலகத்தையும் மீட்பதற்கு அல்ல, அந்த ஜனங்களை மீட்கவே இயேசுவை அனுப்பினார். அவர் அவர்களுக்காக ஒரு வழியை உண்டு பண்ண வேண்டியதாயிருந்தது. அவர் நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாக வந்து, அந்த தெரிந்து கொள்ளப்பட்டவர்களை, மகிமையில் அவரண்டை அவர் கொண்டுவரும்படியாக அவரால் செய்யமுடிந்த ஒரே வழி கிறிஸ்துவை அனுப்ப வேண்டியதாயிருந்தது. 293 நீங்கள், “நல்லது, ஒருகால் யாரோ ஒருவர் என்னைக் குறித்து உண்மையாகவே மோசமாக எண்ணலாம், ஒருகால் அவர்கள் வந்து இரட்சிக்கப்படலாம்” என்று கூறும்படியாக தேவன் தம்முடைய உத்தியோகத்தை மிகவும் உறுதியற்ற முறையில் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார் என்று கற்பனை செய்து பார்க்க முடியுமா? நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும்படி தேவன் உங்களைக் கெஞ்சி மன்றாட வேண்டியதில்லை. எந்த கெஞ்சி மன்றாடுதலையுமே, நீங்கள் தான் கெஞ்சி மன்றாடுதலைச் செய்ய வேண்டும், தேவனல்ல. 294 ஆகையால் தேவன் முன்னறிதலின் மூலமாக தெரிந்து கொள்ளப்பட்டவர்களை அப்பாலே கறை திரையற்றவர்களாய் சந்திக்கும்படிக்கு அவர்களை இரட்சிக்கவே கிறிஸ்து மரித்தார். உலகத் தோற்றத்திற்கு முன்னே அவர் உங்களை மகிமையில் கண்டார். அதைத் தான் வேதம், எபேசியர் 1-வது அதிகாரத்தில் கூறியுள்ளது. 5-ம் அதிகாரம், 1-வது வசனம். தேவன் முன்னறிவினால் முன்குறித்தார். 295 இப்பொழுது, தேவன் அதைச் செய்திருப்பாரானால், உலகத் தோற்றத்திற்கு முன்பே நம்மை முன்குறித்திருப்பாரானால், உலகத் தோற்றத்திற்கு முன்பே, நம் ஒவ்வொருவரையும் பெயரிட்டு அறிந்திருப்பார். அவர் நம்மை நித்திய ஜீவனுக்கென்று தெரிந்துகொண்டு, நம்மை மீட்க இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். அதாவது ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், நாம் மகிமையில் அவருக்கு புகழ்ச்சியாய் பிரசன்னமாகும்படிக்கு அவர் நம்மைக் கண்டாரே! அப்படியிருக்க நீங்கள் எப்படி இழக்கப்பட முடியும்? 296 இப்பொழுது, நீங்கள் இரட்சிக்கப்பட்டிருந்தால், நீங்கள் இரட்சிக்கப்பட்டுவிட்டீர்கள். தேவன் இன்றிரவு உங்களை இரட்சித்து, இன்றிலிருந்து பத்து ஆண்டுகளில் உங்களை இழக்கப் போகிறார் என்பதை அறிந்திருந்தால், அப்பொழுது அவர் தம்முடைய சொந்த தீர்மானத்தையே தோற்கடித்துக் கொண்டிருக்கிறார். முடிவற்ற, சர்வ வல்லமையுள்ள, நித்திய, நித்திய ஞானமுள்ளவரான தேவன் அப்பொழுது நீங்கள் முடிவுபரியந்தம் நிலைத்து இருப்பீர்களா அல்லது நீங்கள் நிலைத்திருக்கமாட்டீர்களா என்பதை அறிந்திருக்கவில்லை என்பதாகும். அப்பொழுது அவர் உங்களை இரட்சிக்கிறபொழுது, “நான் அவனுக்கு ஒரு சோதனையைக் கொடுப்பேன்: அப்பொழுது அவன் என்ன செய்கிறான் என்று நான் பார்ப்பேன்” என்று கூறினால், அவர் துவக்கம் முதல் முடிவு வரை அறிந்திருக்கவில்லை என்பதாயுள்ளது. தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார், நீங்கள் அதைக் குறித்து ஒருபோதும் கவலைப்பட வேண்டாம். அது நீங்களும் நானுமே இடறுகிறதாய் உள்ளது. தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கிறார். நாம் முடிவுபரியந்தம் நிலைத்திருப்போமா அல்லது நாம் என்ன செய்வோம் என்பதை…அவர் அறிந்திருந்தார். 297 இப்பொழுது, வேதம் ஏசா, யாக்கோபைக் குறித்துக் கூறுகையில், பிள்ளைகள் இன்னும் பிறவாததற்கு முன்னே, அவர்கள் தங்களுடைய முதல் சுவாசத்தை சுவாசிப்பதற்கு முன்னமே, அவருடைய தெரிந்துகொள்ளுதல் நிலைநிற்கும்படிக்கு, தேவன், “நான் ஒருவனை சிநேகித்து, மற்றொருவனை வெறுத்தேன்” என்று கூறினார் என்றே உரைத்துள்ளதே. 298 ஆபிரகாம் யாராயிருந்தான்? நாம் இன்னும் ஒரு சில நிமிடங்களில், இங்கே கீழே அவனண்டைச் செல்லப் போகிறோம். தேவன் அழைக்கும்படிக்கு அவன் யாராயிருந்தான்? எந்த ஒரு காரியமுமில்லாமல் அவனை இரட்சிக்கிறார். தேவன் மனிதனோடு ஒரு உடன்படிக்கையை செய்கிறார்; மனிதன் அவருடைய உடன்படிக்கையை முறிக்கிறான். ஆனால் தேவனோ இந்த உடன்படிக்கையை தம்மோடு செய்துகொண்டு, தம்மில் தாமே ஆணையிட்டுக்கொண்டார். மனிதனுக்கு அதனோடு எந்த சம்மந்தமும் கிடையாது. அது தேவனுடைய சொந்த முன்னறிவாயுள்ளது. எப்படியோ அவரே அதைச் செய்துள்ளார். 299 இப்பொழுது நீங்களோ, “நல்லது, சகோதரன் பிரான்ஹாம் அவர்களே, நான் ஒரு கிறிஸ்தவனாக மாறினால், நான் விரும்புகிற எந்தக் காரியத்தையும் என்னால் செய்ய முடியுமா?” என்று கேட்கலாம். முற்றிலுமாக. நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்தால், நீங்கள் விரும்புகிறதைச் செய்யலாம். ஆனால் உங்களுக்கு தவறு செய்யும்படியான எந்த வாஞ்சையும் உண்டாகாது என்று நான் உத்தரவாதம் அளிப்பேன். நீங்கள் எந்தக் காரியத்தையும் செய்யுங்கள். நான் என்ன செய்ய வேண்டுமென்றிருந்தேனோ, நான் அதை எப்பொழுதுமே செய்துள்ளேன். நான் நரகத்திற்கு செல்லப் போகிறேன் என்று பயப்படுகிற காரணத்தால், நான் கர்த்தருக்கு ஊழியம் செய்தால், அப்பொழுது நான் அவருக்கு சரியாக ஊழியம் செய்துகொண்டிருக்கவில்லை. என் மனைவி என்னை விவாகரத்து செய்துவிடுவாள் என்று நான் பயப்படுகிறதினால் நான் அவளுக்கு உண்மையாக ஜீவித்தால், அப்பொழுது நான் ஒரு நல்ல கணவனாக இருக்கவில்லை. ஆனால் நான் அவளை நேசிக்கின்றபடியால், நான் எந்த காரியத்திற்காகவும் அவளைப் புண்படுத்தமாட்டேன். 300 ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கும்போது, அந்த விதமாகத்தான் கிறிஸ்துவோடு உள்ளான். அவன் சத்தமிட்ட காரணத்தினால் அல்ல, அந்நிய பாஷையில் பேசினதினால் அல்ல, அல்லது ஏதோ உண்ர்ச்சிவசப்படுதலினால் அல்ல; ஆனால் அவனுடைய இருதயத்தில் அன்பு உள்ளே வந்து, உலகத்தின் காரியத்தை எடுத்துப் போட்டுவிடுகிறது, அப்பொழுது அவன் அவரை நேசிக்கிறான், அவன் ஒவ்வொரு நாளும் அவரண்டை நடக்கிறான் என்றே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். எனவே நீங்கள் அவனிடத்தில், “இதைச் செய்வது அல்லது அதை அல்லது மற்றதைச் செய்வது தவறு” என்று கூற வேண்டியதில்லை. அது தவறாயிருக்கிறது என்பதை அவன் அறிந்திருக்கிறான். அவன் தேவனோடு சஞ்சரிக்கிறான், ஏனென்றால் அவன் தேவனுடைய இராஜாதிபத்திய கிருபையின் உற்பத்தியாய் நியமியக்கப்பட்டிருக்கிறான். சரியாக. ஏனெனில், ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும்…கூடாத காரியம். இப்பொழுது ஒரு மனிதன் ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டு, மீண்டும் விழுந்து போய்விட்டான் என்று நாம் சில சமயங்களில் நம்பியிருக்கிறோம், வேதத்தில் நாம் அதை அந்தவிதமாக வாசிக்கிறதில்லை. அவன் இங்கே “பரிசுத்த ஆவியைப் பெற்று, மறுதலித்துப்போனவனை புதுப்பிக்கிறது முற்றிலும் கூடாத காரியம்” என்றே கூறுகிறான். இப்பொழுது அது சரியில்லையா என்று அதை வாசித்துக் கண்டறியுங்கள். இங்கே அந்த பாடப்பகுதியை எடுத்து, முழு பாடப்பகுதியையும், பொருளடக்கத்தையும், சரியாகக் கூறினால் அந்த கட்டத்தைக் கவனியுங்கள். 301 இப்பொழுது அவன் அதைக் குறித்துப் பேச துவங்குகிறான், அது என்ன? “நாம் பூரணராகும்படி கடந்து போவோமாக.” இப்பொழுது, அவன், “மாம்சபிரகாரமான, ஞானஸ்நானம், சீர்திருத்தங்கள் போன்ற அஸ்திபார உபதேசங்களை இங்கே போடாமல், நாம் அதைப் போடாதிருப்போமாக. நாம் பூரணராகும்படி கடந்துபோவோமாக” என்றான். இங்கே பாடப் பொருளோ, பரிபூரணம் என்பதாய் உள்ளது, பரிபூரணம் கிறிஸ்துவினால் உண்டாகிறது. நாம் எப்படி கிறிஸ்துவுக்குள் பிரவேசிக்கிறோம்? சபையில் சேர்ந்து கொள்வதனாலா? “நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்.” ஒருவர் அந்நிய பாஷையில் பேசுவதால் உள்ளே பிரவேசிப்பது என்பதும், ஒருவர் கரத்தை குலுக்குவதனால் உள்ளே பிரவேசிப்பது என்பதும், ஒருவர் தண்ணீர் ஞானஸ்நானம் பண்ணப்படுவதனால் உள்ளே பிரவேசிப்பது என்பதும் கிடையாது. “நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம்.” உங்களுக்கு அது புரிகிறதா? அது தான் பரிபூரணமாயிருக்கிறது. 302 நீங்கள் அதற்குள்ளாக வரும்போது, நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்கள், உலகமோ உங்களுக்கு மரித்ததாயுள்ளது. நீங்கள் ஒவ்வொரு நாளும் ஆட்டுக்குட்டியானவரோடு நடக்கிறீர்கள், என்ன செய்ய வேண்டும் என்று உங்களுடைய நடைகள் தேவனால் உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. ஓ, நாம் சோதனைகள் மற்றும் பரிசோதனைகளினூடாக செல்கிறோமே! நீங்களோ, “உங்களுக்கு சோதனைகள் உண்டாகின்றனவா?” என்று கேட்கலாம். ஆம் ஐயா. என்னவென்றால்… 303 தேவன் எனக்காக என்ன செய்தார் என்பதே கிருபையாயுள்ளது, தேவனுக்காக நான் என்ன செய்கிறேன் என்பது கிரியைகளாயிருக்கின்றன. இப்பொழுது அவர்கள் அதிலிருந்து ஒரு உபதேசத்தை உருவாக்குவார்கள், கிரியைகள் என்பது உங்களுடைய சிறப்பு தகுதிகள் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அப்படியிருந்தால் அது ஒரு கிருபை வரமல்ல. தேவன் உங்களுக்காக என்ன செய்தார் என்பது கிருபையாயுள்ளது, “கிருபையினால் நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்.” அவர் உங்களுக்கு காண்பித்த கிருபையின் உண்மையையுணர்ந்து, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதே கிரியைகளாயிருக்கின்றன. நீங்கள் அவரை நேசித்தால், அப்பொழுது நீங்கள் கர்த்தரின் கிரியைகளைச் செய்ய விரும்புவீர்கள். நிச்சயமாகவே, ஏனென்றால், அப்பொழுது நீங்கள் அவரை நேசிக்கிறீர்கள். 304 மேடா பிராயை என்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டது அவளுக்காக பொழியப்பட்ட அன்பாயிருந்தது. அந்த உண்மையையுணர்ந்து அவள் செய்கிறது என்னவென்றால்; அவள் ஒரு அருமையான ஸ்திரீயாயிருக்கிறாள், வீட்டில் தரித்திருந்து, பிள்ளைகளை பொறுப்பாக கவனித்துக் கொண்டு, ஒரு நல்ல உண்மையான வாழ்க்கை வாழ்கிறாள். அது நாங்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற காரணத்தினால் அல்ல; நாங்கள் திருமணம் செய்துக்கொண்ட காரணத்தினாலேயாம். ஆனால் அவள் அதை இன்னும் மதிப்புயர்வினைத் தரும்வகையில் செய்கிறாள். அதே சமயத்தில் அவள் ஒவ்வொரு நாளும் பட்டிணத்திற்குள் ஓடி, ஒவ்வொரு பத்து சென்டு கடைகளுக்கும் ஓடிச் சென்று, வீதிகளில் மேலும் கீழுமாக ஓடி, ஒருபோதும் பாத்திரங்களைக் கழுவாமலும் அல்லது வேறெந்த காரியமும் செய்யாமலிருந்தாலும், அப்பொழுதும் நாங்கள் திருமணம் செய்துகொண்டவர்களாகவே இருக்கிறோம். முற்றிலுமாக. நான் என்னுடைய விவாக வாக்குறுதியை எடுத்தபோதே, அது அதனை தீர்த்து வைத்துவிடுகிறது. அப்பொழுதே அவள் என்னுடைய மனைவியாயிருக்கிறாள். எங்களுக்குள்ளாக ஜீவன் இருக்கும்வரையில், அவள் என்னுடைய மனைவியாயிருக்கிறாள். அது அவளுடைய வாக்குறுதியாயுள்ளது. ஆனால் அவள் அதற்காக செய்கிற பாராட்டுதலாய் அது உள்ளது. அவள் வீட்டில் தரித்திருந்து, பிள்ளைகளை கவனமாக பராமரித்து, ஒரு உண்மையான மனைவியாயிருக்க முயற்ச்சிக்கிறாள். 305 நான் எல்லா நேரத்திலும் வெளியே ஓடி போய், எந்த ஒரு குறிப்பிட்ட நோக்கமில்லாமல் தேசத்தை சுற்றித்திரிந்து கொண்டிருந்தாலும், அவளை அரைகுறை பட்டினியாய் விட்டுச் சென்றாலும், அல்லது வேறெந்த காரியமானாலும், பிள்ளைகளுக்கு புசிக்க ஒன்றுமில்லாமல் விட்டுவிட்டாலும், நாங்கள் இன்னமும் திருமணம் செய்து கொண்டவர்களாகவே இருக்கிறோம். அவள் என்னை விவாகரத்து பண்ணினாலும் கூட, என் சரீரத்தில் ஜீவன் உள்ளவரை, நான் இன்னும் திருமணம் செய்து கொண்டவனாகவே இருக்கிறேன். ஏனென்றால் நான் அந்த வாக்குறுதியை, “மரணம் நம்மை பிரிக்கும் வரை” என்றே எடுத்துள்ளேன். அது உண்மையே. எனவே நாங்கள் இன்னமும் திருமணமானவர்களாகவேயிருக்கிறோம். ஆனால் நான் ஒரு நல்ல கணவனாயில்லாமலிருந்தாலும், அவளும் ஒரு நல்ல மனைவியாயில்லாமலிருந்தாலும், அதே சமயத்தில் நாங்கள் ஒருவரையொருவர் நேசிப்போமேயானால், நாங்கள் ஒன்று சேர்ந்து பாரத்தை ஒன்றாய் இழுப்போம். 306 அந்த விதமாகவே தேவனும் அவருடைய சபையும் உள்ளது. நீங்கள் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிறக்கும்போது, உண்மையாகவே உங்களுக்கு ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும், ஆனாலும் நீங்கள் அப்பொழுதும் ஒரு கிறிஸ்தவராகவே இருக்கிறீர்கள், நீங்கள் அப்பொழுதும் தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கிறீர்கள். ஒருகால் நீங்கள் சரியில்லாமலிருந்தால், அப்பொழுது தேவன் உங்களை பூமியிலிருந்து துரிதமாக எடுத்துக் கொள்ளலாம். …ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசி பார்த்தும்… …மறுதலித்துப் போனவர்கள்…மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம்… 307 இப்பொழுது சபையே, நீங்கள் எதைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன். பிரமாணத்தை கடைபிடிப்பதன் மூலம் இரட்சிப்படைதல் என்ற பாகத்தை உண்மையாகவே அடைத்துப் போடும்படியாக நான் இன்னும் சற்று பலமான ஒன்றை உங்களுக்காக எடுத்துக் காண்பிக்கட்டும். நாம் எபிரெயர் 10-ம் அதிகாரத்திற்கு சென்று, அப்படியே இதை சற்று நோக்கிப் பார்ப்போமாக. 308 10-ம் அதிகாரம், 26-ம் வசனம். சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள். 309 இப்பொழுது நீங்கள், “சகோதரன் பிரான்ஹாம், அதைக் குறித்து என்ன? அது எப்படி தோன்றுகிறது?” என்று கேட்கலாம். இப்பொழுது அப்படியே வாசிப்பதற்கு, அதாவது, “வேதவாக்கியம் அதைக் கூறவில்லை” என்று நான் எண்ணுகிறேன். அது ஒரு கிறிஸ்தவனைக் குறித்து பேசுவதல்ல. அது தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதிலிருந்து விலகிப் போய்விட்ட ஒரு மனிதனைக் குறித்துப் பேசுவதாயுள்ளது. புரிகிறதா? சுவிசேஷம் நமக்கு பிரசங்கிக்கப்பட்ட பின்பு, நாம் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால்…(பாவம் என்றால் என்ன? அவிசுவாசம்)…நாம் மனப்பூர்வமாய் அவிசுவாசித்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், 310 பாவம் என்றால் என்ன? அவிசுவாசம். பரிசுத்த யோவான் 4-வது அதிகாரத்தை வாசியுங்கள். இயேசு, “விசுவாசியாதவனோ ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று” என்றார். பாவம் என்பது புகைப்பிடித்தல், மது அருத்துதல், விபச்சாரஞ்செய்தல் என்பதல்ல. நீங்கள் ஒரு அவிசுவாசியாயிருக்கின்றபடியால் நீங்கள் அதைச் செய்கிறீர்கள். அவை வெறுமென தன்மைகளாயிருக்கின்றன. நீங்கள் ஒரு அவிசுவாசியாயிருக்கின்றபடியால் நீங்கள் அதைச் செய்கிறீர்கள். வெறுமென புகைப்பிடிப்பதை விட்டுவிடுவது, மது அருந்துவதை விட்டுவிடுவது அது போன்ற காரியங்கள், அது நீங்கள்—நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள் என்பதை பொருட்படுத்துகிறதில்லை. அவை வெறுமென உங்களுடைய மனமாற்றத்தின் தன்மைகளாயுள்ளன. ஆனால் உங்களால் அவைகளைச் செய்ய முடியும், நீங்கள் இவைகளை விட்டுவிடக் கூடியவர்களாயிருந்தும், அப்பொழுதும் விசுவாசியாயில்லாமலிருப்பீர்கள். 311 இப்பொழுது கவனியுங்கள். …அவன்…அடைந்தபின்பு மனப்பூர்வமாய்…அவிசுவாசத்தால்… 312 இல்லை—இல்லை, “அவன் கிறிஸ்துவை தன்னுடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டப் பிறகு.” வேதம் அதைக் கூறுகிறதில்லை. “அவன்…” என்று கூறப்பட்டுள்ளது. சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தல்… மனப்பூர்வமாய் அவிசுவாசிப்பவர்களாயிருந்தால்… இது புரிகிறதா? இது ஒரு கிறிஸ்துவனிடத்தில் பேசிக்கொண்டிருந்ததேயல்ல. 313 அண்மையில் யாரோ ஒரு ஸ்திரீ என்னிடத்தில் வந்து, “சகோதரன் பிரான்ஹாம் நான் ஒரு கிறிஸ்தவள், ஆனால் நான் பரிசுத்த ஆவியை தூஷித்துவிட்டேன்” என்று கூறினாள். 314 அதற்கு நான், “அது கூடாத காரியம்” என்றேன். ஒரு கிறிஸ்தவன் பரிசுத்த ஆவியை தூஷிக்கவே முடியாது. நீங்கள் அதைச் செய்ய முடியாது. ஒரு கிறிஸ்தவனின் ஆவி கிறிஸ்தவினுடைய ஆவியோடு சாட்சி பகருகிறது. புரிகிறதா? தேவனைக் குறித்த ஒவ்வொரு காரியத்தையும் நீங்கள் “தேவனுடையது” என்றே அழைப்பீர்கள். 315 ஆனால் நீங்கள் மாம்ச-சிந்தையுடையவர்களாயிருந்தால், நீங்கள் பரிசுத்த ஆவியை பரியாசம் பண்ணி, நகைப்பீர்கள்; நீங்கள் எவ்வளவு தான் சபைக்குச் சென்றாலும் கவலையில்லை, நீங்கள் இன்னமும் ஒரு பாவியாகத்தான் இருக்கிறீர்கள், ஏனென்றால் நீங்கள் பரிசுத்த ஆவியை தூஷித்துக் கொண்டிருக்கிறீர்கள். இயேசுவானவர் அவர்களுடைய சிந்தனைகளை பகுத்தறிந்ததை அவர்கள் கண்டபோது, அவர் ஒரு “குறிசொல்பவராயிருந்தார்” என்று அவர்கள் கூறினர். 316 இயேசு, “நீங்கள்…நான் அதற்காக உங்களை மன்னிப்பேன், ஆனால் பரிசுத்த ஆவி வரும்போது, நீங்கள் அதற்கு விரோதமாக ஒரு வார்த்தைப் பேசினாலும், அது உங்களுக்கு ஒரு போதும் மன்னிக்கப்படமாட்டாது” என்றார். ஏனென்றால் அவர்கள் “அவர் அசுத்த ஆவியை உடையவராயிருக்கிறார்” என்று கூறி, தேவனுடைய ஆவியை “ஒரு அசுத்தமான காரியம்” என்று அழைத்தனர். ஒரு கிறிஸ்தவனால் அதைச் செய்ய முடியாது. ஒரு கிறிஸ்தவன் எப்பொழுதுமே தேவனுடைய ஆவியை, “நீதி” என்றே அழைப்பான். புரிகிறதா? ஒரு கிறிஸ்தவனால் பரிசுத்த ஆவியை தூஷிக்க முடியாது. அது அந்நியர் தூஷிக்கிறதாயுள்ளது. 317 அங்கு நின்று கொண்டு தூஷித்துக்கொண்டிருந்தது கிறிஸ்தவர்களாயிருக்கவில்லை. அது பக்தியுள்ள மத சம்மந்தமான ஜனங்களாயிருந்தது. அது வைதீக யூதர்கள், தெய்வீகத்தில் பாண்டித்தியம் பெற்ற வேதபண்டிதர்கள் போன்றவர்கள், அவர்கள் தான் அவரைக் குறித்தும், அவருடைய கிரியைகளைக் குறித்தும் பரியாசம்பண்ணிக்கொண்டு, தேவனுடைய கிரியைகளை, “அதைச் செய்கிறது ஒரு அசுத்த ஆவி” என்றும் கூறிக்கொண்டிருந்தனர். 318 இன்றைக்கு எத்தனை பேர் D.D.D., Ph.D. போன்ற படங்களைப் பெற்று தங்களுடைய பெயருக்குப் பக்கத்தில் போட்டுக் கொண்டு பரிசுத்த ஆவியை தூஷிக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? எத்தனை மகத்தான, விறைப்பான வைதீகர்கள், கத்தோலிக்கர்கள், பிராட்டஸ்டெண்டுகள், வீதியில் நடந்து செல்லும்போது மெருகேற்றப்பட்ட மேதைகளாய், மிகுந்த திறமை சாலியாயிருக்கின்றபடியால் பரிசுத்த ஆவியின் கிரியையைக் குறித்து பரியாசம்பண்ணுகிறார்கள்? அது உண்மையே. ஆனால் அவர்கள் பரிசுத்த ஆவியைக் குறித்து பரியாசம் பண்ணுகிறார்கள், ஆகையால் அவர்கள் அதை தூஷிக்கிறார்கள். ஆனால் மீண்டும் பிறந்த ஒரு கிறிஸ்தவனால் அதைச் செய்யமுடியாது. அவன், “அது என்னுடைய சகோதரன். அது ஜீவனுள்ள தேவனுடைய ஆவியாயிருக்கிறது” என்று கூறுவான். அது உண்மை. ஒரு கிறிஸ்தவனால் பரிசுத்த ஆவியை தூஷிக்க முடியாது. 319 அது பரிசுத்த ஆவியைத் தூஷிக்கிற பாவியாய் உள்ளது; அவிசுவாசி, பாவி, “ஒரு அவிசுவாசி”. இரண்டு காரியம் மாத்திரமே உண்டு: நீங்கள் ஒரு விசுவாசியாயிருக்கிறீர்கள் அல்லது ஒரு அவிசுவாசியாயிருக்கிறீர்கள். 320 இப்பொழுது, இது உண்மையாகவே புண்படுத்தும்படியாயுள்ளதால், இங்கே கவனியுங்கள். என்னை எப்பொழுதுமே தொல்லைப்படுத்திக் கொண்டுவந்திருந்த ஒரு காரியத்தைக் குறித்து ஒரு தரிசனம் கண்டிருந்தேன். அநேக வருடங்களுக்கு முன்னர் நான் அதைக் கண்டேன். நான், “ஓ, ஒரு மனிதன் ஒரு முறை பரிசுத்த ஆவியியைப் பெற்று, அதன் பின்னர் பின்வாங்கிப் போவானேயானால், அப்பொழுது அவன் என்றென்றைக்குமாய் இழக்கப்பட்டவனாயிருப்பான்” என்றேன். என்னால் இதை மற்றவர் புரிந்துக்க்கொள்ளும்படிக்கு எடுத்துக் கூற முடியவில்லை. 321 நான், “‘என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை, நான் அவர்களை கடைசி நாளில் எழுப்புவேன். ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை?’ என்று ஏன் இந்தவிதமாய் அது வேதத்தில் கூறப்பட்டுள்ளது? அது இதனோடு எப்படி வேறுபடுகிறது? என்னால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லையே, ‘ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டு மறுதலித்துப் போனவர்களை புதுப்பிக்கிறது கூடாத காரியம் என்று உள்ளதே.’ எனவே நான், ‘ஏதோக் காரியம் தவறாயுள்ளது. என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை’” என்று எண்ணினேன். நான் அநேக வருடங்களுக்கு முன்பு ஒரு சிறு பெந்தேகோஸ்தே கூட்டத்திற்கு சென்றிருந்தேன். 322 இன்றிரவு அதை நினைவில் வைத்திருப்பவர் யாருமே சபையில் இல்லை என்று நான் யூகிக்கிறேன். அநேக ஆண்டுகளுக்கு முன்னர், இது கிட்டத்தட்ட கூடாரம் கட்டப்பட்ட சமயத்தில் நிகழ்ந்ததாய் உள்ளது. அநேகமாக அங்கே பின்னால் அமர்ந்துள்ள சகோதரன் கிரஹாம் அல்லது வேறு யாராவது நினைவில் வைத்திருக்கலாம். சகோதரர்களே, நீங்கள் முதலில் இங்கே இருந்தீர்களா அல்லது இல்லையா என்றே எனக்குத் தெரியாது. சகோதரன் மகோனி இருந்தார் என்று நான் நினைக்கிறேன். ஆம், எனக்கு திருமணமாவதற்கு முன்னர், இது நிகழ்ந்தது. 323 அந்த வரம் கிரியை செய்தபோது, நான் அதைக் குறித்து பயமடைந்திருந்தேன். அவர்கள் அது பிசாசாயிருந்தது என்று என்னிடத்தில் கூறியிருந்தனர். கர்த்தருடைய தூதன் அதை என்னிடத்தில் கூறும்வரையில் நான் அதை அறிந்து கொள்ளவேயில்லை. 324 நான் மிஷாவாக்கா என்ற இடத்திற்குச் சென்றேன், அங்கு நான் அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தேன், நான் அதுவரையில் அதுபோன்று அதிகமாக சத்தமிடுதலையும், அழுகையையும், தேவனைத் துதித்தலையும் ஒருபோதும் கேட்டதேயில்லை. அப்பொழுது நான், “சகோதரனே, இது பரலோகம்” என்றே எண்ணிக்கொண்டேன். ஓ, எப்படியாய் அவர்கள் மேலும் கீழும் ஓடுவார்கள். 325 அவர்கள் அந்தக் கூட்டத்தை நிறவேற்றுமையின் நிமித்தமாக வடக்கில் நடத்த வேண்டியதாயிருந்தது. அங்கே கறுப்பு நிறத்தவரும், வெள்ளைக்காரரும் ஒன்று சேர்ந்திருந்தனர். அதுவோ P.A of W மற்றும் P.A. of J.C என இரு பிரிவினரும் ஒன்றாய் கலந்த பெந்தேகோஸ்தே ஐக்கியமாயிருந்தது. ஆனால் அவர்கள் மிஷவாக்கா என்ற இடத்தில் அங்கிருந்த சகோதரன் ரோயீ அவர்களுடைய கூடாரத்தில் என்ன ஒரு எழுப்புதல் கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். நான் ஆர்வமுள்ள ஒரு நபராய் அங்கே பின்னால் உள்ள இருக்கையில் அமர்ந்து, இவை எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது நான் அந்தக் காரியங்களை அதற்கு முன் கண்டிராதவனாயிருந்தேன். 326 அங்கே ஒரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருந்தார்…நான் இதை இதற்கு முன்பு பகிரங்கமாகக் கூறினதேயில்லை. அங்கே ஒரு பக்கத்தில் ஒரு மனிதன் உட்கார்ந்துகொண்டிருந்தார், மற்றொரு பக்கத்தில் இன்னொரு மனிதன் உட்கார்ந்து கொண்டிருந்தார், ஒருவர் அந்நிய பாஷையில் பேச, மற்றொருவர் அதை வியாக்கியானித்தார். வித்தியாசமான காரியங்கள் சம்பவிக்கப் போவதாயிருந்ததை அவர்கள் கூறினர். அப்பொழுது இந்த ஒருவர் அந்நிய பாஷையில் பேச, அந்த ஒருவர் வியாக்கியானித்தார். அப்பொழுது நான், “என்னே, அது அற்புதமாயுள்ளதல்லவா!” என்று எண்ணினேன். மேலும் நான், “எவ்வளவு மகிமையாயுள்ளது! அவர்கள் மனுஷ ரூபத்தில் இறங்கி வந்த தூதர்களாயிருக்க வேண்டும்” என்று எண்ணினேன். 327 நான் வீட்டிலுருந்து ஒரு டாலர் எழுபத்தைந்து செண்டுகள் மாத்திரமே எடுத்துக்கொண்டு வந்திருந்தேன், எனவே என்னால்—என்னால்—என்னால் என்னுடைய வண்டிக்கு எரிவாயுவினை மாத்திரம் நிறைத்துக் கொள்ள முடிந்தது. ஆகையால் நான் அந்த இரவு ஒரு சோளவயலில் படுத்து உறங்கினேன். நான் அதைக் குறித்து ஒரு பாகத்தை ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளேன், ஆனால் அதைக் குறித்த எல்லாவற்றையும் எழுதவில்லை, ஏனென்றால் நான் அவர்களுடைய உணர்வினை புண்படுத்த விரும்பவில்லை. எனவே, அந்த இரவு, அவர்கள், “எல்லா பிரசங்கிமார்களும் மேடைக்கு வாருங்கள்” என்றார்கள். அப்பொழுது நான் மேடைக்குச் சென்றேன். அப்பொழுது அங்கிருந்தவர்களிலேயே நான் தான் மிகவும் வாலிபமான பிரசங்கியாராயிருந்தேன். 328 ஆகையால் அடுத்தநாள் காலையில் அவர்கள் என்னை பிரசங்கிக்க வரும்படிக் கேட்டனர். நானே மறைந்து கொண்டேன். அப்பொழுது உங்களுக்கு தெரியுமா, ஒரு கறுப்பு நிறமனிதர், “இதோ அவர் இருக்கிறார்” என்று கூறிவிட்டார். நான் அங்கு உட்கார்ந்திருப்பதை அவர் அம்பலப்படுத்தியபோது, அதைக் குறித்த சம்பவம் உங்களுக்கு நினைவிருக்கும். 329 ஆகையால் அந்த நாளன்று நான் பிரசங்கித்தப் பிறகு, சுற்றி நடந்துகொண்டே, “என்னால் அந்த இரண்டு மனிதர்களையும் சந்திக்க முடிந்தால் நலமாயிருக்குமே” என்று எண்ணினேன். அப்பொழுது அவர்கள் கூட்டம் நடத்தினர். அப்பொழுது ஒருவர் எழுந்து தன் முகம் வெளுத்துப் போகுமளவிற்கு அந்நிய பாஷையில் பேசினார். மற்றொருவர் அந்த வார்த்தைகளுக்கு வியாக்கியானம் அளித்தார். அதாவது, “கர்த்தர் உரைக்கிறதாவது, ‘ஒரு குறிப்பிட்ட நபர் இன்னார்-இன்னார், இன்ன-இன்ன பெயரைக் கொண்டவர் இங்கே இருக்கிறார், அவர் இதை, இன்னின்ன-இன்னின்ன காரியத்தைச் செய்ய வேண்டும்”’ என்று கூறினார். சகோதரனே, அது உண்மையாயிருந்தது. பின்னர் மற்றொருவர் எழும்பி அந்நிய பாஷையில் பேச, இவர் வியாக்கியானித்தார். 330 எனவே நான், “ஓ, என்னே, இது அற்புதமாயில்லையா!” என்று எண்ணினேன். ஆகையால் அந்த நாளில் நான் இவ்வாறு எண்ணிப், பின்னர் வெளியே போய் ஜெபித்தேன். மேலும் நான், “கர்த்தாவே, நீர் அதை எனக்காக மீண்டும் செய்கிறீரோ” என்று எண்ணினேன். அப்பொழுது தரிசனங்களை என்னவென்று அழைப்பது என்று எனக்குத் தெரியாமலிருந்தது. 331 நான் வெளியே போய் ஜெபித்தேன், மேலும் எனக்கு உதவிசெய்யும்படியாய் கர்த்தரை வேண்டிக்கொண்டேன். நான் கட்டிடத்தை சுற்றி நடந்தபோது, நான் அவர்களில் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. இப்பொழுது, கர்த்தர் காரியங்களை அறிந்து கொள்ளும்படியான ஒரு வழியைக் எனக்கு கொடுக்கிறார். அப்பொழுது நான் அவருடைய கரத்தைக் குலுக்கினேன். மேலும் நான், “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? உங்களுடைய பெயர் என்ன?” என்று கேட்டார். அப்பொழுது நான், “பிரான்ஹாம்” என்றேன். அதற்கு அவரோ, “ஓ, நீங்கள் தானே இக்காலையில் பிரசங்கித்த அந்த வாலிப நபர்” என்றார். அப்பொழுது நான், “ஆம், ஐயா” என்றேன். 332 மேலும் நான் அவரோடு உரையாடலை நிகழ்த்துகையில், நான் அவருடைய ஆவியைப் பற்றிப் பிடித்தேன். அவர் ஒரு அசலான கிறிஸ்தவனாயிருந்தார், ஒரு சுத்தமான கிறிஸ்தவ சகோதரனாயிருந்தார். அவர் ஒரு விசுவாசியாயிருந்தார் என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். நான், “ஓ, இது அற்புதமாயிருக்கிறதல்லவா!” என்று எண்ணினேன். 333 அப்பொழுதிலிருந்து ஏறக்குறைய ஒரு மணி நேரத்தில், அங்கே ஒரு காரின் அருகே, காண்பதற்கு அது ஒரு பெரிய மகத்தான காராயிருந்தது, அதன் பின்புறத்தில் “இயேசு மாத்திரமே” என்று எழுதப்பட்டிருந்தது, அதன் அருகே மற்றொரு மனிதன் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுது நான் புறப்பட்டு போய், “ஐயா, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டேன். 334 அதற்கு அவர், “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?” என்றார். மேலும் அவர், “நீங்கள் இந்தக் காலையில் பேசின சகோதரன் பிரான்ஹாம் தானே” என்றார். 335 அப்பொழுது நான், “ஆம், ஐயா. நான் தான்” என்றேன். மேலும் நான், “மகத்தான தேவனுடைய வரம் இரண்டு சகோதரர்களாகிய உங்களில் கிரியை செய்கிறதை கண்டு களிகூருகிறேன்” என்றேன். 336 அதற்கு அவர், “திரு.பிரான்ஹாம் அவர்களே, உங்களுக்கு நன்றி.” என்றார். அப்பொழுது நான் அவருடைய ஆவியை உணரத்துவங்கினேன். அந்த நேரத்தில் ஒரு தரிசனம் உண்டானது. நான் எப்போதாவது ஒரு மாய்மாலக்காரனிடத்தில் பேசியிருந்தேனேயானால், அது அங்கிருந்த அவர்களில் ஒருவரான இவராகத்தான் இருந்தது. அவருடைய மனைவி கறுப்புத் தலைமுடியினையுடைய ஒரு ஸ்திரீயாயிருந்தாள். ஆனால் அவரோ இரண்டு பிள்ளைகளிருந்த ஒரு இளம் பொன்நிறமான தலைமுடியினையுடைய ஒரு ஸ்திரியோடு வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் இவ்வுலகில் ஒரு உண்மையான கிறிஸ்தவராயில்லாமலிருந்தார். 337 அப்பொழுது நான், “என்னத்திற்குள்ளாக நான் வந்துள்ளேன்? நான் தூதர்களுக்கு மத்தியில் இருந்ததாகத்தானே எண்ணியிருந்தேன். இப்பொழுதோ நான் பிசாசுகளிடத்தில் இருப்பதாயுள்ளதே. ஏதோக்காரியம் சம்பவித்துள்ளது. இங்கே ஒரு அசலான கிறிஸ்தவர் ஒருவர் இருந்தார்; இந்த மனிதன் மேல் விழுந்த அதே ஆவி, இந்த மற்றொரு மனிதன் மேலும் விழுந்து கொண்டிருந்ததே” என்று கூறிக்கொண்டேன். மேலும் நான், “இப்பொழுது நான் முற்றிலும் குழப்பமடைந்துள்ளேன்” என்றேன். என்ன செய்வதென்றே எனக்குத் தெரியவில்லை. நான் கதறி, தேவனிடம் கெஞ்சினேன். எதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது எனக்குத் தெரியாமலிருந்தது. 338 அவர்கள் என்னை பற்றி அறிந்து கொள்ள முற்பட்டு…நான் “பரிசுத்த ஆவியை பெற்றிருந்தேனா?” என்று கேட்டனர். இந்த நபர் பெற்றுக்கொண்டார். அதற்கு நான், “இல்லை ஐயா, நீங்கள் அதைப் பெற்றுக்கொண்ட விதமாக அல்ல” என்றேன். மேலும், “நீர் அந்நிய பாஷையில் எப்போதாவது பேசினதுண்டா?” என்று கேட்டனர். அதற்கு நான், “இல்லை, ஐயா” என்றேன். அப்பொழுது, “நீர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை” என்றனர். 339 ஆகையால் நான், “என் சகோதரனே, நீங்கள் அநேகமாக சரியாக இருக்கலாம். நான் அதைப் பெற்றுக்கொள்ளாமலிருக்கலாம், ஏனென்றால் நீங்கள் பெற்றுள்ளதை நான் பெற்றுக்கொள்ளவில்லை” என்றேன். சற்றுக் கழித்து நான் அதைப் பெற்றுக்கொள்ளாததற்கு மகிழ்ச்சியடைந்தேன். 340 ஆகையால் அதன்பின்னர் நான் அதைக் கவனித்தேன், அது செயல்பட்டுக் கொண்டிருந்த விதத்தையும் நான் கண்டேன். 341 ஆகையால், ஒரு நாள், நீண்ட காலத்திற்கு முன், நான் இங்கே ஜெபித்துக்கொண்டிருந்தேன். நான் ஏன் ஜெபித்துக்கொண்டிருந்தேன் என்றும், யாருக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன் என்றும் உங்களுக்கு கூறவுள்ளேன், அது ராய் டேவிஸ் அவர்களுக்காகும். நான் வெளியே இங்கே ஜெபித்துக் கொண்டிருந்தேன், ஏனென்றால் அவர் என்னை “ஒரு கூத்தாடிப் பொம்மை” என்று கூறியிருந்தார். எனவே அதற்காக தேவன் அவரை மன்னிக்கும்படிக்கு நான் ஜெபித்துக்கொண்டிருந்தேன். அவர் காகிதத்தை அச்சடிக்கும் ஒரு அச்சகத்தை பின்னால் வைத்திருந்தார். அவ்வாறு கூறின இரண்டு இரவுகளுக்குப் பிறகு அவர்கள் அச்சடித்துக் கொண்டிருக்கையிலே அந்த அச்சகம் தீப்பற்றி எரிந்துபோய்விட்டது. 342 எனவே நான் கிரீன் மில்லிற்கு பின்னால் இருந்த ஒரு பழைய குகையில் அங்கே நின்று கொண்டிருந்தேன். பின்னர் நான் அங்கிருந்து நடந்தேன். நான் இரண்டு நாட்களாக அங்கே பின்னால் ஜெபித்துக் கொண்டிருந்தேன். அண்மையில் நான் சகோதரன் உட் அவர்களுக்கு காண்பித்த பழைய மரத்துண்டின் மேல் என்னுடைய வேதாகமத்தை வைத்திருந்தேன். என்னுடைய வேதாகமத்தை அங்கு வைத்தேன். பின்னர் கால்களை அகற்றினவாறு அந்த கட்டையின் மீது அமர்ந்தேன். அப்பொழுது காற்று வீசினது. எனவே நான், “நீண்ட நேரமாக அந்த குகையின் பின்னே இருப்பதால், நான் ஒரு சிறு பகுதியை சற்று வாசிக்கலாம்” என்று எண்ணினேன். ஆகையால் நான் வேதாகமத்தை எடுத்து, வாசிக்கத் துவங்கினேன், அது இந்த அதிகாரமாயிருந்தது. நான் வாசிக்கத் துவங்கினேன், அப்பொழுது நான் வியப்புறத் துவங்கினேன். புரிகிறதா? ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப் போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். 343 நான், “அங்கு அந்த வேதவாக்கியம் உள்ளதே” என்று எண்ணினேன். ஆனால் ஏதோ ஒன்று என்னோடு அழுத்தமாயிருந்தது. அப்பொழுது நான், “துவக்கத்தில் அவர் திரும்பப் பேசினது இதோ உள்ளது, ‘செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல்…போன்றவற்றைப் போடாமல் என்று துவக்கத்தில் கூறியிருந்தார். மனந்திரும்புதலின் அஸ்திபாரத்தைப் போடாமல,’ இங்கே அவர், ‘புதியதாய், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது. ஆனால் இந்தக் காரியங்களை மீண்டும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக.’” என்று கூறுகிறார். அதன்பின்னர் நான் வாசிக்கத் துவங்கினேன். அதன்பின்னர் நான் அடுத்த வசனத்தை வாசித்தேன். எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. 344 நான் அதை வாசிக்கும்போது, ஏதோ ஒன்று என்னைக் குலுக்கியது. அப்பொழுது நான், “கர்த்தாவே, அது ராய் டேவிஸை சார்ந்ததாயிருக்கவில்லையே. நீர் ஏன் அதைச் செய்தீர்?” என்று எண்ணினேன். 345 நான் மற்றொரு பாகத்தைத் திருப்பத் துவங்கினேன். நான் அதற்கு மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டியதாயிருந்தது, “ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டு, மறுதலித்துப் போனவர்களை புதுப்பிக்கிறது கூடாத காரியம்” என்ற அந்த வசனத்தினூடாக மீண்டும் படிக்க வேண்டியதாயிருந்தது. 346 அப்பொழுது நான், “கர்த்தாவே, இது என்னவாயிருக்கிறது? கர்த்தாவே, நீர் என்னப் பொருட்படுத்திக் கூறுகிறீர்?” என்று எண்ணிப் பார்த்தேன். 347 அதன்பின்னர் நான் திரும்பி அதன்பேரில் ஜெபிக்கும்படிக்கு என்னுடைய குகைக்குள்ளாகச் சென்றேன். நான் ஜெபித்த போது, நான் ஒரு உலகம் சுழலுவதைக் கண்டேன். அந்த முழு உலகமும் மிக அருமையாக முழுமையாக உழப்பட்டிருந்தது. அப்பொழுது ஒரு மனிதன் வெள்ளை வஸ்திரம் தரித்தவனாய் அதைச் சுற்றிச் செல்வதையும், அவன் தன் கரத்தில் ஒரு பையினை வைத்திருந்ததையுங் கண்டேன். அவன் அங்கு சுற்றி நடந்து செல்லுகையில், விதைகளை விதைத்துக் கொண்டிருந்தான். அவன் பூமியின் வளைவைச் சுற்றி நடந்து சென்றான். அவன் சுற்றிலும் விதைத்தவுடனே, இதோ ஒரு நபர் உண்மையாகவே கறுப்பு நிற ஆடைகளை அணைந்தவனாய் வந்தான், காண்பதற்கு திறமைசாலியான ஒரு நபரைப் போன்றிருந்து, இந்த விதமாய் மெல்ல நழுவி வந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவனும் விதைகளை வைத்திருந்தான். அவன் பூமியின் வளைவைச் சுற்றிச் சென்றபோது, முந்தினவன் விதைத்ததற்கு பின்னாலேயே இவன் ஏதோ ஒன்றை தூவிக்கொண்டேயிருந்தான்; ஒவ்வொருவரும் தனித்தனியே விதைத்ததை கவனியுங்கள். அப்பொழுது நான் நின்று அந்த தரிசனத்தைக் கவனித்தேன். 348 அவன் உலகத்தைச் சுற்றிலும் விதைத்துவிட்டுச் சென்றபோது, ஒரு மகத்தான, பெரிய பயிர் விளைச்சல் உண்டானது. அது கோதுமையாயிருந்தது. அதன்பின்னர் கோதுமைகளுக்கிடையே களைகளும், களைப்போன்ற மற்ற செடிகளும் முளைத்திருந்தன. 349 அப்பொழுது ஒரு வறட்சி உண்டானது, ஓ, எப்படியாய் அந்த சிறு கோதுமை மணிகள் தங்களுடைய சிறிய தலைகளை கீழே தொங்க விட்டுக் கொண்டு, தண்ணீருக்காக தாகமாயிருந்து கொண்டிருந்தன. அதேவிதமாக இந்த களைகளும் தங்களுடைய தலைகளைத் தொங்கவிட்டுக்கொண்டு, அவைகளும் தண்ணீருக்காக தாகமாயிருந்துகொண்டிருந்தன. ஒவ்வொருவரும் மழைக்காக ஜெபித்துக்கொண்டிருந்தனர். சற்று கழித்து ஒரு பெரிய மேகம் உண்டாக்கி பூமி முழுவதிற்கு தண்ணீரைப் பொழிந்தது. அப்பொழுது அந்த களைகள் குதித்தெழும்பி “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!” என்று ஆரவாரமிடத் துவங்கின. 350 அதேவிதமாக இந்த கோதுமை மணிகளும் குதித்தெழும்பி, “தேவனுக்கு மகிமை! கர்த்தருக்கு ஸ்தோத்த்திரம்!” என்று ஆரவாரமிடத் துவங்கின. 351 அப்பொழுது வேதவாக்கியம் எனக்கு தோன்றிற்று, அது மத்தேயுவின் புத்தகம் 5-ம் அதிகாரம், 45-ம் வசனத்தில் காணப்படுகிறது. இயேசு மத்தேயு 5:45-ல் என்னக் கூறினார் என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது நாம் வாசிக்கையில் கூர்ந்து கவனியுங்கள். மத்தேயு 5-ம் அதிகாரம் 45, 46 வது வசனம்; 44-வது வசனத்திலிருந்து துவங்குவோம். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். 352 ஆகையால், நீங்கள் பாருங்கள், கோதுமையை வளரச் செய்கிற அதே மழையானது களையையும் வளரச் செய்கிறது. ஆகையால் நான் அந்தக் காட்சியைப் புரிந்துகொண்டேன். அங்கேதான் உங்களுடைய மாம்சபிரகாரமாக அறிக்கை செய்பவன் சபையில் இருக்கிறான். ஆனால் அவனுடைய கனிகள்…அவன் சத்தமிடலாம், குதிக்கலாம், நடனமாடலாம், அந்நிய பாஷையில் பேசலாம்; ஆனால் அவனுடைய கனிகள்; அவன் ஒரு களையாயிருக்கிறான். அங்கே மற்றொருவன் இருக்கிறான், அவனும் அதே ஆவியைப் பெற்றுள்ளான். பரிசுத்த ஆவியானது ஒரு கூட்ட ஜனங்களுக்குள் விழும்போது, ஒரு மாய்மாலக்காரனாலும் பரிசுத்த் ஆவியினால் சத்தமிட முடியும், எனவே கோதுமைக்கென்று அனுப்பப்பட்ட அதே மழையினால் களையும் உயிர்வாழ முடியும். அதைத்தான் பவுல் இங்கே பேசிக்கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு களையை கோதுமையாக மாற்றுவதென்பதோ அல்லது ஒரு கோதுமையை ஒரு களையாக மாற்றுவதென்பதோக் கூடாதக் கூடாத காரியம். நீங்கள் அதைப் புரிந்துகொண்டீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] ஏனெனில், ஒரு தரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், மறுதலித்துப்போனவர்கள்…அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம். அவன் என்னக் கூறினான் என்பதைக் கவனியுங்கள். எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது… முள்செடிகளையும் முள் பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும்… ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன் பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல்…என்பவைகளாகிய அஸ்திபாரத்தைப் மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. 353 பாருங்கள், அந்த நாட்களில் மாம்சபிரகாரமான விசுவாசி இருந்ததுபோன்றே, அது இன்றைக்கும் உள்ளது, எனவே அவர்கள், “நல்லது, நான் சபையைச் சார்ந்திருக்கிறேன், நான் மனந்திரும்பியிருக்கிறேன். நான்—நான் மேடையின் மேலே வந்தேன், நான் ஒரு அறிக்கை செய்தேன். நான் ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருக்கிறேன்” என்றே கூற விரும்புகின்றனர். பாருங்கள், அவர்கள் அந்த மாம்சபிரகாரமான சீர்த்திருத்தல்களையேப் போடுகிறார்கள். அது என்ன செய்கிறது? அது களைகளை உண்டுபண்ணுகிறது. 354 பூரணமாகுதல் என்ன செய்கிறது? அது கோதுமையாயிருக்கிறது. கோதுமை தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. அவர் அதைத் தம்முடைய வார்த்தையாக உபயோகப்படுத்துகிறார். அது ஒரு வித்தாயிருக்கிறது. எனவே அது வித்தைப் பிறப்பிக்கிறது. 355 அது உங்களுடைய இருதயத்தில் என்ன வித்து விதைக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்ததாயிருக்கிறது. நீ நரகத்தைக் குறித்துப் பயப்படுகின்ற காரணத்தால் சபைக்கு வருவாயானால், நீ நரகத்திற்கு செல்ல விரும்பாத காரணத்தால்—நீ நரகத்திற்கு செல்ல விரும்பாததால் சபையைச் சேர்ந்து கொள்வாயானால், நீ இன்னமும் ஒரு களையாயிருக்கிறாய். நீங்கள்—நீங்கள் புகழ்பெற்றவராயிருக்க வேண்டும் என்பதற்காக சபையைச் சேர்ந்து கொள்வீர்களேயானால், நீங்கள் இன்னமும் ஒரு களையாயிருக்கிறீர்கள். நீங்கள் செய்யப்பட வேண்டிய இந்த எல்லா சடங்காச்சாரக் காரியங்களையும் செய்திருப்பீர்களேயானால், அவையாவற்றையும் நீங்கள் பெற்றிருப்பீர்களேயானால், அப்பொழுது நீங்கள் இன்னமும் ஒரு களையாகவே இருக்கிறீர்கள். 356 ஆனால் ஒரு உண்மையான, அசலான கிறிஸ்தவன் உலகம் மரித்ததாகி, கிறிஸ்து இயேசுவுக்குள் ஒரு புதிய சிருஷ்டியாகும்வரை பூரணமாகுதலை நோக்கித் தொடருகிறான். அப்படியானால் அந்த மனிதன் எப்பொழுதுமே விழுந்து போவது கூடாத காரியமாயுள்ளது. வேதம் என்னக் கூறியுள்ளது! அது எப்படி மற்ற வேதவாக்கியங்களோடு ஒப்பிடப்படுகிறது என்பதைப் பார்த்தீர்களா? அது எப்படி அங்கே சரியாக அதனுடைய ஸ்தானத்தில் போடப்படுகிறது என்பதைப் பார்த்தீர்களா? 357 அது இங்கே, “ஒரு மனிதன் ஒரு முறை இரட்சிக்கப்பட்டுவிட்டால் அவன் ஒருபோதும் இழக்கப்பட முடியாது” என்றும், மேலும் இங்கு வந்து, “ஆனால் நீங்கள் இழக்கப்பட்டிருந்தால் அல்லது தூஷிக்கிறவராயிருந்தால், புதுப்பிக்கிறது கூடாத காரியம்,” என்றும் கூறமுடியும்? நிச்சயமாக, நீங்கள் தூஷிக்கிற ஒருவராயிருந்தால், அப்பொழுது நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கவில்லை. 358 “ஆதலால் தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டான்.” பரிசுத்த யோவான் 4…இல்லை I யோவான் 4. கிறிஸ்துவின் ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவை “சபிக்கப்பட்டவன்” என்று சொல்லமாட்டான். கிறிஸ்தவ சபையில் உள்ள ஒவ்வொரு தேவனுடைய ஆவியும் தேவன் கூறின ஒவ்வொரு காரியத்தோடும் இணங்குகிறது. 359 நாம், “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார். அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்” என்று கூறுகிற வசனத்தை இங்கே வாசிக்கிறோம். 360 பண்டைய மாம்ச் சிந்தை, “அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. நான் வேதபண்டிதர். ஜோன்ஸ்” என்று கூறுகிறது. புரிகிறதா? “தெய்வீக சுகமளித்தல் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. இதயப் பூர்வமான மார்க்கம் என்ற அப்படிப்பட்ட ஒரு காரியமே கிடையாது. நீங்கள் உணர்வசப்படுகின்ற ஒரு கூட்டமாயிருக்கிறீர்கள். நீங்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாயிருக்கிறீர்கள். பாருங்கள், அங்கே அதற்கு உள்ளதெல்லாம் அவ்வளவுதான். அதற்கு வேறெந்தக் காரியமும் கிடையாது. நாங்கள் பிரஸ்பிடேரியன்களாயிருக்கிறோம். நாங்கள் லுத்தரன்களாயிருக்கிறோம்,” அல்லது அது என்னவாயிருந்தாலும் சரி, “நாம் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம் என்பதை நாம் அறிவோம்.” 361 ஆனால் தேவனுடைய ஆவி என்னக் கூறுகிறது? இயேசு கிறிஸ்து மாறாதவராய் இங்கிருக்கிறாரே! “ஆமென்,” என்றே தேவனுடைய ஆவி கூறுகிறது. அது உடனடியாக தேவனுடைய வார்த்தையோடு இணங்குகிறது. ஆம் ஐயா. அது சரியாக அங்கே உள்ளது. இப்பொழுது நான் எதைப் பொருட்படுத்திக் கூறுகிறேன் என்று புரிகிறதா? 362 பவுல், “இந்த மாம்சபிரகாரமான சீர்திருத்தங்கள் செத்த கிரியைகள்” என்றான். 363 ஆனால் ஜீவன் எங்கே உண்டாகிறதென்றால், இதுதான் பரிபூரணமாகும், “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான். நான் அவனுக்கு நித்திய ஜீவனை அளித்து, அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.” அவ்வாறு கெட்டுப் போகமுடியாது. 364 ஆகையால் இங்கே அது என்ன செய்கிறதென்றால்—அது என்ன செய்கிறது? அது ஜனங்களை உறுதியிழக்கச் செய்கிறது என்று ஜனங்கள் எண்ணுகிறார்கள். சகோதரனே, வெறுப்புக்காட்டும் முகச்சளிப்பு கொண்ட ஒரு சர்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் நாம் தேவனுக்கு ஊழியம் செய்கிறதில்லை. ஒரு கறுப்பு பாம்பு போன்ற சாட்டையைக் கொண்டு உங்களை சுற்றித் துரத்துகிற இந்த நபர்களில் ஒருவராய் தேவன் இருக்கவில்லை. அவர் ஒரு பிதாவாயிருக்கிறார். அவர் அன்பாயிருக்கிறார். தேவன் அன்பாயிருக்கிறார். வேதம் பரிசுத்த யோவானில், “அன்புள்ளவன் தேவனால் உண்டாயிருக்கிறான்” என்று உரைத்துள்ளது. 365 நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள். நான் வெளியே சென்று இன்றிரவு மது அருந்திவிட்டிருந்தால், நான் தேவனை நேசிக்கமாட்டேன். நான் என்னுடைய ஜீவியத்தில் ஒரு போதும் மது அருந்தியதேயில்லை. ஆனால் நான் வெளியே சென்று, மது அருந்திவிட்டிருந்தால், அப்பொழுது நான் ஒரு சவுக்கடியைப் பெற்றுக் கொள்ளப் பயப்படமாட்டேன். நான் அதைச் செய்யப் போகவில்லை, நான் போகவில்லையென்பதற்கு அதுவல்ல காரணம். நான் அதைச் செய்யாததற்கு காரணம் நான் அவரை நேசிக்கிறேன் என்பதே காரணமாயுள்ளது. அவர் என்னை நேசிக்கிறார். அது நியாயப்பிரமாணத்தின் கிரியைகளல்ல. அது நான் செய்ய வேண்டிய ஏதோ ஒரு காரியமாய் இருக்கவில்லை. அது அவர் எனக்காக ஏதோ ஒன்றை ஏற்கெனவே செய்துள்ளார் என்ற காரணமாயுள்ளது. நான் அதற்காக அவரை நேசிக்கிறேன். அங்குதான் உங்கள் காரியம் உள்ளது. 366 ஆகையால், “நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை” என்று ஆவியினாலே வாக்களிக்கப்பட்டுள்ளது. அவர் பொய்யுரைத்தாரா அல்லது அவர் உண்மையைச் சொன்னாரா? அவர் உண்மையைக் கூறினார். ஆகையால் இது எப்படி வியாக்கியானிக்கப்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்களா? ஒரு மனிதன் ஒரு முறை கிருபையில் இரட்சிக்கப்பட்ட பின்னர், அவன் விழுந்துபோவதென்பது கூடாதக் காரியமாயுள்ளது. அவனால் விழுந்து போக முடியாது. அப்படி அவனால் நிச்சயம் விழுந்து போக முடிந்தால், அப்பொழுது அவன் மீண்டும் மனந்திரும்பாமல், மீண்டும் பழைய கிரியைகளைத் திரும்பவும் செய்ய அந்த ஸ்தானத்திற்கு செல்வான். 367 ஆகையால் நீங்கள் எல்லோரும் ஒரு எழுப்புதலிலிருந்து மற்றொரு எழுப்புதலுக்கு, ஒரு இடத்திலிருந்து பின்னர் மற்றொரு இடத்திற்கு உலகப்பயணம் மேற்கொள்கிறீர்கள். நீங்கள் ஸ்திரப்படவில்லை என்பதை நீங்கள் காண்கிறதில்லையா? நீங்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கவில்லை. இப்பொழுது, நிச்சயமாக…நீங்களோ, “சகோதரன் பிரான்ஹாம், எனக்குத் தெரியாது…” என்று கூறலாம். நிச்சயமாகவே தேவன் கொண்டுள்ள ஊழியத்தை எனக்கு அளிக்காவிட்டால், நான் தவறாயிருப்பேன். அது வேதவாக்கியத்தால் நிரூபிக்கப்படாவிட்டால், அப்பொழுது அது தவறாகும், ஆனால் இங்கே அதை ஆதரிக்கும்படியான வேதவாக்கியம் உள்ளதே. 368 சபையானது ஒருபோதும் ஒரு இடத்தை தவறவிட்டதேயில்லை…ஜனங்கள் போய் சபையில் சேர்ந்துகொண்டு, வம்புப்பண்ணி, சண்டைப்போட்டு, குழப்பம் விளைவித்து மற்றும் ஒவ்வொரு காரியத்தையும் செய்து, மாம்சப்பிரகாரமாக எந்தவிதமாக வேண்டுமானாலும் ஒரு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு, “ஓ, ஆம், நான் ஒரு கிறிஸ்தவன்” என்று கூறுகிறார்கள். 369 ஒரு பெண்மணி தன்னுடைய கணவன் ஒரு மனிதனோடு ஓடிக்கொண்டிருந்தான் என்று என்னிடத்தில் அவள் கூறின அதைக் குறித்த ஒரு அறிக்கையை நான் இன்றைக்கு கேட்டேன். அவள் ஒவ்வொரு இடமாகச் சென்று அவர்களைப் பிடித்துவிட்டாளாம். அந்த ஸ்திரீ, “‘நான் ஒரு கிறிஸ்தவன்’ என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும்படிச் செய்யப்போகிறேன்” என்றாள். 370 ஞாயிறு காலை இங்கே பிரசங்கிக்கிற ஜிம்மி ஆஸ்பார்ன் அவர்களை இங்கே நோக்கிப் பாருங்கள்; வாரம் முழுவதும் பூகி — வூகி என்று இசைப்பேழையில் ஆராவார இசையை இசைத்துக்கொண்டும், ராக் அண்டு ரோல் என்ற நடனத்தை ஆடிக்கொண்டும், மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்தையும் செய்துகொண்டிருக்கிறார். 371 எல்விஸ் பிரஸ்லியை நோக்கிப் பாருங்கள், அவர் 1947-ம் ஆண்டின் புதிய யூதாஸ் காரியோத்தாயிருக்கிறார். அவன் அசெம்பலீஸ் ஆப் காட் என்ற பெந்தேகோஸ்தே ஸ்தாபன சபையில் பரிசுத்த ஆவிக்காக அந்நிய பாஷைப் பேசி, கடந்த ஐம்பது வருடங்களில் மதுபானக் கடைகள் நரகத்தில் வாதிக்கப்பட அனுப்பிய ஆத்துமாக்களைப் பார்க்கிலும் அதிகமான ஆத்துமாக்களை நரகத்திற்கு அனுப்பிவிட்டான். உலகம் முழுவதும் உள்ள பத்தொன்பது வயதுக்குட்பட்ட சிறு பிள்ளைகள், சிறு பெண்பிள்ளைகள் தங்களுடைய உள்ளாடைகளை கழற்றி அவனுடைய கையெழுத்தைப் பெற அதனை மேடையின் மேல் எரிகிறார்கள். அவனுடைய இடுப்புக் கீழான அவனுடைய மிக இழிவான அங்க அசைவுகளை அவர்கள் தொலைக்காட்சியில் காட்டமாட்டார்கள். அந்நிய பாஷையில் பேசுவது பரிசுத்த ஆவியைப் பெற்றதற்கான அத்தாட்சியா? ஓ, சகோதரனே, பரிசுத்த ஆவி அங்கே இருந்தால், அது அந்த விதமாக செயல்படாது. நீங்கள் அதைப் பார்க்கிலும் மேலானதை அறிந்துகொள்வீர்கள். நிச்சயமாக அதைப் போன்று செயல்படாது. தேவன் தூய்மையையும், துப்புரவையும், பரிசுத்தத்தையும் நேசிக்கிறார். 372 நான் என்னை ஒரு கிறிஸ்தவனாக்கிக் கொள்ள சுத்தமாக, தூய்மையாக, பரிசுத்தமாக நடந்துகொள்கிறதில்லை. ஆனால் கிறிஸ்து எனக்குள்ளிருந்து, எனக்குள்ளாக ஜீவிக்கிறார். நான் அவரை நேசிக்கிறேன். நான் எந்தக் காரியத்தையாவது தவறாக செய்தால், அது என்னை அங்கேயே கண்டிக்கிறது. அப்பொழுது நான், “தேவனே, என்னை மன்னியும்” என்று கூறுகிறேன். நான் ஒவ்வொரு நாளும், அனுதினமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். நீங்களும் கூட தவறு செய்கிறீர்கள். எனவே நிச்சயமாக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும். 373 ஆனால் இப்பொழுது நீங்கள் மாம்சப்பிரகாரமானவர்களாயிருந்தால், நீங்கள் அப்படியே பின்னாலேயே காத்திருந்து, “ஆ, அதெல்லாம் பரவாயில்லை, நான் சபையை சார்ந்தவன்” என்று கூறுவீர்கள். புரிகிறதா? பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளாமலிருக்கும்போது, அப்பொழுது நீங்கள் தூஷிக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் அதைக் குறித்து பரிகசித்து, அதைப், “பொல்லாத ஆவி” என்று அழைக்கிறீர்கள். மேலும், “அது ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள்” என்றும் கூறுகிறீர்கள். அப்பொழுது நீங்கள் உங்களை கிருபைக்கும் நியாயத்தீர்ப்பிற்குமிடையே வேறு பிரித்துக் கொள்ளுகிறீர்கள், அப்பொழுது நீங்கள் என்றென்றைக்குமாய் முடிவுற்றுவிடுகின்றீர்கள். 374 இயேசு, “அதற்கு விரோதமாக ஒரு வார்த்தைக் கூறினால், அது இம்மையிலும், மறுமையிலும் மன்னிக்கப்படாது” என்றார். ஒரு கிறிஸ்தவன், ஆவியினால் பிறந்தவன் அதைக் குறித்து பொல்லாங்காய்க் கூறமுடியாது, ஏனென்றால் அந்த தேவ ஆவியால் பொல்லாங்கு கூற முடியாது. அது வார்த்தையோடு ஒவ்விப்போகிறது. அது உண்மை. 375 அந்தக் காரணத்தினால்தான் ஜனங்கள் என்னிடத்தில் கூற முயற்ச்சிகிறார்கள், அங்குள்ள அந்த அக்கினி ஸ்தம்பத்தை, இங்கே நம்மோடு பிரசன்னமாயிருக்கிறதை, அதை அவர்கள், “அது பிசாசாயிருந்தது” என்றும், அதை “அது வெறுமென கட்டுக்கதையாயிருந்தது” என்று இவை எல்லாவற்றையும் கூற முயற்ச்சிக்கிறார்கள். ஆனால் அது கட்டுக்கதையல்ல என்பதை புகைப்படக் கருவி நிரூபித்துவிட்டது. அந்த செயல்கள் சரியாக வேதாகமத்தில் காணப்படுகின்றன, பவுலை தமஸ்குவிற்கு போகும் அவனுடைய வழியில் சந்தித்தது அதே அக்கினி ஸ்தம்பமேயாகும். முன் காலத்தில் அவர் அங்கு செய்த இந்த எல்லாக் காரியங்களையும் சரியாக அதேவிதமாக வேதாகமத்தின் மூலம் மீண்டும் செய்து கொண்டிருக்கிறார். அவர் கிறிஸ்துவாய், தேவ குமாரனாயிருக்கிறார். 376 நாம் மீண்டும் பிறந்திருக்கும்போது, நாம் நித்திய ஜீவனை உடையவர்களாயிருக்கிறபடியால், கெட்டுப்போக முடியாது. எனவே ஒரு மனிதன் விழுந்துபோவது கூடாதகாரியமாகும். அதைத்தான் வேதம் கூறியுள்ளது. 377 பவுல் என்னக் கூறுகிறார் என்பதை இப்பொழுது கவனியுங்கள். நான் அதில் மீதமுள்ள பாகத்தை வாசிப்பேன், அது இப்பொழுது சரியாக பொருள்படத் தோன்றுகிறதா என்று பார்ப்போம். நாம் அப்படியே ஒரு நிமிடம் தொடர்ந்து பார்ப்போம். 8-வது வசனம். முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு.(அது அவிசுவாசியாயுள்ளது.) 378 இப்பொழுது பவுலைக் கவனியுங்கள். “பிரியமானவர்களே…” இப்பொழுது அவன் நியாயப்பிரமாணத்தின் கீழ் கொண்டுவர முயற்சிப்பவர்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதே சமயத்தில் அவர்கள் தங்களால் இருக்க முடிந்தளவு சமயச் சடங்காச்சாரங்களைக் கொண்டிருந்தனர். அவர்கள் ஞானஸ்நானம், கைகளை வைக்குதல் மற்றும் இந்த எல்லாக் காரியங்களையும் உடையவர்களாயிருந்தனர். பிரியமானவர்களே,…நன்மையானவைகளும்,…உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம். அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. இப்பொழுது அவன் கூறுவதற்கு செவிகொடுங்கள். …நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவைகளுமான காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம். ஏனென்றால், உங்கள் கிரியையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ் செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே. 379 அவர் என்னத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் என்று புரிகிறதா? அவர் கிறிஸ்தவர்கள் விழுந்து போவதைக் குறித்தும், அவர்கள் திரும்பி வருவது கூடாதக் காரியம் என்பதைக் குறித்தும் பேசிக்கொண்டிருக்கவில்லை. அவர் மாம்சபிரகாரமான விசுவாசிகள் சீர்திருத்த முறைமையினூடாக செல்வதைக் குறித்தேப் பேசிக்கொண்டிருக்கிறார். “ஆனால்,” அவன், “மீண்டும் பிறந்த உங்களிடத்தில், கிறிஸ்தவர்களாயிருக்கிற உங்களிடத்தில், பிரியமானவர்களே, நன்மையானவைகள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம். நீங்கள் அந்தக் காரியங்களைக் கூறுகிறதில்லை. நீங்கள் அந்தவிதமான ஜீவியம் ஜீவிக்கிறதில்லை. நீங்கள் கிறிஸ்துவோடு பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள்.” என்றான். இங்கே பின்னால் அவன் என்னக் கூறினான்? இப்பொழுது இந்தக் காலையில் நாம் வாசித்திருந்த எபிரெயர் 10-ம் அதிகாரத்திற்கு, நாம் மீண்டும் செல்வோமாக. [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] 380 அப்படியே ஒரு நிமிடம் நாம் இதைப் புரிந்துகொள்வோமாக, வேதவாக்கியம் வேதவாக்கியத்தோடு ஒத்துப்போகும்படி, இதை ஆதரிக்க இது என்னக் கூறுகிறது என்பதைக் கவனியுங்கள். நாம் எபேசியர் 4-ஐ பார்ப்போமாக. எபேசியர் 4:30. நாம் வாசித்து, அது என்னக் கூறுகிறது என்று பார்ப்போமாக. …தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். ஊ? நாம் எப்படி அந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். ஒரே ஆவியினால். …நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். அது சரிதானே? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள், ஒரு எழுப்புதலிலிருந்து மற்றொன்று வரையல்ல, ஆனால் சரீர மீட்பின் நாள் வரையில், அந்தவிதமாகத்தான் நீங்கள் முத்திரையிடப்பட்டிருக்கிறீர்கள். ஆகையால், நீங்கள் இழக்கப்பட்டுப் போவதற்கான வழியேக் கிடையாது. 381 நீங்கள் பயமடைந்துள்ளீர்கள். அந்தக் காரணத்தினால்தான் பயம், ஒரு பயம், பயம் சந்தேகத்தோடு சகவாசம் செய்கிறது. அன்பு விசுவாசத்தோடு சகவாசம் செய்கிறது. நான் என் பிதாவை நேசிக்கிறேன். நான் அவரைக் குறித்து பயப்படுகிறதில்லை, ஏனென்றால் நான் அவரை நேசிக்கிறேன். அவர் எனக்கு தீங்கிழைக்கமாட்டார். அவர் எனக்காக நன்மையே செய்வார். நான் அவரைக் குறித்து பயமடைந்திருந்தால், “ஓ, அவர் அதைச் செய்வாரா அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது” என்று பயமடைந்திருந்தால் எப்படியிருக்கும்? புரிகிறதா? 382 ஆனால் நான் அவரை நேசிப்பேனேயானால், “ஆம், பிதாவே, நான் உம்மை நேசிக்கிறேன். நீர் என்னுடைய பிதாவாயிருக்கிறீர் என்பதை நான் அறிவேன், நீர் என்னை நேசிக்கிறீர், நீர் உம்முடைய வார்த்தையை காத்துக்கொள்வீரா என்று நான் பயப்படவில்லை. அது எனக்கு உம்முடைய வாக்குத்தத்தமாயுள்ளது” என்று கூறுவேன். அந்தவிதமாகத் தான் தேவனுடைய ஆவி செய்கிறது. 383 “ஆனால், ஓ, நான் இதைச் செய்திருந்தால், நான் அதைச் செய்திருந்தால்” என்றால், பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமாணங்களைக் கடைப்பிடிக்கின்ற பக்கத்திற்கே மீண்டும் வருகிறீர்கள். ஒருபோதும் பிரமாணங்களை கடைபிடிக்கின்ற பக்கத்திற்கு செல்லாதீர்கள். அது எதிர்மறையான பக்கமாயுள்ளது. 384 உங்களுக்குத் தேவை உறுதியான பக்கமேயாகும். அது ஏற்கெனவே முடிவு பெற்ற ஒரு கிரியையாயுள்ளது. கிறிஸ்து மரித்தார், அவர் மரித்தபோது, பாவம் கொல்லப்பட்டது. தேவன் உங்களை நித்திய ஜீவனுக்கென்று முன்னியமித்திருந்தால், “பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.” அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. அப்பொழுது இழக்கப்பட முடியாது. நீங்கள் என்றென்றுமாய் பாதுகாக்கப்பட்டிருக்கிறீர்கள். “ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருக்கிறோம், ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.” அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. நாம் இழக்கப்பட வழியேக் கிடையாது. சரியாக இப்பொழுது அது உங்களை நலமாய் உணரச் செய்யவில்லையா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] 385 இப்பொழுது நீங்கள் ஒரு கிறிஸ்தவராயிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எப்படி அறிவீர்கள்? உங்களுடைய ஆவி அவருடைய ஆவியோடு சாட்சி பகிரும்போது, தேவனுடைய அன்பு உங்களுடைய இருதயத்தில் இருக்கும்போது, நீங்கள் அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம் இவைகளைப் பெற்றிருக்கிறீர்கள். அப்பொழுது நீங்கள்…அந்த ஆவியின் கனிகள் உங்களுடைய ஜீவியத்தைப் பின் தொடருகின்றன. 386 உங்களால் ஆவியில் நடனமாட முடியும் என்ற காரணத்தினால் அல்ல, ஓ, இந்த நவீன தாளத்திற்கு, அது ஒரு இசைப் பேழையில் சத்தமிட்டு இசைக்கப்படும்போது, இங்கே இதற்கு ஏராளமானோர் ஆவியில் நடனமாடுகிறார்கள். அந்தக் காரியங்கள் எல்லாம் சரிதான். ஆனால் அவர்கள் அந்த முழுக் காரியத்தையும் பிரமாணத்தைக் கடைப்பிடிக்கின்ற பக்கமாக எடுத்துக்கொண்டனர், பாருங்கள், அவர்கள் தேவனுடைய ஆவியை பின்னால் விட்டுவிட்டனர். 387 அந்தக் காரணத்தினால்தான் தேவன் தம்மை வெளிப்படுத்தத் துவங்கும்போது, அவர்கள், “அர்த்தமற்றது. நாங்கள் அதனோடு எந்தக் காரியத்தையும் செய்யவிரும்பவில்லை” என்று கூறிவிடுகின்றனர். அவர்கள் தேவனை அறிந்திருக்கவில்லை. அவர்கள் அதை ஒருபோதும் கண்டதேயில்லை. அவர்களால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை, ஏனென்றால் அங்கே உள்ளே ஒரு வித்தியாசமான ஜீவனாயுள்ளது. அவன்…அறிந்திருக்கவில்லை…கோதுமை மணி என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை களையானது அறிந்துகொள்ளவில்லை. கோதுமைமணி ஒரு வித்தியாசமான ஜீவனாயுள்ளது. 388 அந்த விதமாகத்தான் அது ஒரு கிறிஸ்தவனோடு உள்ளது, மாம்சபிரகாரமான விசுவாசி, அறிக்கையிடுபவன், வெளியே போய், “ஓ, ஆம், நான் ஒரு கிறிஸ்தவன்” என்று அறிக்கையிடுகிறான். அதே சமயத்தில் அவன் தன்னுடைய வாயில் டெக்ஸாஸில் உள்ள ஒரு கொம்பற்ற இளைங்காளையைப் போல ஒரு பெரிய சுருட்டை வைத்திருக்கிறான். 389 ஒரு ஸ்திரீ தன்னுடைய குட்டைக் கால்சட்டைகளோடு வந்து, “ஓ, ஆம், நான் ஒரு சபையின் அங்கத்தினள். நிச்சயமாக. நான் அங்கத்தினள்” என்று கூறுகிறாள். நீங்கள் மாம்சப்பிரகாரமானவர்களேயல்லாமல் வேறொன்றுமில்லை என்பதை உங்களுடைய கனிகள் நிரூபிக்கின்றன. அது உண்மையே. நிச்சயமாக அது மாம்சபிரகாரமானதாயுள்ளது. அதை அனுமதிக்கும்படியான காரியம் ஒன்று மாத்திரமே உண்டு; அது ஒன்று மனநலக் குறைப்பாட்டுக் கோளாறு அல்லது உங்கள் மீதுள்ள ஒரு இச்சையான ஆவியாயிருக்கலாம். அது உண்மை. 390 நீங்கள் உலகத்தைப் போன்று செயல்பட வேண்டுமென்று விரும்பினால், வேதம், “நீங்கள் உலகத்திலும் அல்லது உலகத்தின் காரியங்களிலும் அன்பு கூர்ந்தால், உங்களிடத்தில் தேவனுடைய அன்பேயில்லை” என்று உரைத்துள்ளது. ஆகையால் அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 391 இப்பொழுது நீங்கள், “ஓ, வேதம் கூறியுள்ளது, ஆகையால் நான் அதைச் செய்ய வேண்டும்” என்று கூறுகிறீர்கள். இல்லை, அதுவல்ல அது. கிறிஸ்து உங்களுக்காக ஏதோ ஒரு காரியத்தை செய்யும் வரையில் அங்கேயே தரித்திருங்கள், அப்பொழுது அது உங்களிடத்திலிருந்து அதை எடுத்துப் போட்டுவிடுகிறது. அப்பொழுது நீங்கள் தேவனுடைய ஆவியினால் பிறந்திருக்கிறீர்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது அல்ல, அது அவர் உங்களுக்காக என்ன செய்துள்ளார் என்பதாய் உள்ளது. நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள் என்ற ஒரு அன்பினை நீங்கள் பெற்றுக்கொள்ளும் வரையில் தரித்திருங்கள், அதன்பின்னர் உங்களுடைய ஜீவியத்தைக் கவனித்துப் பாருங்கள், அது வார்த்தையோடு சரிவர பொருந்துகிறதா என்று பாருங்கள். நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை சரிசெய்ய முயற்சிக்கிற காரணத்தால் அல்ல, ஆனால் தேவன் உங்களை அவருடைய ஆவியின் கீழ்படிதலுக்குள் கொண்டு வருகிற காரணத்தினாலேயாம். அது தேவனுடைய வழியில் நீங்கள் உங்களையே வழி நடத்திக் கொள்வதல்ல. அது தேவன் தம்முடைய சொந்த வழியில் உங்களை வழிநடத்துகிறதாயுள்ளது. நீங்கள் வழிநடத்துதலைச் செய்கிறதில்லை, ஆனால் தேவன் வழிநடத்துதலைச் செய்கிறதாயுள்ளது. 392 இப்பொழுது நாம் முடிவை நோக்கிச் செல்லுகையில், அப்படியே இதைக் கவனியுங்கள், 11-வது வசனம். நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். 393 இப்பொழுது, இங்கே இன்னும் ஒரு குறிப்பு உள்ளது. ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம் பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு: நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். 394 தேவன் ஆபிரகாமை சந்தித்தபோது, இப்பொழுது ஆபிரகாம் எந்தவித தகுதிகளுமில்லாமலேயே உடன்படிக்கையைப் பெற்றுக் கொண்டான். உடன்படிக்கையோ ஆபிரகாமோடு செய்யப்பட்டது. அது முற்றிலுமாய் கிருபையாயிருந்தது. ஆபிரகாம் ஒரு சிறந்த மனிதனாயிருக்கவில்லை. அவன் ஒரு பரிசுத்த மனிதனாய் இருக்கவில்லை. அவன் ஒரு சாதாரண மனிதனாயிருந்தான். தேவன் தெரிந்துகொள்ளுதலின் மூலம் ஆபிரகாமைத் தெரிந்து கொண்டார், ஏனென்றால் தேவன் அவனைத் தெரிந்து கொண்டார்; ஆபிரகாம் அதை விரும்பினான் என்ற காரணத்தினால் அல்ல, ஆபிரகாம் இதைச் செய்தான் என்ற காரணத்தினால் அல்ல, ஆபிரகாம் ஒரு நல்ல மனிதனாயிருந்தான் என்ற காரணத்தினால் அல்ல, அவனுக்கு எல்லாத் தகுதிகளும் இருந்தது என்ற காரனத்தினால் அல்ல. ஆனால் அது தேவனுடைய தெரிந்துகொள்ளுதலாய் இருந்தது. தேவன் ஆபிரகாமை தெரிந்துகொண்டார். 395 இன்றைக்கு நான் கூறினதுபோல, “நாம் நம்முடைய பிரசங்கிமார்களை தெரிந்தெடுக்கிறோம்” என்று நான் நம்புகிறேன். நாம் வெளியேப் போய் சுற்றி, “உதவிக்காரர்களில் ஒருவர் விட்டுச் சென்றுவிட்டார். எனவே அவருடைய ஸ்தானத்தை எடுக்கும்படியான சிறந்த மனிதனை இந்தக் கட்டிடத்தில் கண்டறிவோம். போதகர் விட்டுச் சென்றுவிட்டார். நமக்கு சிறந்த போதகர் கிடைக்கும்படியாய் நாம் கண்டறிவோமாக” என்று கூறுகிறோம். சில நேரங்களில் அது சரியாயிருப்பதில்லை. 396 யூதாஸினுடைய இடத்தை எடுத்துக் கொள்ளும்படியான ஒரு மனிதனை அவர்கள் தேர்ந்தெடுத்தபோது, அவர்கள் தவறான மனிதனை தெரிந்தெடுத்தனர். அவர்கள் ஒரு பெருந்தன்மையான மனிதனை, மத்தியாவை, ஒரு மகத்தான வேதபாரகனை, ஒரு வேதபண்டிதனை, ஒரு தானாதிபதியை தெரிந்தெடுத்தனர். அவர்களோ, “அவர் உண்மையாகவே அந்த ஸ்தானத்தை எடுத்துக் கொள்வார். அவன் ஒரு உண்மையான மனிதனைப் போன்று காணப்படுகிறான்” என்று கூறினர். ஆனால் அது தேவனுடைய தெரிந்துகொள்ளுதலாயிருக்கவில்லை. அவர்கள் இந்த மனிதனைத் தெரிந்துகொண்டனர். அவனோ தேவனுக்காக எந்தக் காரியத்தையும் ஒருபோதும் செய்யவேவில்லை. 397 ஆனால் தேவன் ஒரு சிறு உருவம் படைத்த, மிகவும், கோபங்கொண்ட, சற்று வளைந்தது போன்றதான கூர் மூக்கினைக் கொண்ட ஒரு யூதனையே அவருடைய தெரிந்துகொள்ளுதலாக தெரிந்துகொண்டார். அவனுடைய முகத்தில் எப்பொழுதுமே கோபம் குடிகொள்ள, “நான் போய், அவர்களை கைது செய்வேன்.” என்றே கூறி வந்தான். 398 தேவனோ, “நான் அவனுக்குள் ஏதோ ஒரு காரியத்தைக் காண்கிறேன். நான் அவனை உபயோகிப்பேன்” என்றார். 399 தேவன் அவனுக்கு முன்பாக அங்கே அந்த பெரிய ஒளியில் பிரசன்னமானார். அப்பொழுது அவன், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான். 400 அதற்கு அவர், “நான் இயேசு. ஏன்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம். நீ ஏன் என்னை துன்பப்படுத்துகிறாய்?” என்றார். அந்தவிதமாக தேவன் அந்த மனிதனை எடுத்து, இயேசு கிறிஸ்துவிற்கு அடுத்தபடியாக பூமியிலே மகத்தான மனிதர்களில் ஒருவனாக அவனை ஏற்படுத்தினார். அது தேவனுடைய தெரிந்துகொள்ளுதலாயிருந்தது. 401 இன்றைக்கோ நாம் ஒரு தெரிந்துகொள்ளுதலைச் செய்ய முயற்சிக்கிறோம். சபைகளே நீங்கள், நீங்கள் இந்த மனிதனை இங்கே அனுப்புகிறீர்கள், அந்த மனிதனை இங்கே அனுப்புகிறீர்கள். அது அந்தவிதமாகச் செய்யப்பட வேண்டியதில்லை. தேவனே வழிநடத்துதலைச் செய்கிறார். அது எல்லாவற்றிலும், எல்லாவற்றினூடாகவும், எல்லாவற்றின் மேலும் உள்ள தேவனாயுள்ளது. அது ஏதோ ஒரு சபையின் ஏதோ ஒரு பத்திரம் என்ன கூறுகிறது என்பதல்ல. அது தேவன் அதைக் குறித்து என்ன கூறினார் என்பதாயுள்ளது, அதுவே வித்தியாசத்தை உண்டுபண்ணுகிறது. 402 கவனியுங்கள். தேவன் ஆபிரகாமுக்கு நிபந்தனையற்ற ஒரு வாக்குத்தத்ததை உண்டுபண்ணினார். இப்பொழுது காத்திருங்கள், ஆபிரகாம் ஒரு காரியத்தையும் செய்ய வேண்டியதாயிருக்கவில்லை. தேவன், “நான் அதை ஏற்கெனவே செய்துவிட்டேன்” என்றார். 403 தேவன் ஆதாமுக்கு ஒரு வாக்குத்தத்ததை பண்ணி, “ஆதாமே, நீ இதைத் தொடாமலிருந்தால், நீ என்றென்றைக்கும் ஜீவிப்பாய். ஆனால் நீ அதைப் புசிக்கும் நாளிலே, அந்த நாளிலே நீ சாவாய்” என்றார். 404 ஆதாம், “எப்படியும் நான் இவை எல்லாவற்றையுங் குறித்து வியப்புறுகிறேன்” என்றான். அவன் சென்று அதைப் புசித்து சேதப்படுத்தினான். 405 தேவன் ஒவ்வொரு முறையும்,…ஒரு மனிதன் தன்னுடைய உடன்படிக்கையை தேவனோடு செய்யும்போது அல்லது தேவன் ஒரு மனிதனோடு செய்யும்போது, மனிதன் தன்னுடைய பாகத்தை முறித்துப் போடுகிறான். ஆகையால் தேவன் ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டியதாயிருந்தது, ஏனென்றால் மனிதன் என்னவாயிருந்தான் என்பதை அவர் கண்டார். அவர்கள் முன்னியமிக்கப்பட்டிருந்தனர், அவர்கள் தெரிந்துகொள்ளப்பட்டிருந்தனர். எனவே தேவன் ஏதோ ஒரு காரியத்தை செய்ய வேண்டியதாயிருந்தது. ஆகையால் தேவன் இறங்கி வந்து, தம்முடைய உடன்படிக்கையை ஆபிரகாமோடு நிபந்தனையற்றதாய் பண்ணினார். அது நிபந்தனையற்றதாயில்லாமலிருந்தால், ஆபிரகாம் நீண்ட காலத்திற்கு முன்பே இழக்கப்பட்டிருந்திருப்பான். 406 அவன் அங்கே கேராரிலே அமர்ந்து கொண்டு, பின் வாங்கிப்போய், ஒரு பொய்யுரைத்ததை நோக்கிப் பாருங்கள், அவன் தன்னுடைய மனைவியை தன்னுடைய சொந்த உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மற்றொரு மனிதனுக்கு அளித்துவிட்டான். என்னே ஒரு மனிதன்! அங்கே பின்வாங்கிப் போனவனாய் அமர்ந்திருந்தான். தேவன் அவனிடத்தில், “நீ இங்கிருந்து போகாதே, இங்கேயே தரித்திரு” என்றார். பஞ்சமோ அவனை வெளியே ஓடச் செய்துவிட்டது. எனவே எங்கே எளிமையாயிருந்து கொண்டிருந்ததோ அங்கே போய் அவன் அலைந்து திரிந்துகொண்டிருந்தான். ஒரு நபர் எளிதானப் பாதையைத் தெரிந்து கொள்ளும்போது, அவனுக்கு என்ன சம்பவிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். 407 அவன் வெளியே போய் பசுமையாயிருந்த புல்வெளியண்டை அலைந்து திரிந்து கொண்டிருந்தான். அவன் அங்கு சென்றபோது, அவன் அந்த இராஜவினிடத்தில் தன்னுடைய சொந்த ஜீவனைக் காப்பாற்றிக் கொள்ள தன்னுடைய மனைவியை தன்னுடைய “சகோதரி” என்று கூறினான். இப்பொழுது, அது ஒரு பொய்யாயிருந்தது. எந்த மனிதனாவது தன்னுடைய உயிரைக் காப்பாற்ற தன்னுடைய மனைவியை எடுத்து மற்றொரு மனிதனுக்கு அளிப்பானா? அவன் அங்கே ஒரு சிறு கூடாரத்தில் பின்வாங்கிப் போனவனாக அமர்ந்துகொண்டு, ஒரு பொய்யைக் கூறிக்கொண்டு, தன்னுடைய நன்மையை விட்டு, வாக்குத்தத்ததிலிருந்தும் மற்றுமுள்ள ஒவ்வொரு காரியத்திலிருந்தும் பிரித்துக்கொண்டிருந்தான், ஆனாலும் அவன் அப்பொழுதும் தேவனுடைய தீர்க்கதரிசியாயிருந்தான். 408 அங்கே அபிமெலேக்கு என்பவன் இருந்தான், அவன் ஒரு நல்லவனாய், பரிசுத்த மனிதனாயிருந்தான். நிச்சயமாகவே அவன் ஒவ்வொரு இரவும் தனக்கு ஜெபங்களை செய்துவந்தான். அப்பொழுது மீண்டும் அழகாகவும், வாலிபமாகவும் மாறி அங்கே வந்திருந்த இந்த நூறூ வயது நிரம்பிய பாட்டியைக் கண்டான். உடனே அவன், “நான் அந்தப் பெண்ணிற்காகத்தான் காத்திருந்தேன், ஆகையால் நான் அவளை திருமணம் செய்துகொள்ளப்போகிறேன்” என்றான். 409 அதற்கு ஆபிரகாம், “நீ அவளை திருமணம் செய்துகொள்ளலாம். அவள் என்னுடைய சகோதரி” என்றான். அவளும், “அது என்னுடைய சகோதரன்” என்றாள். 410 ஆகையால் அவன் அவளை அங்கே அழைத்துச் சென்று, அங்கிருந்த ஸ்திரீகளைக் கொண்டு அவளை நீராட்டி, அருமையான ஆடைகளை அணியச் செய்து, ஒரு இளவரசியைப் போல ஆயத்தம் பண்ணினான். அதன் பின்னர் அவன் தன்னுடைய ஜெபங்களை செய்துவிட்டு, தன்னுடைய படுக்கையில் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டு, “நாளை நான் அந்த அழகான எபிரெயப் பெண்ணை, அங்குள்ள அந்தப் பையனின் சகோதரியை திருமணம் செய்வேன். ஓ, அது அற்புதமாயிருக்கும். ஓ, கர்த்தாவே, நாம் உம்மை எப்படியாய் நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்! ஆம் ஐயா, அற்புதமாயுள்ளாதே!” என்று கூறினான். 411 தேவன், “நீ ஒரு செத்த மனிதனைப் போன்றிருக்கிறாய்” என்றார். ஊ.ஊ! [சகோதரன் பிரான்ஹாம். இருமுகிறார்—ஆசி.] என்னை மன்னிக்கவும். ஆபிரகாம்… 412 ஏன்? ஆபிரகாமோ அங்கே பொய் சொல்லிவிட்டு, பின்வாங்கிப்போய் அமர்ந்து கொண்டிருந்தான். இந்த மனிதனோ இங்கே நேர்மையும், நீதியும், செம்மையான மனிதனுமாயிருந்தான். அப்பொழுது அவன், “ஏன்? ஆண்டவரே, நீர் என் இருதயத்தின் உத்தமத்தை அறிவீர். அவன் அது தன்னுடைய ‘சகோதரி’ என்று என்னிடத்தில் கூறினானல்லவா?” என்று கேட்டான். 413 அப்பொழுது தேவன், “நான் உன்னுடைய இருதயத்தின் உத்தமத்தை அறிவேன். அந்தக் காரனத்தினால்தான் நீ எனக்கு விரோதமாக பாவஞ் செய்யாதபடிக்கு தடுத்துக்கொண்டிருக்கிறேன். அது உண்மை. நான் உன்னுடைய இருதயத்தின் உத்தமத்தை அறிவேன். ஆனால் அவளுடைய கணவன் என்னுடைய தீர்க்கதரிசி” என்று கூறினார். அல்லேலுயா! ஓ, அது கிருபையாயிருக்கவில்லையென்றால், அது என்ன? “பின்வாங்கிப்போய், ஒரு பொய்யைக் கூறி, அங்கே அமர்ந்திருந்தான், ஆனால் அது அப்பொழுதும் என்னுடைய தீர்க்கதரிசி. நீ காணிக்கையை எடுத்துக் கொண்டு, அவனிடத்திற்குப் போ, அவனுடைய மனைவியையும் அழைத்துக் கொண்டுபோய் திரும்ப ஒப்படைத்துவிடு, இல்லையென்றால் நீ ஒரு செத்த மனிதனாயிருக்கிறாய். நான் இனிமேல் உன்னுடைய ஜெபங்களுக்கு செவிகொடுக்கமாட்டேன். அவன் உனக்காக வேண்டுதல் செய்யட்டும்” என்றார். ஆமென். அங்குதான் உங்களுடைய காரியமே உள்ளது. “அது என்னுடைய தீர்க்கதரிசி.” இப்பொழுது நீங்கள், “ஓ, நான் ஆபிரகாமாயிருந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே” என்று கூறலாம். 414 “நாம் கிறிஸ்துவுக்குள் மரித்தால், நாம் ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரராயுமிருக்கிறோம்.” உண்மை. அப்படித்தான் வேதம் உரைத்துள்ளது. நீங்கள் அதை வாசிக்க விரும்புகிறீர்களா? ஏன்? வேதம் அதைக் கூறியுள்ளது, அந்த வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்கு மாத்திரம் அல்லாமல், அவனுடைய சந்ததியாருக்குமானதாயிருந்தது. உங்களைப் போலவே, ஆபிரகாம் அநேக வித்துகளை, நிச்சயமாக, அநேகப் பிள்ளைகளை உடையவனாயிருந்தான். இஸ்மவேல் அவனுடைய பிள்ளையாயிருந்தான். சாராள் மரித்தப் பின்பு அவன் கேத்தூராள் என்னும் வேறொரு ஸ்திரீயின் மூலம் ஏழு இல்லை எட்டுப் பிள்ளைகளை பெற்றெடுத்தான். ஆனால் பாருங்கள், வித்தோ வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட ஒன்றாயிருந்தது, அது ஈசாக்காயிருந்தது, ஈசாக்கினூடாக கிறிஸ்து வந்தார், கிறிஸ்துவினூடாக நாம் வந்தோம். வாக்குத்தத்தம் நிபந்தனையற்றதாயிருக்கிறது. 415 இப்பொழுது, ஆபிரகாமைக் குறித்தென்ன? ஏன்? அவன் அதைச் செய்திருப்பான், அது அவன் திரும்பி வருவது கூடாத காரியமாயிருந்திருக்கும். நிச்சயமாக. அது அப்படியிருந்திருந்தால், சவுல் மீண்டும் திரும்பி வருவது கூடாத காரியமாயிருந்திருக்கும். நீங்கள் வேதவாக்கியத்தை அந்த விதமாக வாசித்துப் பார்த்திருக்க வேண்டும். புரிகிறதா? ஆனால் அது அப்படியிருக்கவில்லை. தேவனுடைய வாக்குத்தத்தம் என்றென்றென்றுமாய் நிலைத்திருக்கிறது. 416 நாம் இங்கே ஒரு நிமிடம் வாசிப்போமாக. நீங்கள் அதை வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் கலாத்தியர் 3:16-ஐ எடுத்து, இதை வாசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், இப்பொழுது வாக்குத்தத்தம் என்ன என்பதைப் பாருங்கள், நாம் அவருடைய வாக்குத்தத்தமாயிருக்கிறோமா அல்லது இல்லையா என்பதைப் பாருங்கள், 3:16. இங்கே கவனியுங்கள். சரி. நாம் 15-வது வசனத்தையும் கூட வாசிக்கப் போகிறோம். சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை. ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும், சந்ததி (சந்ததி) வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; “ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும்.” இப்பொழுது கவனியுங்கள். சந்ததிகளுக்கு (பன்மை) என்று அநேகரைக் குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக் குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே. 417 அப்படியானால் கிறிஸ்து ஆபிரகாமின் சந்ததியாயிருந்தார். “நாம் கிறிஸ்துவுக்குள்ளாக மரித்து, அவருடைய சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டிருக்கிறோம். நாம் ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின் சுதந்தரராயிருக்கிறோம்.” அப்படியானல் அது எப்படியிருக்கிறது? தேவன் உங்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருப்பாரானால், நீங்கள் எப்படி விழுந்து போகப் போகிறீர்கள்? எப்படி நீங்கள் பின்வாங்கப் போகிறீர்கள்? எப்படி விலகிப் போய், அதற்காக நரகத்திற்கு செல்ல வேண்டியவர்களாயிருப்பீர்கள்? 418 இப்பொழுது, நீங்கள், “நாம் பின்வாங்கிப்போக முடியாதா?” என்று கேட்கலாம். முற்றுலுமாக உண்மைதான், நீங்கள் பின்வாங்கிப் போகும்போது, நீங்கள் அதற்கு தண்டனையைப் பெற்றுக் கொள்ளப் போகிறீர்கள், நீங்கள் கவலைப்படாதீர்கள். ஆபிரகாம் அதைப் பெற்றுக் கொண்டான், மற்றவர்களும் அதைப் பெற்றுக் கொண்டனர், நீங்களும் அதைப் பெற்றுக்கொள்வீர்கள். அது நீங்கள் பாவம் செய்ய உரிமை அளிக்கிறது என்று நீங்கள் எண்ணிக் கொள்ளாதீர்கள். அது உரிமை அளிக்கிறதில்லை. நீங்கள் செய்கிற ஒவ்வொரு காரியத்திற்காகவும் நீங்கள் அபராதம் செலுத்துவீர்கள். நீங்கள் எதை விதைத்தீர்களோ அதையே அறுப்பீர்கள். நீங்கள் ஒரு சிறு பாவத்தைச் செய்யும்போது, நீங்கள் ஒரு கழுவும் தண்ணீர் தொட்டி நிறைய அறுப்பீர்கள். அது உண்மை. ஆனால் சகோதரனே, நீங்கள் இழக்கப்பட்டிருக்கிறீர்கள் என்று அது பொருட்படுத்திக் கூறுகிறதில்லை. அது முற்றிலும் சரியே. ஆபிரகாம் சரியாக எதை விதைத்தானோ அதை அறுத்தான். அது உண்மை. ஆனால் அவன் அப்பொழுதும் இரட்சிக்கப்பட்டிருந்தான். 419 தேவன் இஸ்ரவேலரோடு உடன்படிக்கைப் பண்ணினார்; அவர்கள் தங்களுடைய சுதந்தரத்தை இழந்தனர். அவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்தை இழந்து, எகிப்திற்குள் சென்றனர், ஆனால் அவர்கள் தங்களுடைய உடன்படிக்கையை இழந்துவிடாமலிருந்தனர். தேவன், “நான் ஆபிரகாமுக்குப் பண்ணின என்னுடைய வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன். நான் அதை நினைவுகூர்ந்து, நான் என் ஜனங்களை விடுவிக்கும்படிக்கு இறங்கி வந்தேன். மோசே அங்கே போய், ‘என் ஜனங்களைப் போகவிடவேண்டும்’ என்று நான் கூறினதாக பார்வோனிடத்தி சொல்லு. நான் ஆபிரகாமுக்கும், அவனுடைய சந்ததிக்கும் பண்ணின ஒரு வாக்குத்தத்தத்தை நினைவு கூருகிறேன்.” என்றார். 420 அது அதேக் காரியமாய் நம்மோடும் உள்ளது. ஆகையால் நீங்கள் மரித்திருக்கிறீர்கள், உங்களுடைய ஜீவன் கிறிஸ்துவினூடாக தேவனுக்குள் மறைந்திருக்கிறது, உங்களைத் தொடக் கூடியக் காரியம் உலகத்தில் ஒன்றுமேக் கிடையாது. இப்பொழுது, நீங்கள் போய் தவறு செய்யலாம், ஆனால் நீங்கள் உண்மையாகவே, மெய்யாகவே ஒரு தேவனுடைய பிள்ளையாயிருந்தால், நீங்கள் ஒரு தவறு செய்திருக்கிறீர்கள் என்பதை நீங்கள் கண்டால், நீங்கள் எழும்ப மீண்டும் முயற்சிப்பீர்கள். அது உண்மை, நீங்கள் அங்கேயே விழுந்து கிடக்கமாட்டீர்கள். 421 ஆனால் நீங்கள் கோழைத்தனமாக இருந்தால், நீங்கள் ஒரு களையாக இருந்தால், நீங்கள் எழும்ப முயற்ச்சிக்காமல், “ஆ, நல்லது, எப்படியும் அதனால் ஒன்றுமில்லை” என்று கூறுவீர்கள். 422 தேவனுடைய ராஜ்யம் ஒரு மனிதன் ஒரு வலையை எடுத்துக்கொண்டு, கடலுக்குள் போய் அதைப் போடுகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. அவன் அங்கிருந்து வரும்போது, அவன் ஆமைகளையும், தவளைகளையும், பாம்புகளையும், பல்லிகளையும், சிலந்திகளையும், மீனை வலையில் உடையவனாய் வருகிறான். அந்தவிதமாகத்தான் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. 423 கர்த்தர் சகோதரன் கிரஹாமைப் போன்ற ஒரு ஊழியக்காரனிடத்தில், “இங்கே போ; சகோதரன் கிரஹாம் இந்த மூலைக்குச் சென்று கொஞ்சங்காலம் மீனைப் பிடி” என்று கூறுவார். சரி, அப்பொழுது அவர் தன்னுடைய வலையை எடுத்துக் கொண்டு, அங்கே போய், மீன்பிடிக்கும் வலையை வீசத் துவங்குகிறார். “சகோதரன் பில், நீர் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்?” “நான் எங்கோ வெளியே போய், இந்த மூலையில் வலையைப் போடுகிறேன்.” 424 பின்னர், நான் வலையை இழுத்து, “கர்த்தாவே, அதோ அவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் யாராயிருக்கிறார்கள் என்பதை நீர் அறிந்திருக்கிறீர்.” என்று கூறுகிறேன். நான் மீண்டும் வலையை இழுத்து, “சரி, கர்த்தாவே, இதோ அவர்கள் இருக்கிறார்கள்” என்று கூறுகிறேன். 425 இப்பொழுது ஒரு ஆமை துவக்கத்தில் ஒரு ஆமையாகவே இருந்தது. நீங்கள் அதை வலையில் பிடித்தீர்கள். அது உண்மை. அந்தவிதமாகவே ஜனங்கள், “ஓ அல்லேலுயா! அல்லேலுயா! கர்த்தருக்கு ஸ்தோத்திரம். தேவனுக்கு மகிமை. அல்லேலுயா!” என்று உணர்ச்சிவசப்படுதலில் பிடிக்கப்படுகின்றனர். அவர்கள் அப்படியே வலையில் பிடிக்கப்படுகின்றனர், அவ்வளவுதான். 426 அந்த பழைய ஆமையின் ஆவி அவர்களுக்குள் இருந்தால், அது நீடித்திருக்கப்போவதில்லை, எனவே அவர்கள், “நல்லது, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்…” என்கிறார்கள். இதோ அவன் போகிறான், திரும்பவும் ஊர்ந்து சென்று விடுகிறான். 427 நன்னீர் நண்டு வகையான வயோதிகப் பெண்மணியோ, “ஆனால் என்னால் அதைப் புரிந்துக்கொள்ள முடியவில்லை” என்று கூறிவிடுவாள். புரிகிறதா? 428 குமாரி சிலந்தியோ கொஞ்ச நேரம் அங்கே அமர்ந்துவிட்டு, அவள், “பிளாப், பிளாப், பிளாப்” என்று, “அங்கே எப்படியும் அதில் எந்தக் காரியமும் இல்லை” என்று கூறித் திரும்பி விடுகிறாள். 429 குமாரி சர்ப்பமோ, “ஓ, அவர்கள் ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள். அங்கே அதில் உள்ளதெல்லாம் அவ்வளவுதான். அவர்களை விட மேலான அறிவுள்ளவர்களிடத்திற்கு நான் செல்வேன்” என்று கூறுவாள். ஏன்? அவள் துவக்கத்திலேயே ஒரு சர்ப்பமாயிருக்கிறாள். சுவிசேஷ வலை அவர்களை அப்படியேப் பிடித்துவிட்டது, அவ்வளவுதான். 430 ஆனால் மீனோ எஜமானுடைய மேசைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவன் துவக்கத்திலேயே ஒரு மீனாயிருந்தான். அவனுடைய வித்து ஒரு மீனாயிருந்தது. அவன் ஒரு மீனாகவே துவங்கினான், தேவன் தம்முடைய மீனை உலகத் தோற்ற முதல் அறிந்திருந்தார். அல்லேலூயா! 431 நினைவிருக்கட்டும், அவை யாவும் அங்கே ஒரே சேற்றுத் தண்ணீரில் சுவாசித்துக் கொண்டிருந்தன. அவை யாவும் ஒரே சிற்றோடையில் சுவாசித்துக் கொண்டிருந்தன. அது உண்மை. “நாம் எல்லாரும்…ஒரே ஞானக் கன்மலையிலிருந்து பானம்பண்ணினோம். எல்லோரும் வனாந்திரத்தில் மன்னாவைப் புசித்தோம்.” மற்றவர்கள் புசித்த அதே மன்னாவையே காலேபும், யோசுவாவும் புசித்தனர். அவர்கள் யாவரும் வனாந்திரத்தில் மடிந்து போயினர். ஆனால் இருவர் மாத்திரமே வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்ல தெரிந்து கொள்ளப்பட்டு அங்கு சென்றடைந்தனர். அது உண்மையே. 432 “நாம் எல்லோரும் ஒரே ஊற்றிலிருந்து பருகிவந்துள்ளோம்.” ஆனால் பருகின யாவரும் இரட்சிக்கப்பட்டிருக்கவில்லை. நாம் யாவரும் ஒன்று சேர்ந்து சத்தமிட்டோம். நாம் யாவரும் ஒன்று சேர்ந்து களிகூர்ந்தோம். ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களே இரட்சிக்கப்பட்டிருக்கின்றனர். நீங்கள் கவனித்தீர்களா? அது, “கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கத்தக்கதாக கடைசி நாட்களில் அந்த இரண்டு ஆவிகளும் மிக நெருக்கமாயிருக்கும்,” என்று கூறப்பட்டுள்ளது. கூடுமானால். புரிகிறதா? அது உண்மையான தேவனுடைய ஆவியாய், நித்திய ஜீவனுக்கென்று முன் குறிக்கப்பட்டதாயுள்ளது. 433 இப்பொழுது நாம் முடித்துக் கொண்டிருக்கிறோம். அதன்பின்னர் சகோதரன் நெவில் நான் இங்கே எங்கே விட்டுச் செல்கிறோனோ, அந்த பாகத்திலிருந்து எடுத்து பிரசங்கிப்பார். சரி. ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டுத் தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப் பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது. நியாயப்பிரமாணம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், அந்த வாக்குத்தத்தத்தையே தேவன் ஆபிரகாமுக்கு அளித்தார். அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்ததினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்ததினாலே அருளிச் செய்தாரே. நீங்கள் செய்கிற எந்தக் காரியத்தினாலும் அல்ல, எந்த நியாயப்பிரமாணங்களினாலுமல்ல, உங்களுடைய சபையின் எந்த பிரமாணங்களினாலுமல்ல, சபையை சேர்ந்துகொள்வதனால் அல்ல, அல்லது மற்றெந்த பிரமாணத்தினாலும் அல்ல. அது முற்றிலும் உங்களுக்கு கிருபையாயுள்ள ஒரு தேவனுடைய செயலாயுள்ளது. அங்குதான் உங்கள் காரியமே உள்ளது. 434 கவனியுங்கள். அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப் பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு,… அது என்னுடைய முகத்தின் மேலுள்ள மூக்கைப் போன்று அவ்வளவு தெளிவாயிருக்கிறதல்லவா? “அது வாக்குத்தத்தத்தைப் பெற்ற கிறிஸ்துவாயிருந்த அந்த சந்ததி, வருமளவும் கூட்டப்பட்டது.” …தேவதூதரைக் கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது. மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர். 435 இப்பொழுது நாங்கள் சரியாக இங்கே விட்டுச் செல்கிறேன், இந்த வருகின்ற புதன் கிழமை சகோதரன் நெவில் சரியாக அங்கிருந்து துவங்கி பிரசங்கிப்பார். 436 இப்பொழுது நாங்கள் என்ன கூறியிருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளுகிறீர்களா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] அது மீண்டும் பிறந்த ஒரு கிறிஸ்தவனுக்கு முற்றிலும் கூடாத காரியமாயுள்ளது…அதாவது ஒருவன் தன்னை “மீண்டும் பிறந்தவன்” என்று அழைத்துக் கொள்ளுகிறவனை நான் இப்பொழுது பொருட்படுத்திக் கூறவில்லை. ஒரு உண்மையான, மீண்டும் பிறந்த கிறிஸ்தவன் கிருபையிலிருந்து விழுந்து போவது என்பது, அவனால் அதைச் செய்ய முடியாது என்றே நான் பொருட்படுத்திக் கூறுகிறேன். அவனால் விழமுடியும், அது உண்மை, ஆனால் அவனால் ஒருபோதும் அந்த கிருபையிலிருந்து விழுந்து போகவே முடியாது. ஆபிரகாம் கிருபையிலிருந்து விழுந்து போனான். நிச்சயமாகவே அவன் விழுந்துபோனான். தேவன், “அங்கேயே தரித்திருக்கும்படி” அவனிடத்தில் கூறியிருந்தார். அவனோ அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டான், ஆனால் அவன் ஒருபோதும் தன்னுடைய உடன்படிக்கையை இழந்து போய்விடவில்லை. அவன் அப்பொழுதும் தேவனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவனாயிருந்தான். அவன் அங்கு ஒரு தீர்க்கதரிசியாய் உட்கார்ந்து கொண்டிருந்தான். அவன் எப்பொழுதுமே தீர்க்கதரிசியாயிருந்தான். அவன் எப்பொழுதுமே தேவனுடையவனாயிருப்பான். 437 இப்பொழுது கவனியுங்கள். வேதம், “இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்” என்று உரைத்துள்ளது. எத்தனை பேர் அதை அறிவீர்கள்? வேதம், “இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்,” என்று உரைத்துள்ளது. இப்பொழுது, “மாம்சத்தின்படி இஸ்ரவேலராயிருக்கிறவர்கள் இஸ்ரவேலர்கள் அல்ல, ஆனால் ஆவியின்படி இஸ்ரவேலராயிருக்கிறவர்களே இஸ்ரவேலர்கள். ஏனென்றால் தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.” வேதத்தில் அதற்கு அடுத்த வசனம் என்ன கூறியுள்ளது? கலாத்தியர். சரி. “இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் இரட்சிக்கப்படுவார்கள்.” நாம் எப்படி இஸ்ரவேலரானோம்? “கிறிஸ்துவுக்குள் மரித்து, ஆபிரகாமின் சந்ததியாரானோம், நாம் வாக்குத்தத்தத்தின்படி சுதந்தரராய் இருக்கிறோம்.” 438 பவுல், “புறம்பாக யூதனானவன் யூதனல்ல, ஆனால் உள்ளத்திலே யூதனானவனே யூதன், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவர்கள்” என்றான். நாம் கிறிஸ்துவினூடாக வாக்குத்தத்ததினாலே அவரை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்வதனால் நாம் ஆபிரகாமின் சந்ததியாயாராயிருக்கிறோம். 439 ஓ, நீங்கள் அதை புரிந்துகொள்ளுகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களால் சற்று நேரம் இதனோடு தரித்திருக்க முடிந்தால், நீங்கள் அதைப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது நாம் இங்கே இதை முடித்துவிட்டு, அதன்பின்னர் நாம் மெல்கிசேதேக்கின் பேரில் துவங்குவோம், அது இதில் மீண்டும் அதைக் கொண்டுவருகிறது. நாம் அதன்பேரில் துவங்கி…ஓ, அது அப்படியே, அந்த முழுக்காரியமும் அற்புதமாயுள்ளது. ஆனால் நாம் அந்தப் பொருளின் முக்கிய சாரம்ச பகுதிக்குள்ளாக தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறோம். 440 இப்பொழுது, பாருங்கள், நீங்கள் இங்கே இதை ஏற்றுக் கொண்டிருந்தால், அவ்விதமாயிருந்தால், உங்களால் அதைக் கூர்ந்து கவனித்து வாசிக்க முடிந்தால் நலமாயிருக்கும்…உண்மையான தீவிரமான திரித்துவக்காரர், மூன்று தேவர்கள் இருக்கிறார்கள் என்று விசுவாசிக்கிறவர், ஒரு முறை என்னிடத்தில், “மத்தேயு 3-ம் அதிகாரம் தேவத்துவத்தில் மூன்று தனிப்பட்ட நபர்கள், மூன்று பேர் உள்ளனர் என்று முழுமையாக அறிவிக்கிறது” என்று கூறினார். 441 அப்பொழுது நான், “அதை நான் காண வேண்டும்” என்றேன். 442 அதற்கு அவர், “கவனியுங்கள்,” என்று கூறினார். பின்னர் இந்த பிரசங்கபீடத்தில் நின்றுகொண்டு அவர், “இங்கே மத்தேயு 3-ம் அதிகாரத்தை பாருங்கள்,” என்றார். மேலும் ‘“இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப் போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.’ எனவே அங்கே மூன்று பேர் இருந்தனர். கரைமீது குமாரன், இடையில் பரிசுத்த ஆவி, மேலே பிதா இருந்தார்” என்றார். அப்பொழுது நான், “சகோதரனே, வேதவாக்கியம் அதை அவ்வாறு கூறவில்லையே” என்றேன். “ஓ, ஆம், அது அவ்வாறே கூறுகிறது” என்றார். அப்பொழுது நான், “இப்பொழுது இதை மீண்டும் வாசித்து, அது அவ்வாறு கூறுகிறதா என்பதைக் கண்டறிவோம்” என்றேன். 443 இப்பொழுது இங்கே அவருடைய காட்சி உள்ளது. இதோ தேவன், குமாரன், இருக்கிறார். அதோ தேவன், பிதா இருக்கிறார். இங்கே தேவன், பரிசுத்த ஆவி ஒரு புறாவைப் போன்று உள்ளார். இப்பொழுது கவனியுங்கள். வேதம், இயேசு ஞானஸ்நானம்பண்ணப்பட்டபோது, “குமாரன் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; அப்பொழுது ஒரு சத்தம் உண்டாகி…அவர் தேவ ஆவியை, தேவ ஆவியை ஒரு புறாவைப் போல கண்டார்.” என்று உரைத்துள்ளது. அங்கே மேலே மற்றொரு நபர் அல்ல, ஆனால் தேவ ஆவி அவருக்கு மேல் புறாவைப் போன்றிருந்தது. அப்பொழுது ஒரு சத்தம் உண்டாகி, “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.” இப்பொழுது மத்தேயு 3-ம் அதிகாரத்தை வாசித்து, அது அதைக் கூறவில்லையா என்று பாருங்கள். புரிகிறதா? மூன்று நபர்கள் என்பது கிடையவேக் கிடையாது. 444 அந்தவிதமாக…ஒரு மனிதன் பின்வாங்கிப் போகிறபோது, அவன் திரும்பவும் வருவது என்பது கூடாத காரியமாயுள்ளது என்று அது கூறவில்லை. அது அதைக் கூறவில்லை. அது அதைக் கூறவேயில்லை. அது, “அவன் ஒரு முறை பிரகாசிப்பிக்கப்பட்ட பிறகு மறுதலித்துப்போனவனை திரும்பவும் புதுப்பிக்கிறது கூடாதக் காரியம்” என்று கூறுகிறது. எனவே அப்படிப்பட்டவனால் திரும்பி வர முடியாது. 445 வேதம், “தேவனால் பிறந்த எவனும் பாவஞ்ச் செய்யான், ஏனென்றால் அவனால் பாவஞ்செய்ய முடியாது. ஏனெனில் தேவனுடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது, அவனால் பாவஞ்செய்யமுடியாது,” என்று கூறியுள்ளது. என்னுடைய ஸ்தானத்தில் அங்கே எனக்காக ஒரு பலி இருக்கும்போது, நான் எப்படி ஒரு பாவியாக அழைக்கப்பட முடியும்? மரணமானது எனக்கு கிரயமாக செலுத்தப்பட்டுவிட்டபோது, நான் எப்படி மரிக்க முடியும்? நான் நித்திய ஜீவனை பெற்றுள்ளபோது, நான் எப்படி மரிக்க முடியும்? என்னால் எப்படி அதைச் செய்ய முடியும்? உங்களால் அதைச் செய்ய முடியாது. 446 நான் இந்த பட்டிணத்தில் மணிக்கு அறுபது மைல் வேகம் வாகனம் ஓட்டிச் செல்லலாம் என்று இந்த நகரத்தின் நகராண்மைக் கழக தலைவரிடத்திலிருந்து எழுத்து மூலமாக அனுமதி பெற்றிருக்கும்போது, நான் மணிக்கு அறுபது மைல் வேகத்தில் செல்வதற்காக எந்த அதிகாரி என்னை கைது செய்ய முடியும்? உங்களால் எப்படி அதைச் செய்ய முடியும்? நான் அவ்வாறு ஓட்டிச் செல்லலாம் என்று கூறுகிற ஒரு அனுமதிச் சீட்டை நகராண்மைக் கழக தலைவரிடத்திலிருந்து பெற்றுள்ளேன். எனவே அதிகாரியால் என்னைக் கைது செய்ய முடியாது. அவருடைய—அவருடைய மற்ற…அவர் ஊதல்களை ஊதலாம் இன்னும் மற்ற எல்லாக் காரியங்களையும் செய்தாலும் என்னால் அதை பொருட்படுத்தாமல் செல்ல முடியும். அது எந்த ஒரு காரியத்தையும் பொருட்படுத்துகிறதில்லை; ஏனெனில் நான் ஒரு அனுமதி சீட்டை பெற்றுக் கொண்டேன். 447 அவருடைய கிருபை மற்றும் அன்பின் காரணமாக கிறிஸ்து எனக்காக மரித்தப் பிறகு, நான் அவருடைய நீதியானப் பிறகு நான் எப்படி பாவியாயிருக்க முடியும்? எனக்கும் தேவனுக்குமிடையே ஒரு பலி இருக்கும்போது, என்னால் எப்படி பாவஞ்செய்ய முடியும்? என்னால் பாவஞ்செய்ய முடியாது. அதைச் செய்ய முடியாதே. தேவன் என்னை ஒருபோதும் காண்கிறதில்லை; அவர் கிறிஸ்துவைக் காண்கிறார். அவர் என்னுடைய ஸ்தானத்தில் நிற்கிறார். நான் தவறாக எந்தக் காரியத்தையாவது செய்யும்போது, கிறிஸ்து என்னுடைய ஸ்தானத்தை எடுத்துக் கொள்கிறார். நான், “நான் தவறாயிருக்கிறேன். அவர் உண்மையாயிருக்கிறார். கர்த்தாவே, நீர் என்னுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர். நான் அதை உண்மையாய் உணர்ந்து கூறுகிறேனா அல்லது இல்லையா என்பதை நீர் அறிந்திருக்கிறீர். நான் தவறாயிருக்கிறேன். என்னை மன்னியும்” என்று என்னுடைய அறிக்கையை செய்துள்ளேன். தேவன் அதை ஒருபோதும் காண்கிறதில்லை. இயேசுவின் இரத்தம் என்னை எல்லா நேரத்திலும் மூடியுள்ளது. அப்படியிருக்க தேவனால் என்னை எப்படி பார்க்க முடியும்? அவரால் என்னைப் பார்க்க முடியாமலிருக்கும்போது, எப்படி பாவத்தை எனக்கு கணக்கிட முடியும்? நான் அதைச் செய்தவுடனேயே, அது மன்னிக்கப்படுகிறது. [சகோதரன் பிரான்ஹாம் தன்னுடைய விரலை சுடக்குகிறார்—ஆசி.] அது உண்மை. 448 இந்த விதமான ஒரு சிறு துளி சொட்டி குழாய் போன்றதை எடுத்துக் கொண்டு, ஒரு சிறு துளிசொட்டி குழாயில் கறுப்பு நிற மையினை உறிஞ்சி எடுத்து, அதை வெண்மையாக்கும் திரவம் நிறைந்துள்ள தொட்டியில் அதை, அங்கேயே அந்த மையை விட்டுவிட்டுப், பின்னர் அதை மீண்டும் கண்டறிய முயற்ச்சியுங்கள். அது அப்படியே வெண்மையாக்கும் திரவமாகவே மாறிவிடுகிறது. அந்த மையானது வெண்மையாக்கும் திரவமாகிவிடுகிறது. நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால், உங்களுடைய அறிக்கை செய்யப்பட்ட பாவமும் அந்தவிதமாகத்தான் ஆகிவிடுகிறது. உங்களுக்கும், தேவனுக்குமிடையே ஒரு வெண்மையாக்கும் திரவத் தொட்டி உள்ளது, உங்களுடைய பாவம் நீதியாக மாறிவிடுகிறது, ஏனென்றால் ஒரு நீதியான பலி அங்கே உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. கடைசியாக துயரக் காற்று வீசுகின்ற முடிவின் நாளிலே நான் ஆற்றண்டை வரும்போது; என்னை மகிழ்விக்கிற, என் இருதயத்தை களிகூரச் செய்கிற ஒரு சிந்தனை உண்டு, அது நான் யோர்தானை தனியே கடக்க வேண்டியதாயிராது என்பதாம். 449 அது ஒரு நல்லக் காரியமாய் உள்ளது. அது ஒரு நன்மையானக் காரியமாய் உள்ளது. நான் அதைத் தனியேக் கடக்கமாட்டேன். இந்நாட்களில் ஒன்றில் நாம் பாதையின் முடிவிற்கு வரப்போகின்றோம். சூரியனும் பிரகாசிக்க மறுக்கும், அப்பொழுது தேவன் அழைப்பார். 450 அப்பொழுது ஆதாம் அங்கு சென்று, ஏவாளைக் குலுக்கி, “தேனே, இதோ அது உள்ளது. இதுவே விழித்தெழும்பும்படியான நேரமாய் உள்ளது,” என்று கூறுவான். 451 ஏவாள் அங்கு சென்று ஆபேலைப் பற்றிப் பிடித்து, “அன்பே வா. இது விழித்தெழும்படியான நேரமாயுள்ளது” என்று கூறுவாள். ஆபேல் சேத்தைப் பற்றிப் பிடிப்பான். சேத் நோவாவைப் பற்றிப் பிடிப்பான். நோவா…பற்றிப்பிடிக்க…ஓ, அப்படியே தொடர்ந்து செய்வார்கள். தொடர்ந்து ஆபிரகாமிலிருந்து அப்படியே அவர்கள் வருவார்கள். தேவகுமாரன் வரும்போது, அது ஒரு பெரிய குலுக்குதலாய், விழிப்பூட்டுதலாயிருக்கும். நாம் அந்த நாளிலே அவருடைய சாயலில் நிற்போம். 452 இப்பொழுது, நீங்கள் இங்கே பாவஞ் செய்வீர்களேயானால், நீங்கள் அதற்கான அபராதத்தைத் செலுத்தப் போகிறீர்கள். நான்… 453 என்னுடைய சிந்தையில் அப்படியே ஒரு காரியம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறபடியால், நான் அதைக் கூறத்தான் வேண்டும். நான் நான்கு அல்லது ஐந்து முறைகள் அதைக் கூறாமல் அடக்கிப்போட முயற்சித்தேன். ஆயினும் நான் அதைக் கூறியாக வேண்டும். சர்ச் ஆஃப் காட் என்ற சபையில் இங்கே மேய்ப்பனாய் இருந்து வந்த இந்த சகோதரனை எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? சகோதரனே, அந்த இடத்தில் உள்ள அவருடைய பெயர் என்ன? அங்கே வார்காஸ் என்ற இடத்தில் ஊழியம் செய்தவர். ஓ, நீங்கள் எல்லோரும்…முதலில் சர்ச் ஆஃப் காட் என்ற சபை சரியாக இங்கே அந்த மூலையில் தான் இருந்தது. வழக்கமாக ராலேயிஸ் என்ற அந்த இடத்தில் பொருளாதார பற்றாக்குறையின்போது வியாபரம் செய்வார்கள். அவர் ஒரு உண்மையான தேவபக்தியுள்ள, பரிசுத்த மனிதர். சகோதரன் ஸ்மித் அதன் பின்னர் அந்த சபையில் அவருடைய ஸ்தானத்தை எடுத்துக்கொண்டார். நான் இன்னும் ஒரு சில நிமிடங்களில் அவருடைய பெயரைக் கூறவுள்ளேன். அவர் தேவனால் இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதனாய் இருந்தார். 454 நினைவிருக்கட்டும், நீங்கள் திருத்துதலை ஏற்றுக்கொண்டு நடக்கவில்லையென்றால், ஒரு கிறிஸ்தவராயிருக்கிறபடியால், நீங்கள் தவறாக ஒரு காரியத்தைச் செய்யும்போது, தேவன் உங்களை எச்சரிப்பார். அப்பொழுது நீங்கள் அந்த எச்சரிப்பை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால், அவர் உங்களை அப்பொழுது பூமியிலிருந்து எடுத்துப் போடுவார். அதைத்தான் அவர் செய்துள்ளார். 455 வேதாகமத்தில் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அந்தக் கொரிந்தியரின் சபையைப் பாருங்கள். அவர் அவர்கள் யாராயிருந்தனர் என்றும், கிறிஸ்துவுக்குள் அவர்களுடைய நிலைமை என்னவென்பதையும் அவர்களுக்குக் கூறினார். ஆனால் என்ன சம்பவிக்கப்போவதாயிருந்தது என்பதைக் குறித்து அவர் அவர்களை எச்சரித்தார். அவர்கள் தங்களை திருத்திக்கொண்டு, தேவனோடு சரிபடுத்திக் கொண்டனர். 456 இந்த சகோதரன், அவர் ஒரு அற்புதமான சகோதரனாயிருந்தார், அவர் தேவனால் இரட்சிக்கப்பட்ட ஒரு மனிதன் என்று நான் நம்புகிறேன். அவருக்கு வார்காங்ஸ் என்ற இடத்தில் இங்கே ஒரு வேலை கிடைத்தது. அவருடைய ஜனங்களில் சிலர் இங்கே உட்கார்ந்து கொண்டிருந்ததால், நீங்கள் இதை தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள்…என்று நான் நம்புகிறேன். நீங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களா என்பதை நான் அறியேன். ஆனால் ராம்ஸே, சகோதரன் ராம்ஸே. இங்கே சர்ச் ஆஃப் காட் என்ற சபையில் இருந்த சகோதரன் ராமஸே அவர்களை எத்தனை பேருக்கு நினைவிருக்கிறது? நிச்சயமாக உங்களுக்கு நினைவிருக்கும், அற்புதமான் எளிய மனிதன். அவர் வழக்கமாக முன்பெல்லாம் என்னுடைய வீட்டிற்கு வருவார், அப்பொழுது நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து பேசுவோம், நாங்கள் அங்கே அமர்ந்து உரையாடி ஒருவர் கரத்தை ஒருவர் பிடித்துக் கொண்டு அழுவோம்; அவர் ஒரு உண்மையான கிறிஸ்தவர். 457 ஒருநாள் நான் வெளிநாட்டிலிருந்து ஒரு கூட்டத்தை முடித்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது, என்னுடைய காரை பரிசோதித்துப்பார்க்க நான் அங்குள்ள அவரிடத்திற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது சகோதரன் ராம்ஸே, “பில்லி, நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். 458 அதற்கு நான், “சகோதரன் ராம்ஸே அவர்களே, என்னுடைய காரை பரிசோதித்துப் பாருங்கள். எண்ணெய்யை மாற்றுங்கள்” என்றேன். 459 அப்பொழுது அவர், “சரி, அருமை, அற்புதம்” என்றார். மேலும் அவர், “உங்களுக்கு ஒரு அருமையான கூட்டம் உண்டாயிருந்ததா?” என்று கேட்டார். 460 அதற்கு நான், “ஓ, சகோதரன் ராம்ஸே, அது அற்புதமாயிருந்தது” என்றேன். மேலும் நான், “நீங்களும் எப்பொழுதாவது என்னோடு கூட வர நான் விரும்புகிறேன். நீர் என்னோடு வரமாட்டீரா?” என்று கேட்டேன். அப்பொழுது அவர், “பில்லி, நான் இனிமேல் கர்த்தரை சேவிக்கப்போவதில்லை” என்றார். நான் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “நீர் என்னக் கூறுகிறீர்?” என்று கேட்டேன். 461 அவர் அப்பொழுதும் அதேவிதமாக, “நான் இனிமேல் அவரை சேவிக்கப் போவதில்லை” என்று கூறி நடந்து சென்றுவிட்டார். 462 அப்பொழுது நான், “ஓ, அவர் விளையாட்டுத்தனமாக கூறிக்கொண்டிருக்கிறார்” என்று எண்ணினேன். நானும் அங்கே வேறு எங்கோ சென்று விட்டேன். 463 பின்னர் திரும்பிவந்து, என்னுடைய காரை எடுத்துக் கொண்டு வந்துவிட்டேன். நான் வீட்டிற்கு வந்து, “நான் இனிமேல் கர்த்தரை சேவிக்கப்போகிறதில்லை” என்று அவர் கூறினதைக் குறித்து சிந்திக்கத் துவங்கினேன். 464 கர்த்தர் அதை என்னுடைய இருதயத்தில் போட, திரும்பிச் சென்று, மீண்டும் அதை அவரிடத்தில் கேட்கச் சென்றேன். ஆகையால் நான், “மேடா, இங்கேயே இரு” என்றேன். 465 அப்பொழுது நான், உள்ளே சென்று, என்னுடைய காரில் ஏறி, மீண்டும் வார்காங்ஸ் என்ற இடத்திற்கு சென்று அங்கு நிறுத்தினேன், அப்பொழுது நான், “சகோதரன் ராம்ஸே, நான் உங்களை ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்” என்றேன். அதற்கு அவரோ, “சரி, பில்லி, அது என்ன?” என்று கேட்டார். அப்பொழுது நான், “நீர் கொஞ்ச நேரத்திற்கு முன்னர், நீர் கர்த்தரை இனிமேல் சேவிக்கப்போவதில்லை என்று கூறினீர். நீர் என்னை நையாண்டிதானே செய்துகொண்டிருந்தீர், நீர் நையாண்டி செய்து கொண்டிருந்தீரல்லவா?” என்று கேட்டேன். அதற்கு அவரோ, “இல்லையே” என்றார். அப்பொழுது நான், “சகோதரன் ராம்ஸே, நீர்—நீர் அதை அந்த அர்த்ததத்தில் கூறவில்லைதானே” என்றேன். அதற்கு அவரோ, “அந்த அர்த்தத்தில் தான் கூறினேன்” என்றார். அப்பொழுது நான், “நீர் அவரை நேசிக்கவில்லையா?” என்றேன். அதற்கு அவர், “நான் அவரை நேசித்திருந்தால், நான் அவரை சேவிப்பேன். பில்லி, நான் சேவிக்கமாட்டேனா?” என்று கூறி, பின்னர் நடந்து சென்றுவிட்டார். அப்பொழுது நான் எண்ணிப்பார்த்தேன். மேலும், “சகோதரன் ராம்ஸே, நீர் இப்படி கூறுகிறீரே!” என்றேன். அதற்கு அவர் “நான் அதைக் குறித்து இனிமேல் பேச விரும்பவில்லை” என்று கூறிவிட்டார். 466 நான் வீட்டிற்கு சென்று, பின்னர் ஒரு அறைக்குள்ளாகச் சென்று கதவை மூடிக்கொண்டேன். ஓ, நீங்கள் உண்மையாகவே பாரமாயிருப்பதை எப்படி உணருவீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள், அதாவது ஒரு குழந்தையினிடத்திலிருந்து இனிப்புத் தின்பண்டத்தை அல்லது ஏதோ ஒன்றை பிடுங்கிக்கொண்டால், அதற்கு எப்படி இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நான்—நான், “என்ன? அது அவ்வாறு இருக்க முடியாதே. நிச்சயமாகவே சகோதரன் ராம்ஸேவிற்கு ஏதோ ஒரு காரியம் சம்பவித்துள்ளது” என்று எண்ணினேன். 467 அங்கே ஜிம்மி என்னும் பெயர்கொண்ட, கருப்பு நிறத்தைச் சார்ந்த ஒரு சிறு பையன் இருக்கிறான், இங்கே சபைக்கு வருகிறான். அவன் ஒரு காலை ஒருவிதமாக நொண்டி நடப்பதை நீங்கள் அறிவீர்கள். நான் அவனுடைய பெயரை மறந்துவிட்டேன், அவன் அங்கே வார்காங் என்ற இடத்தில் இருந்த பழைய உபயோகமற்ற பொருட்களை அழிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிகிறான். அவன் என்னைச் சந்தித்து, “சங்கை பிரான்ஹாம் அவர்களே, உங்களுக்குத் தெரியுமா? இங்குள்ள இந்த வேதபண்டிதர். ராம்ஸே அவர்களுக்கு என்ன சம்பவிக்கிறது என்பதைக் குறித்து எனக்குத் தெரியாது. நாங்கள் எல்லோரும் இங்கே எங்களுடைய வாயைக் கூடத் திறக்க பயப்படுகின்றோம் என்று அன்றொரு நாள் அவரிடத்தில் கூறினேன். மேலும் நீரோ தேவபக்தியுள்ள ஒரு மனிதனாயிருக்கிறீரே என்று கூறினேன். ஆனால் அவரோ தன்னுடைய பிரசங்கியாருக்கான உரிமச் சான்றிதழை எடுத்து, அதை இரண்டாகக் கிழித்து, அங்கிருந்த குப்பைத் தொட்டிக்கு சென்று, அந்த கிழித்த துண்டுகளை அதில் வீசியெறிந்துவிட்டார், மேலும் அவர், ‘நான் இதனைக் கொண்டு இனிமேல் எந்தக் காரியத்தையும் செய்ய விரும்பவில்லை’ என்று கூறினார்” என்று என்னிடத்தில் கூறினான். அப்பொழுது அவன், “ஹே, திருவாளரே, நீர் அதைச் செய்யக் கூடாது” என்றானாம். அதற்கு அவரோ, “ஓ, ஜிம், நான் கர்த்தரை சேவித்துக் கொண்டிருப்பது முடிந்து போயிற்று” என்றாராம். எனவே அவர் அவ்வாறு கூறிவிட்டுப் போகையில், இவனோ “நீர் அதை அந்த அர்த்தத்தில் கூறவில்லை” என்றானாம். 468 மேலும் அவன், “அவர் உழைப்பாளர் தினத்தன்று வந்து, தன்னுடைய காரின் அடைப்பான்களை சுத்தம் செய்யப் போவதாக என்னிடத்தில் கூறினார்” என்றான். அது அந்த நாள் தான் என்று நான் நம்புகிறேன். மேலும் அவன், “இப்பொழுது, ஜிம், நீ வந்து எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்” என்றும் கூறினான். 469 அப்பொழுது அவன், “நான் சபைக்கு சென்று வந்தபிறகே, நான் உமக்கு உதவி செய்வேன், ஏனென்றால் நான் முதலி சபைக்கு செல்ல வேண்டும்” என்றானாம். 470 அப்பொழுது அவன் சபையிலிருந்து திரும்பிச் சென்ற போது, “திரு.ராம்ஸே அவர்கள் தன்னுடைய காரின் அடைப்பான்களை கழற்றி சுத்தம் செய்து கொண்டிருந்தாரம். அப்பொழுது அவர், ‘ஜிம்மி, ஆற்றுக்கு அப்புறமாக சென்று வர வேண்டும், ஏனென்றால் இங்கே மதுபானக் கடை மூடியுள்ளது. எனவே நீ ஆற்றண்டைச் சென்று எனக்கு ஒரு பெட்டி நிறைய மதுபானம் வாங்கிக்கொண்டு வா’” என்றாராம். 471 அதற்கு அவன், “திரு.ராம்ஸே அவர்களே, நானே அநேகக் காரியங்களில் குற்றவாளியாயிருந்து வருகிறேன். ஆனால் நான் ஒருபோதும் ஒரு கர்த்தருடைய ஊழியக்காரருக்கு ஒரு பெட்டி மதுபானம் வாங்கித்தரும் குற்றவாளியாகவே மாட்டேன்” என்று கூறிவிட்டானாம். மேலும் அவன், “இல்லை ஐயா, நான் அதை ஒருபோதும் செய்யமாட்டேன்” என்று கூறினானாம். 472 அதற்கு அவரோ, “இருக்கட்டும், பரவாயில்லை. போ, ஜிம், அதை வாங்கிக் கொண்டு வா” என்றாராம். 473 அப்பொழுது அவன், “திரு. ராம்ஸே அவர்களே, நான் உங்களுடைய கார் அடைப்பான்களை சுத்தம் செய்கிறேன். ஆனால் உங்களுக்கு மதுபானம் வாங்க வேண்டுமானால், நீங்களே போய் அதை உங்களுக்கு வாங்கிக்கொள்ளுங்கள்” என்றானாம். மேலும் அவன், “நான் அதைப் போன்ற எந்தக் காரியத்தையும் ஒரு கர்த்தருடைய ஊழியக்காரருக்கு வாங்கித் தர ஒரு போதும் போகவே மாட்டேன்” என்றானாம். 474 எனவே ராம்ஸே, ஜிம்மியினுடைய காரை எடுத்துக்கொண்டு, அங்கே ஆற்றுக்கு அப்புறம் சென்று, ஒரு பெட்டி மதுபானத்தை வாங்கிக்கொண்டு திரும்பி வந்து, அதைக் குடித்துக்கொண்டிருந்தாராம். 475 அவர் அவ்வாறு செய்யத் துவங்கினதும், சுகவீனமாகிவிட்டார். பார்த்தீர்களா? தேவனால் அவரிடத்தில் பேச முடியவில்லை. நான் அவரை எச்சரித்தேன், என்னால் முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்தேன். சகோதரன் ஸ்மித் அவர்களும் அவரண்டைச் சென்று அவரை எச்சரித்தார். ஒவ்வொருவரும் அவருக்காக அவர்களால் செய்ய முடிந்த ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முயற்சித்தனர். அப்பொழுதும் அவர் தன்னுடைய மறுப்பையே தெரிவித்தார். என்ன சம்பவித்தது? அவர் சுகவீனமடைந்து மரித்துப் போய்விட்டார். அவர் ஒரு இரட்சிக்கப்பட்ட மனிதனாயிருந்தார் என்பதையே அது காண்பித்தது. தேவனால் அவரை…கீழ்படிதலுக்குள் கொண்டுவர முடியவில்லையென்றால், அப்பொழுது அவர் பூமியிலிருந்து அவரை எடுத்து, பரலோக வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டியவராயிருக்கிறார். அதைத் தான் சரியாக வேதம் உரைத்துள்ளது. அது தான் வேதாகம வாக்குத்தத்தங்களாகும். நீங்கள் திருத்துதலை ஏற்றுக் கொள்ளவில்லையென்றால், அப்பொழுது நீங்கள் பரலோக வீட்டிற்கு வந்தாக வேண்டும். 476 ஆகையால் தேவன் உங்களை இரட்சித்தப் பிறகு, அவரால் உங்களை இழக்க முடியாது, ஆனால் அவரால் உங்களுடைய நாட்களை இங்கே குறைத்துப் போட முடியும், நீங்கள் செய்துள்ள ஒவ்வொரு பாவத்திற்காகவும் அபராதத்தை செலுத்த வைக்க முடியும். ஆகையால், நீங்கள் பாவஞ் செய்தால், நீங்கள் என்ன செய்துள்ளீர்களோ, அதற்கான அபராதத்தை செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். அதை அப்படியே நினைவில் கொள்ளுங்கள். 477 இப்பொழுது, இப்பொழுது கர்த்தர் உங்களோடு இருப்பாராக. சகோதரன் ராம்ஸே இரட்சிக்கப்பட்டிருந்தார் என்றே இன்றிரவு நான் நம்புகிறேன். நான் அதை முற்றிலும் விசுவாசிக்கிறேன். ஆனால் அவர் அப்படியே தேவனுக்கு கீழ்படிய மனதில்லாதிருந்தபோது, அவர் தேவனுக்கு கீழ்படிய மனதில்லாதிருந்தபோது, தேவன் அவரை பரலோக வீட்டிற்கு கொண்டு வர வேண்டியதாயிருந்து. அந்த ஒரு காரியம் மாத்திரமே செய்ய வேண்டியதாயுள்ளது, ஏனென்றால் அது என்னவாயிருந்தது? “பரிசுத்தமாக்கப்பட்ட அந்த இரத்தத்திற்கு நிந்தையையும் அவமானத்தையும் அவர் கொண்டு வருவார்” அது உண்மைதானே? “உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி,” அது சரியாக எபிரெயர் நிரூபம் கூறினதாயிருக்கவில்லையா? புரிகிறதா? அவன் இழக்கப்பட்டுப்போவதென்பது கூடாத காரியம், ஆனால் அவன் அவமானத்தையும், வெட்கத்தையும் கொண்டு வருவான், ஆகையால் தேவனை அவனை பூமியிலிருந்து எடுத்து, பரலோக வீட்டிற்கு அழைத்து வருவார். அதுவே சரியாக சம்பவித்திருந்தது. நாம் நம்முடைய தலைகளை அப்படியே சற்றுநேரம் ஜெபத்திற்காக வணங்கியிருக்கையில், கர்த்தர் இப்பொழுது ஆசீர்வதிப்பாராக. 478 இப்பொழுது, மகா பரிசுத்தமும், கிருபையுமுள்ள பிதாவே, நீர் எங்களை விட்டு விலகுவதுமில்லை, எங்களை கைவிடுவதுமில்லை என்று நாங்கள் பெற்றுள்ள வாக்குத்தத்தத்திற்காக நாங்கள் உமக்கு உண்மையாகவே நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். நீர் ஜீவிய காலமெல்லாம் எங்களோடு வருவதாகவும், மரணத்திலும் நீர் எங்களுக்கு அருகில் இருப்பதாகவும் நீர் வாக்களித்திருக்கிறீர். நாங்கள் நித்திய ஜீவனை உடையவர்களாயிருப்போம் என்று நீர் வாக்களித்தீர். நீர் அதை எங்களுக்கு இலவசமாய் அளித்தீர். நாங்கள் அதை ஒருபோதும் இழந்து போக முடியாது. “என்னிடத்தில் வருகிற யாவருக்கும் நித்திய ஜீவன் உண்டு.” அது நித்திய ஜீவனாயிருக்குமானால், அதற்கு முடிவே கிடையாது, நீர் கடைசி நாளில் எங்களை எழுப்புவதாக வாக்களித்தீர். நாங்கள் இதற்கு மிகவும் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். உம்முடைய வார்த்தை எங்களுக்கு இதைப் போதிக்கிறது என்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். அது எங்களுக்கு ஒரு நிச்சயமான நம்பிக்கையைத் தருகிறது. அது எங்களுடைய பிதா அன்பாயிருக்கிறார் என்பதை நாங்கள் அறிந்துகொள்ளும்படிச் செய்கிறது. அவர் எங்களை நேசிக்கிறார், அவர் எங்களை தெரிந்துகொண்டார். நீர், “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, ஆனால் நான் உங்களைத் தெரிந்துக்கொண்டு, உங்களை நியமனஞ் செய்தேன்” என்றீர். பிதாவே, நீர் அவ்வண்ணம் செய்துள்ளபடியால், நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நித்திய ஜீவனுக்கென்று முன்னியமிக்கப்பட்டவர்களாய் இன்றிரவு அநேகர் அமர்ந்து கொண்டு, இயேசு கிறிஸ்துவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆவியின் கனிகளாக, “தயவு, சாந்தம், தாழ்மை, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம்” ஆகியவை அவர்களுடைய ஜீவியத்தை பின் தொடருகின்றன. நாங்கள் அதற்காக நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். 479 பிதாவே, இன்றிரவு இங்குள்ள யாரேனும், அந்தக் கனிகள் அவர்களை பின் தொடரும்படி பெற்றிருக்கவில்லையென்றால், அவர்களுக்காக நாங்கள் ஜெபிக்கிறோம். ஆனால் அவர்கள் ஏதோ ஒரு நம்பமுடியாத காரியத்தின் மேல் சார்ந்துகொண்டிருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் ஏதோ ஒருநாள் கிளர்ச்சியடைந்தனர், ஏனென்றால், அவர்கள் உணர்ச்சிவசப்பட்டனர். அவர்கள் நலமாக உணர்ந்தனர், அவர்கள் சத்தமிட்டிருக்கலாம், அவர்கள் அநேகக் காரியங்களைச் செய்திருக்கலாம். ஆனால் பிதாவே, அவர்கள் ஆவியின் கனியைப் பெற்றிருக்கவில்லையென்றால், நாளுக்கு நாள் அது அவர்களை நிலையான அன்பிலும், அவர்களுடைய சத்துருக்களை மன்னிப்பதிலும், அவர்களுடைய தவறுகளை சரி செய்துகொள்வதிலும், சமாதானமாகவும், அன்பாகவும் ஜீவிப்பதிலும், ஒருவரிடத்திலொருவர் இனிமையாயும், தயவாயுமிருப்பதிலும், சபைக்கான ஒரு வைராக்கியத்திலும், கிறிஸ்துவுக்காகவும், அவருடைய பிள்ளைகளுக்குமான ஒரு சபையிலும் அந்தக் கனிகள் அவர்களைப் பின் தொடர வில்லையென்றால், ஓ, நித்திய தேவனே, அவர்களை மன்னியும். அவர்கள் சபையின் அங்கத்தினர்களாயிருந்தாலும், பூமிக்குரிய சரீரத்தின் அங்கத்தினர்களாயிருந்தாலும், அவர்கள் இப்பொழுது அந்த மாம்சபிரகாரமான, செத்த கிரியைகளை ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு, பூரணராகும்படிக்கு தொடர்ந்து செல்வார்களாக. கர்த்தாவே, அதை அருளும். அவர்கள் அந்த பரிபூரணமானவரிடத்திற்கு வந்து, அவர் ஒரு குற்றமுள்ள மனிதனுக்காகவும், ஒரு குற்றமுள்ள ஸ்திரீக்காகவும் ஒரு பரிபூரண பலியாக நிற்கும்படிக்கு, தங்களுடைய பாவங்களுக்கான தங்களுடைய கிருபாதாரபலியான அவரை ஏற்றுக்கொள்வார்களாக. அவர்கள் என்றென்றைக்குமாய் ஜீவிக்கும்படியான தேவனுடைய பிரசன்னத்திற்குள்ளாக வரும்வரையில் அவருடைய கிருபையின் அன்பையும், சமாதனத்தையும் அவர்களுக்கு அளியும். பிதாவே, அதை அருளும். நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில்; 480 யாரேனும் ஒரு உண்மையான அன்பின் முழுமையான உண்மையான இருதயத்திற்காக, அதாவது நீங்கள் எழும்பி உங்களுடைய கசப்பான சத்துருவிடம் நடந்து சென்று, உங்களுடைய கரங்களை அவரைச் சுற்றிப் போட்டு, “சகோதரனே, நான் உங்களுக்காக ஜெபிப்பேன். நான் உங்களை நேசிக்கிறேன்” என்று கூறும்படியாக, மாம்சபிரகாரமான வாழ்க்கையின் நியமங்களை, ஸ்நானங்களைக் குறித்த, உணர்ச்சிவசப்படுத்துதல்களைக் குறித்த, அதைப்போன்ற ஒரு சிறிய மாம்சபிரகாரமான காரியங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் ஒரு உண்மையான அன்பின் அனுபவத்திற்காக நீங்கள் இந்த மாம்சபிரகாரமான காரியங்களின் அனுபவத்தை மாற்றிக் கொள்ள விரும்பினால், நீங்கள் உங்களுடைய கரத்தை தேவனண்டை உயர்த்துவீர்களா? அதாவது, “தேவனே, இன்றிரவு என்னை ஏற்றுக்கொள்ளும், நான் இருக்க வேண்டியவிதமாக என்னை உருவாக்கும்” என்று கூறுங்கள். நான் உங்களுக்காக இங்கே பிரசங்கபீடத்திலிருந்தே ஜெபிக்கவுள்ளேன். நீங்கள் ஜெபத்தை வாஞ்சிப்பீர்களாக? உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். 481 ஐயா, அங்கே பின்னால் உள்ள உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு யாரேனும் இருக்கிறீர்களா? ஐயா, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் இங்கே உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னால் உள்ள சிறு பெண்மணியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. “தேவனே என்னை சமாதனமுள்ளவனாக்கும்படி நான் வேண்டிக்கொள்வேன்.” நீங்கள்…நீங்கள் உண்மையாகவே சீற்றங் கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் என்ன செய்வதென்று அறியாதவர்களாயிருக்கிறீர்களா? நீங்கள் சந்தேகப்படுகிறீர்களா? நீங்கள் ஏறக்குறைய முன்னும் பின்னும் அலைக்கழிக்கப்படுகிறீர்களா? அது உண்மையாகவே சரியா அல்லது இல்லையா என்று நீங்கள் வியப்புறுகின்றீர்களா? நீங்கள் கிறிஸ்துவண்டை வரும்போது, நீங்கள் முழு உறுதியுடன் வருகின்றீர்களா, முழு அன்பின் இருதயத்தோடு வருகின்றீர்களா? நீங்கள், “அவர் என்னுடைய பிதா என்பதை நான் அறிவேன்” என்று கூறி, ஒரு பயமுமில்லாமல் அவரண்டை நடந்து செல்லுவீர்களா? 482 ஆக்கினைத்தீர்ப்பேயில்லை, நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் அதை அறிவீர்கள். நீங்கள் நேசித்துக்கொண்டும், நீங்கள் மன்னித்துக்கொண்டும், நீங்கள் தயவாயும், நீங்கள் சமாதானமுள்ளவர்களாயும், நீங்கள் சாந்தமாயுமிருக்கிற உங்களுடைய வாழ்க்கையைக் கவனித்துப் பாருங்கள். பரிசுத்த ஆவியின் இந்த எல்லா கனிகளும் உங்களுடைய ஜீவியத்தை நாளுக்கு நாள் பின்தொடருகின்றன. நீங்கள் எந்தக் காரியத்தையாவது தவறாக செய்தவுடனே, “ஓ, என்னே” என்பீர்கள். அதாவது, “நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள்” என்று அப்படியே அது உங்களுடைய சிந்தையில் தோன்றியவுடனே, நீங்கள் அப்பொழுதே அதை உடனடியாக சரி செய்துகொள்ளுகிறீர்கள். பின்னர் போய் அதைச் சரிசெய்து கொள்ளலாம் என்று அடுத்த நிமிடம் வரை காத்திருப்பதில்லை. நீங்கள் அவ்வாறு சரிசெய்துகொள்ளவில்லையென்றால், நீங்கள் கிறிஸ்துவின் ஆவியை பெற்றிருக்கவில்லை. நீங்கள் ஒரு நல்ல ஸ்திரீயாக இருக்கலாம், நீங்கள் ஒரு நல்ல மனிதனாக இருக்கலாம். நீங்கள் சபையில் நல்ல எண்ணமுடையவராயிருக்கலாம், நீங்கள் அக்கம்பக்கத்திலுள்ளவர்களிடத்தில் நல்ல எண்ணமுடையவராயிருக்கலாம், ஆனால் நீங்கள் அந்த பூரணமாகுதலண்டைக்கு, நீங்கள் கிறிஸ்துவில் முழுமையான நம்பிக்கைக் கொண்டிருக்கிற அந்த ஸ்தானத்திற்கு சென்றுள்ளீர்களா? இதனைக் கொண்டு உனக்கு முத்திரை அளிக்கிறேன். “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. அதன்பின்னரே தேவன் அவனுக்கு ஒரு உறுதிபடுத்துதலாக விருத்தச்சேதனம் என்னும் முத்திரையை அளித்தார்.” 483 இப்பொழுது நீங்களோ, “நான் தேவனை விசுவாசிக்கிறேன். நான் ஒரு அறிக்கையை செய்துவிட்டேன்” என்று கூறலாம். ஆனால் நீங்கள் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நிரூபிக்கும்படியாக, உங்களுடைய ஜீவியத்தை ஆதரிக்கும்படியாக அன்பையும், சந்தோஷத்தையும், ஆவியின் கனிகளையும் உடைய பரிசுத்த ஆவியின் முத்திரையை உங்களுக்கு தேவன் அளித்தாரா? அவர் அதை செய்திருக்கவில்லையென்றால், அப்பொழுது அவர் உங்களுடைய விசுவாசத்தை இன்னும் அடையாளங்கண்டு கொள்ளவில்லை. நீங்கள் வெறுமென ஒரு அறிக்கையை செய்துள்ளீர்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏதோக்காரியம் தவறாயுள்ளது. அப்படியானால் நீங்கள் அவரை ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? நாங்கள் ஜெபிப்பதற்கு முன்பு, வேறு யாரேனும் இருந்தால் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். 484 வாலிபப் பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அங்கே பின்னால் உள்ள உங்களையும் கூட தேவன் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி. நாங்கள் ஜெபிப்பதற்கு முன்னர் வேறு யாரேனும் இருக்கிறீர்களா? சரி. அங்கே பின்னால் உள்ள சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. என் சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. சுமார் பத்து, பதினைந்து கரங்கள் மேலே உயர்த்தப்பட்டிருக்கின்றன. இப்பொழுது நாம் ஜெபம் செய்வோமாக. 485 ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தாவே, அவர்கள் தங்களுடைய இருக்கையில் பீடத்தை கண்டறிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய இருக்கையிலே, அவர்கள் இப்பொழுது எங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்களோ, அங்கேயே அவர்கள் தவறாய் இருக்கிறார்கள் என்று அவர்களுடைய இருதயங்களில் நீர் பேசினீர், அவர்களுடைய இருக்கைகளிலேயே, அவர்கள், “இயேசுவைப் போலிருக்க வேண்டும் என்ற ஒரு வாஞ்சையை” அவர்களுடைய இருதயத்தில் நீர் வைத்திருக்கிறீர். 486 அவர்கள் தங்களுடைய ஜீவியம் மாற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் சாந்தமாயும், தாழ்மையாயுமிருக்க விரும்புகிறார்கள். அவர்கள் கனிவாயும், முழுமையாக பொறுமையாயிருக்க வேண்டுமென்று விரும்புகின்றனர். அவர்கள் நீடிய பொறுமையும், சகிப்புத்தன்மையுமுடையவர்களாயிருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்கள் கிறிஸ்தவரைப் போன்றிருக்க வேண்டும் என்றும், அவர்கள் வீதியில் செல்லும்போது, “அந்த மனிதன் உண்மையாகவே ஒரு கிறிஸ்தவன். அந்த ஸ்திரீ உண்மையாகவே ஒரு கிறிஸ்தவள். ஓ, அவர்கள் மிகுந்த கனிவும், சாந்தமும், இனிமையுமான ஜனங்கள் என்று உலகம் கூறுமளவிற்கு கிறிஸ்துவைப் போலிருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். 487 கர்த்தாவே, இன்றிரவு அவர்கள் அந்த அனுபவத்தை ஏற்றுக் கொள்ள அருள்புரியும். அவர்கள் ஒருபோதும் தங்களுடைய சபைத் திறமையின் பேரில் சார்ந்து கொண்டிராமல், தங்களுடைய துன்பங்களை எந்த சபையின் மேலும், எந்த ஸ்தாபனத்தின் மேலும் வைக்கும்படி சாராதிருப்பார்களாக. தங்களுடைய உணர்ச்சிவசப்படுத்துதல்கள் மேலும், எந்த நம்பமுடியாத காரியத்தின் மேலும், எப்படிப்பட்ட உணர்ச்சிப் பூர்வமானதின் மேலும், ஏதோக் காரியம் சம்பவித்துள்ளது என்பதன் பேரில் சாராதிருப்பார்களாக. அவர்கள் சத்தமிடலாம், அந்நிய பாஷையில் பேசலாம், அல்லது வேறு எந்தக் காரியம் வேண்டுமானாலும் செய்யலாம். 488 ஓ நித்திய தேவனே, அவர்கள் அதன் பேரில் பரலோகத்திற்கு செல்லும்படி நம்பிகை வைக்க முயற்சிக்காமலிருப்பார்களாக. ஏனென்றால் அது அநேக சமயங்களில் மிக மோசமாய் தவறிப்போவதை நாங்கள் கண்டுள்ளோம். நீர் அது தவறிப்போகும் என்று கூறினீர், “அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், தீர்க்கதரிசங்களானாலும் ஒழிந்து போம். அறிவானாலும் ஒழிந்துபோம். ஓ, இந்த எல்லாக் காரியங்களும், வரங்களும் கூட, சுகமளிக்கும் அற்புதங்களும் கூட, அவைகள் ஒழிந்து போய்விடும். அந்த தெய்வீக அன்பு மாத்திரமே நீடித்திருக்கும்” என்றீரே. 489 தேவனே அவர்களுடைய இருதயத்தில் அதை சிருஷ்டியும், பரிசுத்த ஆவியே கனிகளைப் பிறப்பிக்கிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்களாக. கர்த்தாவே, நாங்கள் உம்பேரில் காத்திருக்கையில், அதை இப்பொழுதே செய்யும், ஏனென்றால் நாங்கள் இதை இயேசுவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 490 [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] அக்கினிப் பந்துகள் பறக்கின்றன, கட்டிடத்தினூடாக காட்டுப்புறாக்கள் முன்னும் பின்னுமாக செல்லுவதை காண்பதும், கிறிஸ்து முள்முடியோடு தம்முடைய கரங்களில்…வடுக்களோடு வருவதை காண்பதும், அவருடைய…ஓ, அது அந்திக் கிறிஸ்துவினுடைய அமைப்பு என்று உங்களுக்குத் தெரியுமா? அவர், “இந்தக் காரியங்கள் சம்பவிக்கத் துவங்கும்போது, அப்பொழுது மேல் நோக்கிப் பாருங்கள், உங்களுடைய மீட்பு சமீபமாயுள்ளது” என்றார். ஆகையால் அந்தக் காரணத்தினால்தான் என்னால் முடிந்த ஒவ்வொரு நிமிடமும் சபையை தொடர்ந்து பின்தொடர்ந்து, நீங்கள் உறுதியானதை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். சகோதரன் நெவில் எப்பொழுதுமே நம்மோடிருக்கமாட்டார். சகோதரன் நெவில் ஒரு நல்ல, ஆரோக்கியமான சுவிசேஷ போதகர் என்றே நான் நம்புகிறேன். எந்தவிதமான உபதேசம் இந்தப் பிரசங்கப் பீடத்திலிருந்து எழும்பும் என்பதை நாங்கள் அறியோம். அது இங்கிருந்து எழும்பும்போது, “என் ஆடுகள் என் சத்தத்தை அறிந்துகொள்ளும்.” அந்த வார்த்தையோடு தரித்திருங்கள். அந்த வார்த்தையை விட்டு நீங்கள் ஒருபோதும் விலகிச் செல்லாதீர்கள். நீங்கள் சரியாக அதனோடு தரித்திருங்கள். கிறிஸ்து உங்களை விடுதலையாக்கியிருக்கிற அந்த சுயாதீனத்தில் நீங்கள் உறுதியாய் நில்லுங்கள். அந்த எல்லா அடிமைத்தனத்தின் நுகங்கள் போன்றவற்றில் சிக்கிக்கொள்ளவேண்டாம். உறுதியாக நில்லுங்கள், சுயாதீனமாக நில்லுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். நாம் இந்த உலகத்தில் எந்தக் காரியத்தைக் குறித்தும் பயப்பட வேண்டியதில்லை. 491 நீங்கள் எப்பொழுதுமே வியப்புற்றுக்கொண்டிருக்கிறீர்கள். ஜனங்கள் ஜெபிக்கப்படுவதற்காக வருவதை நான் கவனிக்கையில், அவர்கள் வரிசையில் ஒரு பக்கமாக அஞ்சியொதுங்குவார்கள். அடுத்த முறை அவர்கள் ஒரு சுகமளிக்கும் கூட்டத்தைப் பார்க்கும்போது, அவர்கள் இந்த வரிசைக்குள் செல்வார்கள், அவர்கள் இந்த வரிசைக்குள் செல்வார்கள். நான் அவர்களை கண்டனம் செய்கிறதில்லை. அவர்கள் நோய்த் தீர்வினைக் கண்டறிய முயற்ச்சித்துக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் அவர்கள் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறார்கள். தேவன் எதைச் செய்யக் கூடாது என்று கூறினாரோ அதற்கு எதிர் மாறாக நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். புரிகிறதா? நீங்கள் கிருபையின் சிங்காசனத்தண்டை தைரியமாக நடந்து செல்லும்போது, “நீங்கள் கேட்டுக்கொண்டதை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்” என்று விசுவாசியுங்கள். அதனோடு தரித்திருங்கள். அந்த விதமாகத்தான் அது செய்யப்படுகிறது; வெறுமென ஒரு ஊழியத்திலிருந்து மற்றொரு ஊழியத்திற்கு, ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு, ஒரு பிரச்சார கூட்டத்திலிருந்து மற்றொரு பிரச்சார கூட்டத்திற்கு தாவிச் செல்வது அல்ல. 492 ஏன்? அவர்கள் ஒரு கூட்ட முட்டாள்தனமானவர்களைப் போல இந்த சுகமளிக்கும் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினர். நிச்சயமாகவே, அவர்கள் நடத்துகின்றனர். அது அங்கே அறிவாற்றல் கொண்ட ஜனங்களுக்கான ஒரு இடமாக மாறி, அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்து, அவர்கள் இவை எல்லாவற்றையுங் குறித்து ஆச்சரியப்படுகிறார்கள். தேவனுக்கு அந்தக் காரியங்கள் வேண்டியதில்லை. சுகமளித்தல் பெரிய பிரச்சார கூட்டங்களில் இருக்க வேண்டியதில்லை. சுகமளித்தல் ஒவ்வொரு உள்ளூர் சபையிலும் இருக்க வேண்டும், இந்த எல்லா வரங்களும் கிரியை செய்ய வேண்டும். ஆனால் அந்த வரங்களை விதைக்கப் போகாதீர்கள். வரத்திற்கு எந்தக் கவனமும் செலுத்த வேண்டாம். தேவன் உங்களை ஏதோ ஒன்றிக்காக உபயோகிக்க வேண்டுமென்றால், அவர் அதைச் செய்வார். ஆனால் வரங்களை அளிப்பவரையே நோக்கிப் பாருங்கள். 493 மார்ட்டின் லூதர் ஒரு முறை அந்நிய பாஷையில் பேசிய பிறகு, அவர் ஏன் அதைப் பற்றிப் பிரசங்கிக்கவில்லையென்று அவரிடம் கேட்கப்பட்டது. அப்பொழுது அவர், “நான் அதை பிரசங்கித்திருந்தால், என்னுடைய ஜனங்கள் வரத்தை அளிப்பவரை நாடுவதற்கு பதிலாக வரத்தையே நாடிச் செல்வார்கள்” என்று கூறினார். அது உண்மை. 494 மூடி அவர்கள் ஒரு முறை பேசத் துவங்கினபோது, அவர் மிகுந்த ஆவியின் ஏவுதலின் கீழ் பிரசங்கித்துக் கொண்டிருந்தபோது, அவர் அந்நிய பாஷையில் பேசினார். அப்பொழுது அவர், “தேவனே, முனகின முட்டாள்தனமான வார்த்தைகளுக்காக என்னை மன்னியும்” என்றார். நிச்சயமாக. பார்த்தீர்களா? அவர்கள் அந்தக் காரியங்களை உடையவர்களாயிருந்தனர். நாம் அந்தக் காரியங்களை விசுவாசிக்கிறோம், ஆனால் அவைகள் அவைகளுடைய ஸ்தானத்தில் வைக்கப்பட வேண்டும். அவைகள் அத்தாட்சிகளாக வைக்கப்பட வேண்டியதில்லை. 495 “பரிசுத்த ஆவியின் அத்தாட்சியாக” வேதத்தில் எந்த ஒரு காரியமும் விடப்பட்டிருக்கவில்லை, ஆவியின் கனிகள் மாத்திரமே விடப்பட்டிருக்கின்றன. இயேசு அவ்வண்ணமாகக் கூறினாரா என்ற எந்த இடத்தையாவது கண்டறியுங்கள். ஆம் ஐயா. பரிசுத்த ஆவியின் அத்தாட்சி உங்கள் ஆவியின் கனியாய் உள்ளது. இயேசு, “அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்” என்று அவ்வண்ணமாகக் கூறினார். “ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சமாதானம், தயவு, சாந்தம் என்பதாகும். சத்துருவின் கனியோ பகைமை, வெறுப்பு, துர்குணம், சண்டை முதலியனவாம், அதுவே சத்துருவின் கனியாயுள்ளது.” ஆகையால் நீங்கள் ஜீவித்துக்கொண்டிருக்கிற விதத்தைக் கொண்டும், நீங்கள் தேவனோடு எங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கொண்டுமே உங்களை நியாயந்தீர்க்க முடியும். உங்களுடைய முழு இருதயமும் அவரோடு அன்பில் இருந்தால், நீங்கள் அவரை நேசித்து கனிவாயிருந்தால், அவரோடு அனுதினமும் ஜீவித்தால், அப்பொழுது நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுகிறீர்கள். அவ்வாறு ஜீவிக்கவில்லையென்றால், வேறு விதமாகக் கூறினால், நீங்கள் வெறுமென ஒரு கிறிஸ்தவன் என்று பாவனையாக நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். அது உண்மை. எல்லா மாம்சபிரகாரமான ஆள்மாறாட்டங்களும் நிச்சயமாகவே வெளிப்படுத்தப்படும். நாம் அதை அறிவோம். 496 ஆகையால் அந்த விதமான ஒரு ஜீவியம் ஜீவிக்கவே வேண்டாம், நீங்கள் அந்தவிதமாக ஜீவிக்க வேண்டியதில்லை. மேலே உள்ள ஆகாயம் முழுவதும் நன்மையினாலும் உண்மையினாலும் நிறைந்திருக்கும்போது, நீங்கள் ஏன் ஒரு மாற்றுப் பொருளை ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறீர்கள்? நிச்சயமாக. நான் தேவனை ஏற்றுக் கொள்வேனாக, அதுதான் எனக்குத் தேவை. ஆமென். 497 இப்பொழுது யாரேனும் ஜெபிக்கப்படுவதற்காக வந்தார்களா? நீங்கள் வந்திருந்திருந்தால், உங்களுடைய கரத்தை உயர்த்துங்கள். நாம் இந்தக் காலையில் சுகமளிக்கும் ஆராதனையை நடத்தியிருந்தோம். நான் நினைக்கிறேன் அப்பொழுது…இந்தப் பெண்மணி இங்கிருந்தாரா? சரி, சகோதரியே, அப்படியானால் நீங்கள் முன்னோக்கி வருவீர்களா? நம்முடைய சகோதரன், மூப்பர், இங்கே இப்பொழுது எண்ணெய் பூசுவதற்காக முன்னே வாருங்கள். [ஒலி நாடாவில் காலி இடம்—ஆசி.] …என்மேல் பிரகாசியும். ஓ, என் மேல் பிரகாசியும், கர்த்தாவே என்மேல் பிரகாசியும், கலங்கரை விளக்கத்தினின்று ஒளியானது என்மேல் பிரகாசிக்கட்டும். 498 அவர் அற்புதமானவராயில்லையா? நாம் இப்பொழுது நம்முடைய தலைகளை உண்மையாகவே அமைதியாகத் தாழ்த்துவோமாக. மீண்டும் என்மேல் பிரகாசியும். இப்பொழுது, இப்பொழுது ஒவ்வொருவரும், “பிரகாசியும்…” என்ற அந்தப் பாடலைப் பாடுவோம். அப்படியே அமைதியாயிருந்து கொண்டே உங்களுடைய ஆத்துமாவில் அவரை இப்பொழுது ஆராதியுங்கள், பாருங்கள். சுகமளிக்கும் ஆராதனை நடைபெறவிருக்கிறது. செய்தி முடிந்துவிட்டது. நாம் ஆராதிப்போமாக. கலங்கரை விளக்கத்தினின்று ஒளியானது என்மேல் பிரகாசிக்கட்டும்; ஓ, என்மேல் பிரகாசியும், கர்த்தாவே, என்மேல் பிரகாசியும். களங்கரை விளக்கத்தினின்று ஒளியானது என்மேல் பிரகாசிக்கட்டும். இயேசுவைப் போலிருக்க, இயேசுவைப் போலிருக்க, ஓ, புவியில் நான் அவரைப் போன்றிருக்க வாஞ்சிக்கிறேன்; பூமியிலிருந்து மகிமை வரையிலுமுள்ள ஜீவயாத்திரை முழுவதும், நான் அவரைப் போலிருக்க வேண்டும் என்று மாத்திரமே வேண்டுகிறேன். நாம் ஒளியில் நடப்போம், அப்பேர்ப்பட்ட ஒரு அழகான ஒளி, இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கின்ற அந்த இடத்திற்கு வாருங்கள்; இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கிற இயேசுவே, உலகத்தின் ஒளி. ஒளியின் பரிசுத்தவான்களே நீங்கள் எல்லோரும் அறிவியுங்கள், இயேசுவே, உலகத்தின் ஒளி, அப்பொழுது பரலோக மணிகள் ஒலிக்கும், இயேசுவே, உலகத்தின்… நாங்கள் உம்மை ஆராதிக்கையில், கர்த்தாவே, எங்களை எற்றுக்கொள்ளும். நாம் ஒளியில், அழகான ஒளியில் நடப்போம், இரக்கத்தின் பனித்துளிகள் பிரகாசமாயிருக்கின்ற அந்த இடத்திற்கு வாருங்கள்; இரவும் பகலும் நம்மைச் சுற்றிப் பிரகாசிக்கும் இயேசுவே உலகத்தின் ஒளி. 499 அந்த தூய்மைப்படுத்துதலை நீங்கள் நேசிக்கவில்லையா? நீங்கள் நலமாக உணருகிறீர்களா? உங்களுடைய கரத்தை உயர்த்திச் சொல்லுங்கள். அந்த பண்டைய முறையிலான பாடல்கள், பண்டைய கால கீர்த்தனைகளைக் குறித்து ஏதோ ஒரு காரியம் உண்டு, கிறிஸ்தவ சபைகளில் உள்ள இந்த எல்லா புதிய உலகப் பிரகாரமான பாடல்களைக் காட்டிலும் நான் அந்தப் பழைய பாடல்களையே விரும்புகிறேன். நான் அந்தப் பண்டையக் காலத்தை விரும்புகிறேன், எனக்குப் பிடிக்கும். இயேசுவே என்னை சிலுவண்டை வைத்துக்கொள்ளும், (என்னே!) அங்கே விலையேறப்பெற்ற ஒரு ஊற்று உண்டு, யாவருக்கும் இலவசமாய், ஒரு சுகமளிக்கும் ஓடையாய், கல்வாரி ஊற்றிலிருந்து பாய்ந்தோடுகிறது. நதிக்கு அப்பால் ஆனந்த பரவசமடைந்த என் ஆத்துமா இளைப்பாறுதலைக் காணுமட்டும் ஓ, என் மகிமை என்றென்றுமாய் சிலுவையிலே, சிலுவையிலேயே இருக்கட்டும். 500 அது பாடப்பட்டுக் கொண்டிருக்கும்போது, என்னால் பார்ப்பதற்கு இனிமையாக எளிமையாய் உலகத்திலிருந்து போய்விடக் கூடும். உங்களால் முடியாதா? [சபையோர், “ஆமென்” என்கின்றனர்.—ஆசி.] எவ்வளவு அற்புதமாயுள்ளது! அவையாவும் தீர்த்து வைக்கப்பட்டிருக்கிறதா? அவையாவும் மேலே நான் தீர்த்துவைத்துவிட்டதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் சந்தோஷமாயிருக்கவில்லையா? [“ஆமென்.”] நீண்ட காலத்திற்கு முன்னமே பழைய கணக்கு முழுமையாக தீர்த்துவைக்கப்பட்டாயிற்று. நான் அவரிடத்தில், “கர்த்தாவே, எனக்கு ஆற்றண்டை எந்தத் தொல்லையும் வேண்டாம். நான்—நான் அதைக் குறித்து இப்பொழுதே நிச்சயமுடையவனாயிருக்க விரும்புகிறேன்” என்று கூறினேன். நான் அவரை அறிந்துகொள்ள விரும்புகிறேன். நான் அவரை அறிந்து கொள்ள விரும்புகிறேன். 501 ஒரு பெரிய, இருண்ட குழி நம் ஒவ்வொருவருக்கு முன்பாகவும் வைக்கப்பட்டுள்ளது. நாம் அந்த வழியையே நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் நம்முடைய இருதயம் துடிக்கும் போது, நாம் அதற்கு மிக நெருக்கமாகவே நெருங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நான் அங்கு சென்றடையும்போது, நான் ஒரு கோழையைப் போல நிம்மதியின்றி கூக்குரலிட விரும்பவில்லை, நான், “அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நான் அவரை அறிந்துள்ளேன்” என்று இதை அறிந்தவனாய், அவருடைய நீதியின் வஸ்திரத்தில் என்னைச் சுற்றிக் கொண்டு, அதற்குள் பிரவேசிக்க விரும்புகிறேன். அதாவது அவர் கூப்பிடுகிறபோது, அப்பொழுது நான் மரித்தோர் மத்தியிலிருந்து வெளியே வருவேன்.என்னே! 502 என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது, நாம் அந்தப் பாடலை இப்பொழுது பாடுவோமாக. என் விசுவாசம் உம்மையே நோக்கிப் பார்க்கிறது, நீரே கல்வாரியின் ஆட்டுக்குட்டி, ஓ, தெய்வீக இரட்சகரே. நான் ஜெபிக்கையில் இப்பொழுது எனக்கு செவிகொடும், என்னுடைய பாவங்கள் எல்லாவற்றையும் போக்கிவிடும், உம்மைவிட்டு என்றுமே விலகிப் போகாதபடி என்னைக் காத்துக்கொள்ளும். 503 இப்பொழுது மகத்தான போதகரே, நீர் உம்முடைய மகா ஆச்சரியமான வார்த்தையில் எங்களுக்குப் போதித்திருக்கிறபடியால், நாங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ளுகிற எங்கள் இருதயங்கள் எடுத்துக்கொள்ளப்படுதலுக்குரிய கிருபையோடு அப்படியே நடுங்குகின்றன. எங்களுடைய கர்த்தராகிய இயேசுவின் எல்லா நன்மையினூடாகவும், எங்களை அழைத்து, அவருடைய இரத்தத்தில் எங்களை கழுவி, அவர் எங்களுடைய பாவங்களை ஏற்றுக்கொண்டபடியால், தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக எங்களை மாசற்றவர்களும், குற்றமற்றவர்களுமாய் நிறுத்தியுள்ளார். எங்களிடத்தில் பாவமே இல்லை. “தேவனோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டார்.” ஓ, நாங்கள் எப்படியாய் அவரை, அந்த மகத்தான தேவாட்டுக் குட்டியை நேசிக்கிறோம்! 504 பிதாவே, மற்றவர்களும் கூட அவரை அறிந்து, நேசிக்கும்படியாக நாங்கள் அவர்களுக்கு கூறும்படியான தைரியமான வார்த்தைகளை எங்களுக்கு நீர் தரவேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம், ஏனென்றால் அவர் அவர்களை நேசிக்கிறார். இந்தக் கிருபையை எங்களுக்குத் தாரும். பிதாவே, தேவனுடைய இராஜ்ஜியத்திற்குள்ளாக வந்துள்ள, அந்த புதியதாய் பிறந்துள்ள குழந்தைகளுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். அவர்கள் எங்காவது ஒரு நல்ல சபையை தங்களுக்கு சொந்தமாக கண்டறிந்து, இந்த பழைய சரீரத்தின் தொடர் வேதனைகள், வலிகளிலிருந்து மரணம் அவர்களை விடுதலையாக்கி, அவருக்கு முன்பாக மாசற்றவர்களும், குற்றமற்றவர்களுமாய் மறுமையில் நித்திய ஜீவனோடு நிற்கும் வரையில் அந்த சபையில் உம்மை சேவிப்பார்களாக. நாங்கள் இதை அவருடைய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம். ஆமென்.